Thursday, October 16, 2014

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பாகற்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்: 

பாகற்காய் - பாதி 
எலுமிச்சை - பாதி 
உப்பு - ஒரு சிட்டிகை 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் 

செய்முறை :

* பாகற்காயை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு, மஞ்சள் தூள் கலந்து 30 நிமிடம் வையுங்கள். 

* பின், அதனை லேசாக பிழிந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி, எலுமிச்சை சேர்த்து, காலை வெறும் வயிற்றில் குடியுங்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்கும் உணவுகள்

அடிக்கடி வைரல் காய்ச்சலால் நீங்கள் தாக்கப்பட்டு, அது உங்களையும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும், மேலும் பலவீனமடையச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இயற்கையாகவே பலவீனமடைகிறதா அல்லது ஏதேனும் சில வழியில் அப்படி நடக்கிறதா? 

பல நேரங்களில், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பது இயற்கையே. ஆனால் சிலருக்கோ அவர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் வாழும் சுற்றுச் சூழலால் இது ஏற்படுகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை முழுமையாக அழிக்கும் உணவுகளும் கூட இருக்கிறது. 

அவைகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பலவீனமடைய செய்வதோடு மட்டுமல்லாது, மெதுவாக அதனை அழித்திடவும் செய்யும். அத்தகைய உணவுகளை பார்க்கலாம்.. மதுபானம் அதிகளவில் எடுத்துக் கொண்டால், அதனால் ஏற்பட போகும் விளைவுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

நீங்கள் உங்கள் உடலையும், அதன் அமைப்புகளையும் மட்டும் தொந்தரவு செய்யாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கும் சேர்த்தே தொந்தரவு கொடுக்கிறீர்கள். இவைகளை குறைவாக பருகினால் உடலை எவ்வகையிலும் பாதிக்காது. சோடா மற்றும் சர்க்கரை கலந்த எதுவாக இருந்தாலும் அது நம் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு ஆபத்தானது. 

சோடா பாப்ஸ், சோடா கலந்த குளிர் பானங்கள் மற்றும் இதர சோடா பானங்கள் இதில் அடக்கம். இது உங்கள் குடல் பாதையை பாதித்து உடலுக்குள் கிருமிகள் நுழைய வழிவகுக்கும்.  உருளைக்கிழங்கு சிப்ஸ் மூலமாக சில வருடங்களுக்கு முன்பு தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது. 

இது கொழுப்பு உணவிற்கு மாற்றாக இருந்தாலும் கூட பலரும் நினைப்பதை போல் ஆரோக்கியமானது அல்ல. சொல்லப்போனால், இந்த ஆரோக்கியமற்ற மாற்று உணவு உங்கள் செரிமான அமைப்பில் சில பிரச்சனைகளை உருவாக்கிறது. 

நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு தீங்கை விளைவிக்கும் இவ்வகை உணவுகளை தவிர்த்து விடுங்கள். இவைகளால் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, டி மற்றும் கே தடுக்கப்படுகிறது.

Wednesday, October 15, 2014

கொத்தமல்லிக்கீரையின் மருத்துவ குணங்கள்:

கொத்தமல்லிக்கீரையின் மருத்துவ குணங்கள்:

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.

இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

சின்னக் காய்... பெரிய நன்மை...!

சின்னக் காய்... பெரிய நன்மை...!

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. குடல்புண்களை ஆற்றும் சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு.

விட்டமின் சி.குளுக்கோசைடுகள், போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின்.

சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.

என்ன பலன்கள்?

கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.

வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்

விந்து குறைப்பாடு குறைய

விந்து குறைப்பாடு குறைய 

விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைப்பாடு குறையும்.

நீர்கடுப்பு குறைய வெங்காயம்:

நீர்கடுப்பு குறைய
வெங்காயம்:

வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.

அறிகுறிகள்:

சிறுநீர் எரிச்சல்
தேவையான பொருள்:

வெங்காயம்
தண்ணீர்
செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.

Photo: நீர்கடுப்பு குறைய 
வெங்காயம்:

வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.

அறிகுறிகள்:

சிறுநீர் எரிச்சல்
தேவையான பொருள்:

வெங்காயம்
தண்ணீர்
செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.

மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை.


மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை.

Botanical name: #MoringaOleifera

கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது. 

முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

எனவே முருங்கை கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

100 கிராம் முருங்கை இலையில் 92 கலோரி உள்ளது.
ஈரப்பதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
கால்சியம்-400மி.கி
பாஸ்பரஸ்-70மி.கி

சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முருங்கை பல வியாதிகளை குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

பச்சை கீரைகளில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். கீரை உணவுகளை சும்மாவா சேர்க்க சொல்லி சொன்னார்கள் நம் முன்னோர்கள். மருத்துவ பொக்கிஷம் நிறைந்த முருங்கைகீரையை இனிமேல் மிஸ் பண்ணாதீர்கள்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

Tuesday, October 14, 2014

நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே..

‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...’ என்கிற பழமொழியை மாற்றி நண்பர்கள் என்னைப்பார்த்து ''நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே’’ என்று சொல்லி கிண்டல் பண்றாங்க.. தொந்தியை குறைக்க தந்தி வேகத்தில் ஒருவழி சொல்லுங்க.'' நாட்டில் உள்ள அனேகம் குண்டர்களின் ஒட்டுமொத்த வேண்டுக்கோள் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு மருத்துவர் சொல்லும் ஒரே தீர்வு ‘பப்பாளி சாப்பிடுங்க.’

முன்னோர் வழங்கிய மூலிகை: பொற்கொடி

அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் இலேதம்வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே’’


கரும்பச்சை வண்ணத்தில் உள்ள ஒரு செடியை பொற்கொடி என நமது முன்னோர்கள் அழைத்தார்கள் என்றால், அதன் குணம் எத்தகையை தன்மை கொண்டதாக இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. கரிசலாங்கண்ணி, கரிப்பான், பொற்றலை, பொற்கொடி என்ற பெயர்களால் மஞ்சள் கரிசலாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கைகேசி, பிருங்கராஜம், கையான், தேகராஜம் என்ற பெயர்களில் வெள்ளை கரிசலாங்கண்ணி அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நீர் நிலைகள் உள்ள இடங்களில் தானாகவே முளைத்து செழித்து வளரும். இது எதிரடுக்கில் அமைந்த கரும் பச்சை இலைகள் கொண்டதாக அமைந்திருக்கும்

முன்னோர் வழங்கிய மூலிகை: ஊசித்தகரை

நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிற பூக்களையும் நீண்ட காய்கள் உள்ள சிறு செடியினம். பார்ப்பதற்கு நிலக்கடலை செடி போல காட்சியளிக்கும். 50  கிராம் இலையை குறுக அரிந்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 250 மிலி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு 10 முதல் 15 மிலி வீதம்  காலை மாலை இரண்டு வேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் பல் முளைக்கும் போது ஏற்படும் காய்ச்சல் தணியும்.இலையை நீர்விட்டு  மென்மையாய் அரைத்து களிபோல் கிளறி, சிறு தீயில் மீண்டும் கிளறி, இளம் சூட்டில் பற்று போட்டால் கட்டிகள், வாயு, நரம்பு பிடிப்பு, பல்வேறு  வீக்கம் போகும். 

ஊசித் தகரை வேரை எலுமிச்சை பழ சாற்றில் இழைத்து தடவ தேமல் படை ஆகியவை தீரும். விதையை புளித்த மோரில் அரைத்து  தடவ படை சிரங்கு மற்றும் ஆறாத புண் குணமாகும். இலையை இலைக்கள்ளி சாற்றில் ஊறவைத்து கொதி நீரில் அரைத்து போட்டால் தொழுநோய்  புண், புரையோடிய புண் படர் தாமரை, கட்டிகள் குணமாகும்.

வண்டு கடியுடனே வன்கடுவ னும் பலவாம்
பண்டு நமைப்புடையும் பண்டிதர்கள்- கண்டுரைக்கல்
பித்த அனலும் பெருத்த தகரை விதை 


நித்ரையுள் நில்லா திசை- என்கின்றது பழம்பாடல் ஊசித்தகரையின் சிறப்புகளை நமக்கு பறை சாற்றி நிற்கிறது. அனைவரும் வெறுக்கும் மணத்தை  கொண்ட இந்த தகரை செடி, நம்மை மற்றவர்கள் வெறுக்கும் படியான நோய் வந்தால் குணமாக்கி நலமுடன் வாழ வைக்கிறது என்றால் அதன்  சிறப்பை சொல்ல வார்த்தை ஏது? முன்னோர்கள் நமக்காக தேடி வழங்கிய, இத்தகைய மூலிகைகளை பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம். 

வாழ்நாளை நீட்டிக்கும் முட்டைகோசு

நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் 'முட்டைகோசு' முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம். முதலில் இதன் பயன்களை தெரிந்து கொண்டு இதை பயன்படுத்துவதோ, வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள்.

இது குளிர்மண்டல பகதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. இலைகள் நன்றாக பெருத்து காணப்படும். இலைகள் நன்றாக சருண்டு உருண்டை வடிவில் இருக்கும். இவைதான் நாம் உண்ணக்கூடிய பகுதியாகும். வெளிப்பக்கத்திலிருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்திலிருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் காணப்படும்.

பயன்கள்:

இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக  வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதை பயன்படுத்தினால் அத்தொல்லையிலிருந்து வெளியேறலாம். உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸில் இருக்கும் அயோடினுக்கு முக்கிய உண்டு. முட்டைக்கோஸின் சாறு உடல் பருமனைக் குறைக்கும். 

முகப்பருக்கள் இருப்பவர்கள் வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாகும். அஜீரணக் கோளாறுகளால் அவதிபடுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் உடலும், முகமும் இளமை தோற்றதிதுடன் இருக்கும். சொறி, சிரங்கு இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். 

மருத்துவ குணங்கள்:

முட்டைக்கோஸின் இலைகள் மற்றும் வேர்களில் அதிக சத்துக்கள் உள்ளது.

100 கிராம் முட்டைக்கோஸில்  காணப்படும் ஊட்டப்பொருள்

மாவுச்சத்து       -    4.6%
புரதச்சத்து        -      1.9%
அயோடின்        -      1.75கி
இரும்புச்சத்து     -    0.95கி
சுண்ணாம்புச்சத்து - 0.86கி
குளோரின்        - 1.56கி
கந்தகச்சத்து       - 1.35 கி  

எப்படியெல்லாம் சாப்பிடலாம்

முட்டைக்கோஸை பச்சையாகவோ அல்லது  அதன் சாற்றை குழம்பிலோ, பொரியல் வகையிலோ சாப்பிட்டு வந்தால் நோய்கள் குணமாகும்.

குடல் சுத்தமாக:

பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்பந்தமான நோய்களினால் அவதிபடுபவர்கள் வாரம் இருமுறை முட்டைக்கோஸை அளவுடன் பயன்படுத்தி வந்தால் அதில் இருக்கும் அயோடின், குளோரின், கந்தக சத்துக்கள் குடலை சத்தப்படுத்தி நோய்களிலிருந்து விடுவிக்கும்.

நோய் எதிர்ப்புசக்தி பெருக:

வாரம் இருமுறை முட்டைக்கோசை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்புசக்தி பெருகி உடல் ஆரோக்கியம் பெரும்.

கண் பார்வை தெளிவுற:

கண் பார்வை மங்கல், பார்வை தெளிவின்மை போன்றவை நீங்க முட்டைக்கோஸின் சாற்றுடன் கேரட் சாற்றை கலந்து உப்பில்லாமல் இருமுறை சாப்பிட்டு வர பார்வை தெளிவாகத் தெரியும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க:

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க முட்டைக்கோஸின் சாற்றை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றின் நோய்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.

மூலநோய்:

மூலநோயினால் துன்பப்படுபவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் மூலநோய் குணமா-கும்.

இரத்த சோகை நீங்க:

இரத்த சோகை நீங்க முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை நீங்கும். இருதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

புற்றுநோயைத் திர்க்க:

வாரம் இருமுறை முட்டைக்கோஸை உணவில் பயன்படுத்தி வந்தால் இதில் இருக்கும் 'மைதையோல்', 'பிளேவனாய்டு' மற்றும் 'இன்டோமல்' என்ற இரசாயனப் பொருடங்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. மேலும் புற்றுநோய் மற்ற பாகங்களில் வராமல் தடுக்கிறது. இத்தகைய மருத்துவக் குணங்கள் உடைய முட்டைக்கோஸை 'வாழ்நாளை நீட்டிக்கும் உணவு' என்கின்றனர்.

வெண்டைக்காய்....

வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளரும். கணக்கு நல்லா போடலாம்...’’ என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களைப் 
பார்க்கலாம். வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியானத் தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால்,  மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம்  வேண்டாம்.

என்ன இருக்கிறது? (100 கிராமில்)

ஆற்றல்     33 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட்     7.45 கிராம்
கொழுப்பு     0.19 கிராம்
புரதம்     2 கிராம்
வைட்டமின் ஏ     36 மியூஜி
வைட்டமின் சி     23 மி.கி.
வைட்டமின் இ     0.27 மி.கி.
வைட்டமின் கே     31.3 மியூஜி
கால்சியம்     82 மி.கி.
இரும்பு     0.62 மி.கி.

‘‘ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது வெண்டைக்காய். உலகின் மிக அழகிய பெண்களான எகிப்து நாட்டைச் சேர்ந்த  கிளியோபாட்ராவும் சீனாவை சேர்ந்த யாங் குஃபரும் வெண்டைக்காய் பிரியைகள் என்கிறது வரலாறு. அவர்களது அழகு ரகசியங்களில்  வெண்டைக்காய்க்கும் முக்கிய இடமுள்ள தாகச் சொல்லப்படுகிற தகவல்கள் ஆச்சர்யமளிக்கின்றன...’’ வெண்டைக்காயைப் பற்றிய வியப்பான  தகவலுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷரீஃபா தல்ஹா.  வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள், தேர்ந்தெடுக்கும் முறை, சமைக்கும்  விதம் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் அவர்.

‘‘கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக்  அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக்  கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த  வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள்  அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும் கூட.

ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின்  அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தவிர, இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக்  காரணமான செல்களின் வளர்ச்சி யையும் தவிர்க்கக் கூடியவை.

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி,  ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி  வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த ஒரு காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும்.  100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே.

வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின்,  கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது. வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற  முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும்.கிளியோபாட்ராவும் யாங்கும் உபயோகித்த  வெண்டைக்காய் ஆயிற்றே... வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்டைக்காய்  சாப்பிடுவதன் மூலம் குடல் சுத்தமாகிறது. அதனால் சருமம் தெளிவாகிறது. பரு வருவது கூட தடுக்கப்படுகிறது. வெண்டைக்காயைக் கொதிக்க  வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.’’

எப்படி வாங்குவது?

வெண்டைக்காயின் நுனிகளை உடைத்தால் பட்டென்று உடைய வேண்டும். அதுதான் ஃப்ரெஷ்ஷானது என்பதற்கான அடையாளம். உடைக்க  முடியாமலோ, உள்ளே உள்ள முத்துக்கள் புடைத்துக் கொண்டு வெளியே தெரிந்தாலோ, அதை வாங்க வேண்டாம். முற்றிய வெண்டைக்காய் ருசியாக  இருக்காது.

எப்படிச் சமைப்பது?

ஆர்கானிக் வெண்டைக்காய் கிடைத்தால் மிகவும் நல்லது. வெண்டைக்காயில் பூச்சிகள் இருக்கும். ஆப்பிள் சிடர் வினிகரும் உப்பும் கலந்த தண்ணீரில்  வெண்டைக்காய்களை முழுசாக அப்படியே சிறிது நேரம் போட்டு வைத்திருந்து விட்டு, பிறகு நன்கு அலசி சமைப்பதே சிறந்தது. வெண்டைக்காயை  அலசிய பிறகே நறுக்க வேண்டும். நறுக்கிவிட்டு அலசினால் கொழகொழப்புத் தன்மையைக் கையாள்வது மிகவும் சிரமமாக இருக்கும். கூடியவரையில்  இதை அரைவேக்காடாக சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. 

ஸ்டஃப்டு வெண்டைக்காய்

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - கால் கிலோ, மிளகாய் தூள் - 20 கிராம், மஞ்சள் தூள் - 5 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப,  எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயை கழுவித் துடைக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.  வெண்டைக்காயை காம்பு நீக்காமல் நீளமாக வகிர்ந்து கொள்ளவும். தயாராக உள்ள மசாலாவை உள்ளே ஸ்டஃப் செய்யவும். கொஞ்சமாக எண்ணெய்  விட்டு, வெண்டைக்காய்களை நன்கு வேகும் வரை வதக்கி எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.  மிளகாய் தூளுக்குப் பதில் பச்சை மிளகாய், ஓமம்,  கொத்தமல்லித் தழை, இஞ்சி-பூண்டு விழுதுக் கலவையை ஸ்டஃப் பண்ணியும் செய்யலாம்.

வெண்டைக்காய் பச்சடி

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு - 6 பல், இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகுத் தூள், தனியா தூள்,  சீரகத் தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கெட்டியான தேங்காய்ப் பால் - 3 டேபிள்ஸ்பூன்,  கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன், வெல்லத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து  வெங்காயம் பொன்னிற மாகும் வரை வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து  வதக்கவும். தேங்காய்ப் பால், புளிக்கரைசல், மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.  அதை வெண்டைக்காய் கலவையில் விடவும். உப்பும் வெல்லமும் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைத்து இறக்கவும். 
புலாவ், பிரியாணிக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.

வெண்டைக்காய் மண்டி

என்னென்ன தேவை?

எண்ணெய் - அரை கப், தாளிப்பதற்கு- கடுகு, சீரகம், உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன், சாம்பார் வெங்காயம் - ஒரு கப், வெண்டைக்காய் - 1/2 கிலோ,  தக்காளி - 2 பெரியது, கறிவேப்பிலை - ஒரு பிடி, பூண்டு - 6 பல், தனியா தூள், சீரகத் தூள், மிளகாய் தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2  டீஸ்பூன்,  அரிசி மாவு - 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளி - சிறிதளவு.           

எப்படிச் செய்வது?  

எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை வதக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, பூண்டு சேர்ந்து  வதங்கியவுடன் நீளநீளமாக நறுக்கிய வெண்டைக்காய் போட்டு வதக்கவும். பின் மசாலா தூள்களைச் சேர்த்து பொடி வாசனை போனபின், தக்காளியைச்  சேர்த்து வதக்கி உப்புப் போட்டு கடைசியில் புளித் தண்ணீரையும் சேர்க்கவும். நிறைய தண்ணீர் சேர்க்க  வேண்டாம். தளதளவென்று கொதி வந்தவுடன்  அரிசி மாவைத் தண்ணீருடன் கலந்து கொதிக்கும் மண்டியில் விடவும். கெட்டியானவுடன் இறக்கிப் பரிமாறவும். இது இட்லி, தோசை, ஆப்பம்  முதலானவற்றுக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ஏற்றது.