'மயிர் முளைச்சான்' தெரியுமா?
இதைப் படித்தவுடனே சிலருக்கு ''என்ன தீயசொல் எல்லாம் பேசுகிறீர்கள்?'' எனக் கேட்க தோன்றும். இல்லை, இது தீயசொல் அல்ல. 'மயிர் முளைச்சான்' என்பது ஒருவகை பழமாகும். இப்பழம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவைத் தாயிடமாகக் கொண்டுள்ள பழமாகும். தென்கிழக்கு ஆசியாவில், இப்பழம் மிகவும் பெயர்ப்போனது. காய் பருவத்தில் பச்சை நிறத் தோலைக் கொண்டிருக்கும். பழுத்தப் பழத்தின் வெளிப்புறம் சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களிலான தோலைக் கொண்டு அமைந்திருக்கும். இப்பழத்தின் தோல் முழுக்க முழுக்க மயிரால் சூழப்பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். உட்புறத்தில் வெண்ணிற சுளை இருக்கும்.
இனிப்பான சுவையைக் கொண்ட இப்பழத்தை 'Rambutan' என்பார்கள். அச்சொல் மலாய் மொழியில் இருந்து தருவிக்கப்பட்ட ஒரு சொல்லாகும். மலாய் மொழியில் 'Rambutan' என்றால் 'மயிருடையவன்' எனப் பொருள்படும். மலேசியாவில் வாழும் தோட்டப்புற தமிழர்கள் இன்னமும் இப்பழத்தை 'மயிர் முளைச்சான்' என்றழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னமும் சிலர், இச்சொல்லைத் தீயச்சொல் என்று கூறி புறந்தள்ளுவது உள்ளத்தை நோகடிக்க செய்கிறது. உங்களுக்கு எப்படி? 'மயிர் முளைச்சான்' என்றழைப்பதற்கு ஏதும் வருத்தங்கள் உள்ளதா? கருத்துகளை இடவும்.
இப்பழத்தை குந்தளப் பழம் என்றும் அழைப்பார்கள். அதாவது 'குந்தளம்' என்றால் மகளிர் தலை மயிர் எனப் பொருள்படும். ganesan pondicherry http://sithamarunthu.blogspot.in