பிளம்ஸ் பழங்கள்
நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ் பழங்கள், ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும் பிளம்ஸ் கனிகளின் உள்ள சத்துக்களை பார்ப்போம்...
* பிளம்ஸ் பழங்கள் குறைந்த ஆற் றல் தரக்கூடியது. 100 கிராம் பழத்தில் 46 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
* பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச் சத்துக்கள் உள்ளன.
* பழத்தில் உள்ள சார்பிட்டல், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள் ஜீரண மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
* புத்துணர்ச்சி மிக்க பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி, நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்பட வல்லது. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், 'வைட்டமின் சி'யின் பங்கு மகத்தானது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் தன்மையும் வைட்டமின் சி-க்கு உண்டு.
* 'வைட்டமின் ஏ' மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. வைட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித் தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-விற்கு உள்ளது.
* லுடின், கிரிப்டோசாந்தின், ஸி-சாந்தின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை நீக்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. ஸி-சாந்தின், கண்களின் ரெட்டினா பகுதியை புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
* பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த சிவப்பμக்கள் உற்பத்திக்கு இரும்புத் தாது மிக அவசியம். பொட்டாசியம் உடலை வளவளப்பு தன்மையுடன் வைப்பதிலும், ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது.
* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், வைட்டமின் பி6, பான்டோ தெனிக் ஆசிட்போன்றவை உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தில் இந்த வைட்டமின்கள் துணைக் காரணியாக பங்காற்றுகிறது.
* பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின் கே, உள்ளது. இது ரத்தம் உறை தலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது.
சாப்பிடும் முறை..........
* பிளம்ஸ் பழங்கள் தோலுடன் அப்படியே சுவைத்துச் சாப்பிட ஏற்றது. இனிப்பு சுவையுடன், சாறு நிறைந்த இதனை களிப்புடன் சாப்பிடலாம்.
* சாலட்டுகளில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு.
* பிளம்ஸ் பழத்தில் ஜாம், ஜெல்லி தயாரிக்கப்படுகிறது.
* இறைச்சியுடன் பழ வகைகள் சேர்த்து செய்யப்படும் 'பை' வகை உணவுகளிலும், வேறு பல உணவு வகைகளிலும் பிளம்ஸ் பழங்கள் சேர்க்கப்படுகிறது.
* கேக், ஐஸ்கிரீம்களிலும் பிளம்ஸ் பழங்கள் சேர்க்கப்படுகிறது.
* உலர்த்தப்பட்ட பழங்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது.

No comments:
Post a Comment