Saturday, September 28, 2013

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!


ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு! இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. காரணங்கள்: ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை. சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம். பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம். அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம். ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம். தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம். சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம். துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம். முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம். நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம். சேர்க்க வேண்டியவை: முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை. தவிர்க்க வேண்டியவை: அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!


மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்! நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது. அறிகுறிகள்: காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: 15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம். ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம். ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம். கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம். பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம். தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம். ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம். அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம். சதகுப்பை இலைப் பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம். 15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம். ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம். ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம். 50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம். திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம். வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம். வெளிப் பிரயோகம்: சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம். லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம். செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம். அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம். கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம். சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம். சேர்க்க வேண்டியவை: தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி. தவிர்க்க வேண்டியவை: குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம்.

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!


மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை! பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது. அறிகுறிகள்: சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம். அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம். அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம். கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம். சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம். வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம். வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம். நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம். 15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம். ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம். சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம். செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம். சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம். மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம். அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம். நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம். பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம். சேர்க்க வேண்டியவை: சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய். தவிர்க்க வேண்டியவை: அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.

நரம்பு தளர்ச்சி தீர லேகியம்.


நரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி - தலா 10கிராம். சீனா கற்கண்டு -700கிராம். பசும்பால்- 700மி.லி. நெய்-175கிராம் . தேன்-175 கிராம். செய்முறை: 1. சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி ஆகியவற்றை இளம் சூட்டில் வறுத்து சூரணம் செய்து கொள்ளவும். 2. சீனா கற்கண்டை பசுவின் பாலில் போட்டு பாகு செய்து வைத்துக் கொள்ளவும். 3. சூரணங்களை பாகில் தூவிக் கிண்டி பின் நெய் விட்டு நன்றாகக் கிளறிக் கொடுத்து கீழே இறக்கி வைக்கவும். 4. சுத்தமான தேன் விட்டுக் கிளறி ஜாடியில் பத்திரப் படுத்தவும். தினசரி ஒரு வேளைக்கு நெல்லிக்காய் அளவு என காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு வயிறு மந்தம்,அஜீரணம் இவைகளும் நீங்கும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை பேறு தரும் திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். சொரி சிறங்கு நீங்கும் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும். தொற்றுநோய் தடுக்கப்படும் தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

இஞ்சிப் பால்..!


இஞ்சிப் பால்..! கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்? 1. நுரையீரல் சுத்தமாகும். 2. சளியை ஒழுச்சு கட்டிடும். 3. வாயுத் தொல்லை என்பதே வராது. 4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். 5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். 6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். 7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம். 8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு. 9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும். 10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே. அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா? 3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும். மீதிப்பேர் சாப்பிடலாம். என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

Wednesday, September 25, 2013

ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.


ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்: ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு. அறிகுறிகள்: சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம். உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம். முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம். நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம். திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம். செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம். கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ணலாம். சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம். லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம். இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம். இம்பூறல் இலைப் பொடியுடன் இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து அடையாகச் செய்து சிற்றுண்டி போலச் சாப்பிடலாம். ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து அருந்தலாம். மூங்கிலுப்பை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் கொடுக்கலாம். மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து இருவேளை அருந்தலாம். மிளகரணை இலையை உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து உண்ணலாம். சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம். துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம். தவிர்க்க வேண்டியவை: கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை.

நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை


நெருஞ்சியின் அளப்பரிய பயன்கள்..! நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. மேலும் இது ஒரு ஆகர்ஷண மூலிகையாகும். இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும். கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன்தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. .இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணலாம். மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும். இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர்.பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். இதன் இலையை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் இட்டால் ,தண்ணீர் அடர்த்தி மிகுந்து கெட்டியாகிவிடும் .பார்ப்பதற்கு அதிசியமாக இருக்கும் .எண்ணெய் போல் பிசுபிசுப்பு ஆகிவிடும் .இதுவும் ஒரு மருந்து ,இது காமவர்த்தினி .ஆண்மை பெருக்கி . .மேலும் இது பட்டுத்துணிகளை சுத்தப்படுத்தும். யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும். இது எந்த ரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையில் பட்டு முதலிய துணிவகைகளை சுத்தம் செய்து கரைகளை எடுக்கும் .ஒரு பயோ சலவையகம் கூட துவக்கலாம் . சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும். பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்..இவை குணத்தில் மாறுபடுவதில்லை. இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது. இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீர் பெருக்கி , உரமாக்கி , உள்ளழலகதறி ,ஆண்மைப்பெருக்கி நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும். நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில்: மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் . இது ஒரு சும்மா கிடைக்கும் வயகரா .! சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை. நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும். இது ஒரு ஊக்கி மருந்து ஆகும் நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும். நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும். சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். டயாலிசிஸ் செய்தது லக்ஷக்கணக்கில் பணத்தையும் உடல் நலத்தையும் இழக்கவேண்டாம். இதனை எளிய மருந்தாய் எண்ணி உதாசீனப்படுத்த வேண்டாம். சித்தர்களின் சுவடிகளில் சொல்லப்பட்ட அரிய மருத்துவ முறை இது.சிறிது சிரத்தை எடுத்தால் சீரும் சிறப்புமாக சிறு சிறுநீரகததைப் பற்றி கவலைப் படாமல் வாழலாம்!

தாழம்பூ மணப்பாகு..!


தாழம்பூ மணப்பாகு..! தாழ‌ம்பூவை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்ச வே‌ண்டு‌ம். ‌நீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்து பூ‌வித‌ழ்க‌ள் வத‌ங்‌கிய ‌பி‌ன் வடிக‌ட்டி, தேவையான ச‌ர்‌க்கரை கூ‌ட்டி பாகுபதமா‌ய் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். இதுவே தாழ‌ம்பு மண‌ப்பாகு. இதனை ஒரு ‌தே‌க்கர‌ண்டி அளவு ‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருவேளை குடி‌த்து வர உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌த் த‌ணி‌க்கு‌ம். இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்த நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியாவதை‌த் தடு‌க்கு‌ம். தாழ‌ம்பூ மண‌ப்பா‌கினை வெ‌யி‌ல் கால‌ங்க‌ளி‌ல் ‌தினச‌ரி உபயோ‌கி‌த்து வர அ‌ம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கலா‌ம். இதே‌ப் போ‌ன்ற மண‌ப்பாகை தாழ‌ம்பூ வே‌ரினை‌ப் பய‌ன்படு‌த்‌தி செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்டு உ‌ட்கொ‌ண்டு வர சொ‌றி, ‌சிர‌ங்கு, ‌தினவு, தோ‌ல் நோ‌ய்க‌ள் குணமாகு‌ம்.

ஞான மூலிகை


வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது. வள்ளலாருக்கு முன்தோன்றிய சித்தர்கள் மூலிகைகளின் தன்மைகளைப் பற்றிச் சொல்லியிருந்த போதிலும், வள்ளலார் மூலிகைகளின் குணங்களயும் தன்மைகளையும் சொல்லியிருப்பது, படிப்பவருக்குப் பசுமரத்து ஆணிபோல் பதியும். வள்ளல் பெருமான் தனது திருவருட்பாவில் நித்திய கரும விதி என்ற அகராதியில், உணவில் பச்சரிசி சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, தூதுவளை, பொன்னாங்கண்ணி போன்றவற்றைச் சேர்க்கும்படி கூறுகிறார். தூதுவளைக் கீரையுடன் மிளகு ஒரு பங்கு, சீரகம் காலே அரைக்கால் பங்கு, வெந்தயம் கால் பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்த்துச் சமைக்க வேண்டும் என்றும்; வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை இத்துடன் சேர்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார். இதிலிருந்து தூதுவளையின் மகத்துவம் நமக்குப் புலனாகிறது.

மூலிகை காப்பி செய்முறை..! ( Preparation of herbal coffee )


மூலிகை காப்பி செய்முறை..! ( Preparation of herbal coffee ) இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காப்பி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும். காப்பி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காப்பி செய்முறை.. தேவையான மூலிகை பொருட்கள்... 1 - ஏலரிசி - 25-கிராம். 2 - வால்மிளகு - 50 கிராம். 3 - சீரகம் - 100 கிராம். 4 - மிளகு - 200 கிராம். இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும். இது அருகம் புல் காப்பிக்கு பயன்படும் பொடி ஆகும். நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம். காப்பி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன. இந்த அருகம் புல் காப்பியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது. உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும். குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.

மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம்.


மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம். தண்ணீர் ஊற்றிவைக்க, தானியங்கள் போட்டுவைக்க, வருட செலவுக்காக நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவை ஊற்றிவைக்க, மிளகாய், புளி, உப்பு போன்றவைபோட்டுவைக்க இது பயன்பட்டது. பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். நவீன வாழ்க்கை என்ற பெயரால் நாம் இழந்து வரும் எண்ணற்றவைகளில் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்த மண்பானைகளும் அடங்கும்!..

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!


பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு! பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம். காரணங்கள்: ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம். அத்திப் பால் ஐந்து சொட்டு எடுத்து வெண்ணெய் சேர்த்து உண்ணலாம். குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ணலாம். இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம். இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம். தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம். நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம். கால்ஸ்பூன் லவங்கப் பட்டைப் பொடியை எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம். கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம். அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம். கட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம். முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றின் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம். மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம். அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம். மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ணலாம். நிலப் பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர்க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம். வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம். திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்கு சேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையில் குடிக்கலாம். மாம்பிசின், விளாம்பிசின் பொடி சமஅளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம். கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத்துடன் கலந்து உண்ணலாம். சேர்க்க வேண்டியவை: துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்திப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல். நீக்க வேண்டியவை: இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!


அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு! இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. அறிகுறிகள்: குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம். சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம். கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம். பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம். கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம். மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம். சேர்க்க வேண்டியவை: கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு. தவிர்க்க வேண்டியவை: அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி. கடைப்பிடிக்க வேண்டியவை: காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்


சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்

Wednesday, September 18, 2013

ஆப்பிள் தரும் ஆரோக்கியம்


ஆப்பிள் தரும் ஆரோக்கியம் நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர். இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே. பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன. மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர விஸ்கி அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது. ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி குடற்பாதையிலுள்ள நுண்கிருமகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வாய் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு ஆப்பிள் மேற்தோலானது செரிக்கக் கடினமாக இருக்குமென்பதால் மேற்தோலை நீக்கி உட்கொள்வது நல்லது. ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பது ஆங்கில பழமொழி. நீர்ச்சத்து ஏராளமாக உள்ள ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் நன்கு உட்கொள்ளலாம். இதில் ஏராளமான மாவுச்சத்து நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகள் ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

மூலத்தை துரத்தும் துவரை வேர்


மூலத்தை துரத்தும் துவரை வேர் நாம் உண்ணும் உணவு உணவுப்பாதையில் சீரணிக்கப்பட்டு திடக்கழிவாக மலவாசலில் வெளியேறாவிட்டால் பல உபாதைகள் தோன்ற ஆரம்பித்துவிடும். இதற்காக மிகவும் பிரயத்தனம் செய்து மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயிலில் வலி மற்றும் புண்கள் தோன்றலாம். இதே நிலை நீடிக்கும்பொழுது மலப்பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு மலம் கழிக்க சிரமம் உண்டாவதுடன் ஆசனவாயின் வெளிப்புறம் அல்லது உட்புறத்தில் சிறுசிறு கட்டிகளோ அல்லது வீக்கமோ தோன்றி மூலநோயாக மாறிவிடுகிறது. குறைந்தளவே தண்ணீர் அருந்துபவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்கள், வாயுவை பெருக்கக்கூடிய பதார்த்தங்களை அதிகம் உட்கொள்பவர்கள், கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மூலநோய்க்கு ஆட்படுகிறார்கள். பரம்பரையாகவும் மூலநோய் ஏற்படுகிறது. இவர்களுக்கு ஆசனவாய் பகுதியில் கிருமிகள் தங்கி வளருவதால் ஆசனவாயில் அரிப்பு உண்டாகி, சில நேரங்களில் மூலம் முற்றிப்போய் ரத்தமும், சீழும் மலத்துடன் கலந்து வெளியேற ஆரம்பிக்கிறது. பலருக்கு இதன் ஆரம்ப அறிகுறி தெரியாமல், நோய் அதிகரித்த பின்பே பலவித உபாதைகள் தோன்றுகின்றன. மூலநோய் உள்ளவர்கள் வாயுவை பெருக்கக்கூடிய கிழங்கு வகைகள், பயறு வகைகள், கொழுப்பு சத்துள்ள உணவுகள், அசைவம், காரம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பதுடன், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதையும், அதிக எடை தூக்குவதையும், வாகன பிரயாணம் செய்வதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள், பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். சாதாரண மூலம்தானே என்று அலட்சியம் காட்டினால் அது பவுத்திரமாகவும், ஆசனவாய் அடித்தள்ளலாகவும் மாறிவிடுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் துவரையின் வேரில் ஏராளமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. கஜானஸ் கஜன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த துவரைப் பயிர்கள் உணவுப்பயிராக சாகுபடி செய்யப்படுகின்றன. சாணபுஷ்பிகம் என்ற சமஸ்கிருத பெயர் கொண்ட துவரையின் வேரில் பெனில் அலனின், ஐசோபுளோவின், ஐசோபுளோவோன், ஸ்டீரால், ஆன்த்ரோகுயினோன், டிரைடெர்பினாய்டு மற்றும் கஜானால் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை மெல்லிய சதைப்பகுதிகளில் ஏற்படும் வீக்கம், கொப்பளம், கட்டி போன்றவற்றை கரைத்து அங்கு தேங்கிய ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. துவரை வேரை நிழலில் உலர்த்தி முடிந்தளவு பட்டையை உரித்து, நன்கு பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை தேன் அல்லது வெண்ணெயுடன் கலந்து சாப்பிட, ஆசனவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் மற்றும் சதை வளர்ச்சி நீங்கும். துவரம் பருப்பிலும் இந்த வேதிச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அன்றாட உணவில் நன்கு வேகவைத்து உட்கொண்டு வந்தால் மலவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் நீங்கும்.துவரை வேரிலிருந்து மருந்து செய்ய இயலாதவர்கள் துவரை வேர் சேர்த்து செய்யப்பட்ட கன்கனியாதிவடி என்னும் ஆயுர்வேத மாத்திரையை காலை-1, இரவு-1 உணவுக்குப் பின்பு சாப்பிட்டுவரலாம். அத்துடன் விளக்கெண்ணெயை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து ஆசனவாயில் தடவலாம்.

மைக்ரேன் – தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன


மைக்ரேன்…! மைக்ரேன் – தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை; அதற்கான காரணமும் தெரியாது. ஆனால், ஒற்றைத்தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்து விட்டால் போதும், மாத்திரையும் கையுமாக தான் அலைய வேண்டும். மூளை நரம்பு திசுக்களில் ஏற்படும் அதிர்வுகள் தான் “மைக்ரேன்’ தலைவலி. தலையை பிளப்பது போல வலி இருக்கும். ஒரு பக்க தலையில் மட்டும் வலிக்கும். சில மணி நேரம் , சில நாள் வரை கூட தொடரும். எத்தனை வகை? பல நாடுகளிலும் “மைக்ரேன்’ பாதிப்பு உள்ளது. 80 சதவீத மைக்ரேன் பாதிப்பு சாதாரணமானவை தான். 20 சதவீத மைக்ரேன் பாதிப்பு தான் , சில நோய்களால் ஏற்படுகின்றன. இந்த வீரியமுள்ள மைக்ரேன் வந்தால், மூளை நரம்புகள் பாதிக்கப் பட்டு, வயதான போது மறதி நோய் வர வாய்ப்பு அதிகம். அசாதரணமான ஒளி, அலர்ஜியான சத்தம், சாக்லெட் ,ஐஸ்கிரீம் போன்ற சில வகை உணவுகள் ஆகியவை தான் மைக்ரேன் வர காரணம். இதை சாப்பிடுவோர் எல்லாருக்கும் தலைவலி வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு தான் வரும். அறிகுறி என்ன? பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளில், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பக்க தலையில் வலிக்கும். சிலருக்கு இரு பக்கமும் வலி ஏற்படும். எந்த வேலையையும் செய்ய முடியாமல் முடக்கிப்போடும். கண்களை மூடிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கத்தோன்றும். வாந்தி வருவது போல தோன்றும். மன அழுத்தம் இருந்தால், இந்த தலைவலி வரும். அடிக்கடி வந்தால் மைக்ரேன் தான். அதுபோல, சிகரெட் பிடிப்போர், அடிக்கடி கருத்தடை மாத்திரை விழுங்குவோர், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்காதவர்களுக்கு கூட இந்த பாதிப்பு வரும். நீடித்தால் உஷார்: தனக்கு வந்திருப்பது மைக்ரேன் தானா என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாது. சில அறிகுறிகள் , தொடர்ந்து வருவது போன்றவற்றால் தான் அதை கண்டுபிடிக்க முடியும். மேற்சொன்ன காரணங்களுடன், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, அடிக்கடி விரதம் இருப்பது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்றவற்றாலும் மைக்ரேன் வரும். தனக்கு எதனால் வருகிறது என்பதை தெரிந்து அதை தவிர்த்துக்கொண்டாலே போதும்; ஒற்றைத்தலைவலி வராமல் நின்று விடும். எந்தெந்த உணவு: டின்னில் அடைக்கப்பட்ட , நாள் பட்ட பதப்படுத்தப்பட்ட மாமிசம், ரெட் ஒயின் உட்பட சில வகை மதுக்கள், பீன்ஸ், காபி, சாக்லெட், மோர், கிரீம், மிட்டாய்கள், உணவில் மணம் அதிகரிக்க சேர்க்கப்படும் சில வகை பொருட்கள், வேர்க்கடலை உட்பட சில வகை கடலைகள், பப்பாளி, ஊறுகாய், சாஸ், இனிப்பு வகைகள் போன்றவையும் மைக்ரேன் தலைவலியை தூண்டும். இந்த உணவுகளில் ஏதாவது ஒன்று அலர்ஜியை ஏற்படுத்தினாலும், சம்பந்தப் பட்டவருக்கு மைக்ரேன் வரும். அதனால், இதை கண்டுபிடித்து அந்த உணவை தவிர்க்க வேண்டும். மரபு காரணமா? பரம்பர�யாக வரும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. அப்பா, அம்மாவில் யாருக்காவது இருந்தாலோ, தாத்தா, பாட்டிக்கு இருந்தாலோ வாரிசுகளில் யாருக்காவது வரும். குழந்தைகளுக்கு வருமா என்று கேட்கலாம்; நிச்சயமாக வரும். ஆனால், சில நிமிடங்களில் போய்விடும். அதனால் தான், சில குழந்தைகளுக்கு வாந்தி வருகிறது; லைட்டை பார்த்தாலே கண் கூசுகிறது. இளைய வயதில் மைக்ரேன் வர வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சிகிச்சை பெற வேண்டும். மோசமானது எது? மைக்ரேனில் மோசமான தலைவலி நான்கு கட்டமாக வரும். மலச்சிக்கல், மன அழுத்தம் போன்ற காரணத்தால் அடிக்கடி தலைவலி வந்தால் சந்தேகப்பட வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் மைக்ரேன் ஆரம்பம். இதன் பெயர் “ப்ரோட்ரோம்’ இரண்டாவது கட்டம் “ஆரா’ என்பது. இந்த கட்டத்தில் தான் விளக்கு வெளிச்சத்தை பார்த்தாலே கண்களை மூடிக்கொள்ள வைக்கும். சில வகை வாசனைகள் கூட தலைவலியை ஏற்படுத்தும். பேசும் போது வார்த்தைகள் தடுமாறும்; நினைவாற்றலும் பாதிக்கும். மூன்றாவது கட்டம்: இதில் தலைவலியுடன் மூக்கடைப்பு, தண்ணீர் வற்றிப்போன நிலை, மயக்கம் வரும். நான்காவது கட்டம், போஸ்ட்ரோம்; நாட்கணக்கில் கூட இது தொடரும். கடைசியில் மன அழுத்தம் ஏற்படும். எந்த வேலையிலும் நாட்டம் வராது. சிகிச்சை தேவையா? பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளுக்கு சிகிச்சை தேவையில்லை. உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வந்தாலே போதும். தொடர்ந்து வந்தால், அதை தடுக்க யோகா பயிற்சி செய்வது நல்லது. மாத்திரைகளை விழுங்குவதை தவிர்க்க வேண்டும். மிக அதிக பாதிப்பு வந்தால், அதை தடுக்க இதயத்துக்கு “பேஸ் மேக்கர்’ கருவி பொருத்துவது போல, காதுக்கு பின்பக்கம் கருவியை வைத்து, அதிர்வலைகளை ஏற்படுத்தி, நரம்பு திசுக்களை சரி செய்ய முடியும். இந்த கருவி பொருத்த செலவு என்ன தெரியுமா? இரண்டரை லட்சம் ரூபாய்.

சகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி!


சகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி! நமது தோல் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி, உடலின் வெப்பநிலையை சமப்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகிறது. ஆனால் இதே போல் பல நுண்கிருமிகளும் உயிர்வாழ இடமளிக்கிறது என்பதும் அதிர்ச்சியான செய்தியாகும். தோலில் எவ்வளவு நுண்கிருமிகள் இருந்தாலும் அது ரத்தத்தில் கலந்துவிட வாய்ப்புண்டு. தோலில் தோன்றும் நுண்கிருமிகளால் உடலில் பல உபாதைகள் உண்டாகிவிடுகின்றன. தோலில் அரிப்பு, வெடிப்பு, தோல் சிவத்தல், செதில் செதிலாக உதிர்தல், நிறமாற்றம், தோலில் உணர்ச்சியின்மை போன்ற பல உபாதைகளுக்கு தோலில் வளரும் கிருமிகளே காரணமாக அமைகிறது. இந்த கிருமிகள் தோலின் அடுக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, தோலின் எண்ணெய் கோளங்களை அடைத்து, வியர்வை துவாரங்களை சிதைத்து, தோலுக்கு நிறத்தை தரும் மெலனின் மற்றும் ரோமத்திற்கு நிறத்தை தரும் கெரட்டின் நிறமிகளை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணிய ரத்தக்குழாய் மூலமாக ரத்த சுற்றோட்டத்தில் கலக்கின்றன. இந்தக் கிருமிகள் மூச்சுப்பாதை, உணவுப்பாதை என பலவிடங்களில் பல தொல்லைகளை உண்டுபண்ணுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுகுடல்,பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதிகளில் பலவிதமான புழுக்களும் வளரத் தொடங்குகின்றன. தோலில் தோன்றும் நுண்கிருமிகளால் தோல் கடும் பாதிப்படைகிறது. தோல் வறட்சி, சொரி, சிரங்கு, படை, வெண்படை, கரப்பான், விரலிடுக்கில் தோன்றும் குருக்கள், முகப்பரு, உடம்பில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றும் தடிப்பு, வெண்குட்டம், தலையில் தோன்றும் பொடுகு, பூச்சிவெட்டு, நகத்தில் தோன்றும் நகச்சுற்று, நகச்சொத்தை, தொடையிடுக்கு, அக்குள், கழுத்துப்பகுதிகளில் கடும் அரிப்பு போன்ற பல தொல்லைகள் உண்டாகின்றன. நோயின் தீவிர நிலையில் கடும் காரத்தன்மையுள்ள மருந்துகளை உபயோகித்தால்தான் நோய் கட்டுப்படும். காரத்தன்மை அதிகம் மிகுந்த, மூலிகை மருந்துச்சத்துக்கள் அதிகம் நிறைந்த அற்புத மூலிகைதான் சதுரக்கள்ளி. கேட்பாரின்றி சாலையோரங்களில் அதிகமாக முளைத்துக் காணப்படும் கள்ளி வகையைச் சார்ந்த இந்தச் செடிகள் சித்த மருத்துவத்தில் ஏராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யுபோர்பியா ஆன்டிக்குவாரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த செடிகளின் பால் மற்றும் இலைச்சாறு மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதன் இலைச்சாற்றில் ப்ரைடலான், 3 ஆல்பா ஆல், 3 பீட்டா ஆல், டேராக்சரால், டேராக்சிரோன், பீட்டா அமீரின், யுபால்யுபோர்பால் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சிரங்குகளை ஆற்றவும், பால்வினை நோய்களில் தோன்றும் புண்களை குணப்படுத்தவும் உதவுகின்றன. சதுரக்கள்ளியை இடித்து, சாறெடுத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை தோலில் சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வரலாம். மிளகை சதுரக்கள்ளி சாற்றில் ஊறவைத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, நல்லெண்ணெயில் மூழ்கும்படி பத்து நாட்கள் வைத்திருந்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர பொடுகு, தலை அரிப்பு நீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் மகாமாரீச்சாதி தைலத்தில் சதுரக்கள்ளி இலைச்சாறு சேர்க்கப்படுகிறது. இதனை கிருமித்தொற்று உள்ள இடங்களில் தடவி வரலாம்.

மங்குஸ்தான் பழத்தின் மருத்துவப் பயன்கள்..!


மங்குஸ்தான் பழத்தின் மருத்துவப் பயன்கள்..! பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி எல்லா சித்தர்களும் கூறியுள்ளனர். பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். மங்குஸ்தான் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு. சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கண் எரிச்சலைப் போக்க கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். வாய் துர்நாற்றம் நீங்க வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். மூலநோயை குணப்படுத்த நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். சிறுநீரைப் பெருக்க சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். * இருமலை தடுக்கும் * சூதக வலியை குணமாக்கும் * தலைவலியை போக்கும் * நாவறட்சியை தணிக்கும். மங்குஸ்தான் பழத்தில் நீர் (ஈரப்பதம்) – 83.9 கிராம் கொழுப்பு – 0.1 கிராம் புரதம் – 0.4 கிராம் மாவுப் பொருள் – 14.8 கிராம் பாஸ்பரஸ் – 15 மி.கி. இரும்புச் சத்து – 0.2 மி.கி உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம்.

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்!


எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்! சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம். தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும். நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம். மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு. எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும். சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும். சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா? கவலையை விடுங்க...


உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா? கவலையை விடுங்க... இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது. பச்சை மிளகாய் சாப்பிடுங்க...! உடல் எடை குறையும்...! உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது. மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.

Sunday, September 15, 2013

கல்யாண முருங்கை இலை..


கல்யாண முருங்கை இலை.. 1. கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு விட்டு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தம், பித்த மயக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும். 2. கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும். 3. கல்யாண முருங்கை இலையுடன், ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும். 4. கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். 5. கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், அதிகாலையில் மலம் தாராளமாகக் கழியும். 6. கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும். 7. கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். 8. கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து இரண்டையும் மாதுளம் பழச்சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காமம் அதிகரிக்கும். 9. கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும். 10. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.


எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும். கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும். பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும். ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும். மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும். தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும். பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும். இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும். மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும். இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள்


பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள் பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள் ஆசிய பகுதியின் மேற்கு பகுதியில் இருந்து வருவது தான் பிஸ்தா. இது இயல்பாக ஒரு பழமாகும். ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது. அதிலும் இந்த பருப்பை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கண் பார்வை சீராக இருக்கும். சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும். மற்ற பருப்புகளை போன்று இதிலும் கொழுப்பு தன்மை அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஈரத்தன்மை கிடைக்கின்றது. இப்போது அந்த பிஸ்தாவை அதிகம் உட்கொண்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போம. ஆரோக்கியமான இதயம் பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது. நோயெதிர்ப்பு அழற்சி தன்மை பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள், உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது. நீரிழிவு நோயை தடுக்கின்றது பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கின்றது. இரத்தத்திற்கு ஏற்றது இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது. நரம்பிற்கு நல்லது பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 நரம்பிற்கு மிகவும் நல்லது. அமைன்கள் என்பது நரம்பு மண்டலத்தில் செய்தியைக் கொண்டு செல்லும் கூறுகளாகும். இதன் மூலம் அமினோ அமிலம் உற்பத்தி செய்யப்பட்டு, உடலுக்கு வலிமை அதிகரிக்கின்றது. மேலும் நரம்பு மண்டலத்தைச் சுற்றி ஒருவித மயிலீனை உருவாக்கின்றது மற்றும் இவை செய்திகளை ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்பு இழைகளுக்கு கொண்டு செல்ல உதவுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 அமினோ அமிலங்கள் பிஸ்தாவினால் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. கருவிழி சீரழிவு/கருவிழி சிதைவு கருவிழி சீரழிவு காரணமாக எதைவும் ஒழுங்காக படிக்க முடியவில்லை என்று பெரியவர்கள் கூறுவர். பொதுவாக இது வயதான காலத்தில் வரும் ஒரு வித நோயாகும். இதனால் அடுத்த மனிதர்களை இனம் காண முடியாத அளவிற்கு பாதிப்பு உண்டாகின்றது. மாகுலர் திசு செயலிழப்பின் விளைவாக இந்த சேதம் ஏற்படுகின்றது. லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன், இந்த பாதிப்பை எதிர்த்து போராடுகின்றது. இத்தகைய பொருட்கள் மிகப்பெரிய அளவில் பிஸ்தாவில் இருப்பதால், இவை கண்களுக்கு மிகவும் நல்லது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் காரணியாகும். இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது. ஆரோக்கியமான மூளை பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது. ஆரோக்கியமான சுரப்பிகள் மண்ணீரல் போன்ற சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்றவை ஆரோக்கியமான மற்றும் தொற்று நோயை எதிர்க்கும் சுரப்பியாகும். இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) சரியாக பணி புரிய செய்கின்றது. இத்தகைய சக்தியானது பிஸ்தாவில் கிடைக்கின்றன. ஆரோக்கியமான சருமம் பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எப்படியெனில் இதனை சாப்பிட்டால், இது சருமத்தின் மென்சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது. இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகின்றது. வயதான தோற்றத்தை போக்குகின்றது பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தில் தோன்றும் வயதான தோற்றத்தை போக்கி, இளமையான தோற்றத்தை அளிக்கின்றது. இதற்கு இந்த பிஸ்தாவில் உள்ள எண்ணெய்ப்பசை தான் காரணம். புற்றுநோய் இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது. நேச்சுரல் மாய்ஸ்சுரைசர் பிஸ்தா எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். அது இயற்கையாகவே சருமத்தை மிகவும் மென்மையாக்கி ஈரப்பதத்துடன் விளங்க செய்கின்றது. எனவே வழக்கமான மாய்ஸ்சரைசருக்கு பதிலாக, இந்த எண்ணையை எடுத்துக் கொள்ளலாம். நேச்சுரல் மாய்ஸ்சுரைசர் பிஸ்தா எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். அது இயற்கையாகவே சருமத்தை மிகவும் மென்மையாக்கி ஈரப்பதத்துடன் விளங்க செய்கின்றது. எனவே வழக்கமான மாய்ஸ்சரைசருக்கு பதிலாக, இந்த எண்ணையை எடுத்துக் கொள்ளலாம். வெள்ளையான சருமம் பிஸ்தாவை தினமும் எடுத்து கொள்வதால், சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்க முடியும். ஏனெனில் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கணிசமான அளவில் உள்ளது. மேலும் வழக்கமான உணவில் பச்சை ஆப்பிள்களை சேர்த்து கொண்டாலும், மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும். வேனிற்கட்டிகள் பிஸ்தாவில் இருக்கும் வைட்டமின் ஈ உடலின் ஒரு கொழுப்புத் தன்மையை அதிகரிக்கின்றது. இதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். மேலும் இது தோல் புற்றுநோய் மற்றும் வேனிற் கட்டி சிரமங்களை குறைத்து, சூரியக் கதிர்களால் சருமத்திற்கு சேதம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியமான பார்வை பிஸ்தாவை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், ஆரோக்கியமான பார்வையைப் பெற முடியும். கூந்தல் வளர்ச்சி பிஸ்தாவில் இருக்கும் கொழுப்புத்தன்மை கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கின்றது. இதன் மூலம் கூந்தல் வளர்ச்சி அடைகின்றது. வலுவான கூந்தல் பிஸ்தாவை அதிகம் சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்களால் மயிர் கால்களை வலுப்படுத்தப்பட்டு, கூந்தல் உதிர்தல் தடைபடுகிறது. கூந்தல் வெடிப்பு பிஸ்தாவின் மூலம் தயாரிக்கப்படும் மாஸ்க்கை கூந்தலுக்கு போட்டால், கூந்தலுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கின்றது. இதனால் கூந்தலுக்கு பிளவு ஏற்படாமல் நன்றாக வளரவும் உதவுகின்றது. கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பயோட்டின் குறைபாடு கூந்தல் உதிர்தலுக்கு காரணமாக விளங்குகின்றது. இத்தகைய பயோட்டின் பிஸ்தாவில் கணிசமான அளவில் உள்ளதால், இதனை தினமும் சாப்பிட, கூந்தல் உதிர்தல் நின்று, கூந்தல் ஆரோக்கியமாக வளரும்.

பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?


பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்? மருந்துப் பொருட்களில் மிகவும் உயர்ந்த ஒரு பொருள் கடுக்காய். கடுக்காயில் மருத்துவ குணங்களுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய குணங்களும் நிரம்பியுள்ளன. சாதாரணமான இரண்டு கடுக்காய்களை அதனுள்ளே இருக்கக் கூடிய கொட்டையை நீக்கி, தோல் சதையுடன் கூடிய பகுதிக்குச் சம அளவு கரும்பு வெல்லம் கலந்து இரண்டையும் பற்களால் கடித்து தினமும் காலையில் உணவுக்கு முன் ஒரு வேளை மட்டும் சுவைத்துச் சாப்பிடலாம். வெல்லத்துக்குப் பதிலாக தேனும் கலந்து சாப்பிடலாம். கடுக்காயின் பாதி அளவு சுக்கு, கடுக்காயின் கால் பங்கு திப்பிலி, கடுக்காயின் கால் பங்கு இந்துப்பு என்ற அளவிலும் சாப்பிடலாம். இதில் சுக்கு - திப்பிலி - இந்துப்பு மூன்றையும் சூரணம் செய்து, சூரணம் செய்யாத கடுக்காய்த் தோலுடன் ஒன்றாகக் கலந்து கடித்துச் சாப்பிட்டால் பிணியின்றி இன்பத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் கிடைக்கும். பருவ காலங்களுக்குத் தகுந்தபடியும் மேற்குறிப்பிட்ட மருந்து சரக்குகளைக் கடுக்காயுடன் கலந்து சாப்பிட்டாலும் மேலும் பல நன்மைகளைப் பெறலாம். வாதம் எனும் உடல் தோஷம் மழைக்காலத்தில் இயற்கையாகவே கூடுவதால், காலையில் எழும்போது தசைப் பிடிப்பு, மூட்டு வலி, பூட்டுகளில் வீக்கம் வலி போன்றவை அதிகம் தென்படும். இரண்டு கடுக்காய் தோலுடன் இந்துப்பு சேர்த்துச் சாப்பிட்டால், இந்த உபாதைகள் நன்கு குறையும். பித்தம் எனும் தோஷம் மழைக்காலத்துக்கு அடுத்த பருவகாலமாகிய இலையுதிர்க் காலத்தில் உடலில் கூடுகிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி, வாய்ப்புண், கண்ணெரிச்சல், சிறுநீர் எரிச்சல், வியர்வை கூடுதல் போன்ற உபாதைகள் கூடும். பழுப்புச் சர்க்கரையுடன் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால், இந்த பித்த தோஷம் அமைதியாகிவிடும். முன் பனிக் காலத்தில் கபதோஷம் வளர்ந்து, தலை பாரம், தலைவலி, உடல் கனம், பசி மந்தம் போன்றவை தோன்றும். சுக்குப் பொடியுடன் கடுக்காய்த் தோல் சாப்பிட்டால் எல்லா உபாதைகளையும் தவிர்க்கலாம். கபம் உறையும். கடும்பனிக் காலத்தில் திப்பிலி பொடியுடனும், நெஞ்சிலிருந்து கபம் உருகி வயிற்றில் பசியைக் குறைக்கும், வசந்தகாலத்தில் தேனுடனும், கபம் வறண்டு போகும் கடும் கோடையில் வெல்லத்துடனும் கடுக்காய்த் தோலைச் சாப்பிடுவது உடலைப் பிணியின்றிக் காக்கும். சிறந்த பயனைத் தரும் என்று பிருந்த மாதவர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இதில் உணவுக் கட்டுப்பாடு என்றும் எதுவும் கிடையாது. தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள், ஜீரண உறுப்புகளைச் சார்ந்த நோய்கள் ஒன்றும் அணுகாது என்று அவர் மேலும் தெரிவிக்கிறார். துன்பத்தைத் தரும் சில பிணிகளாகிய பசியின்மை, வயிறு உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்ற அஜீரண நோய் நிலைகளில் கடுக்காய் தோல் 9 கிராம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு வகைக்கு 3 கிராம் சேர்த்துச் சாப்பிட உகந்தது. இதில் திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு சரக்குகளையும் ஒன்றாய் இடித்துத் துணியால் சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தண்ணீருடனோ, வெறும் தேனுடன் குழைத்தோ சாப்பிடலாம். வெறும் வெந்நீருடனும் சாப்பிடலாம். உடலில் பலம் வெகு நீண்ட காலம் குன்றாமல் நிலைத்திருக்க, சுமார் 2 கிராம் கடுக்காய்த் தோல் சிறு சிறு துண்டங்களாக்கி சுமார் 15 மி.லி. அளவு பசு நெய்யுடன் நன்றாகப் பொரித்து ஆறிய பிறகு அந்தக் கடுக்காய்த் தோலை கடித்துச் சாப்பிட்டு, அந்த நெய்யையும் உடனே குடித்தால் போதுமானது. கடுக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அகஸ்திய ரஸாயன லேஹ்யம், தசமூலஹரீதகீ லேஹ்யம், அபயாமிருத ரஸாயனம், திரிபலா சூரணம் போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகளை, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வந்தாலும், நீங்கள் கேட்ட கேள்விக்கான சிறந்த விடையாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கண் நோய்க்கு செண்பகம்..!


கண் நோய்க்கு செண்பகம்..! கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், “கஞ்சக்டிவா’ எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும். இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது. வெயில் காலம் முடிந்து, குளிர் ஆரம்பிக்கும் போதும், கடும் மழை ஓய்ந்த பின்னும் இந்த கண்நோய் வேகமாக பரவுகிறது. சித்த மருத்துவத்தில் அதிமந்த நயனரோகம், அக்கரரோகம் என்றழைக்கப்படுகிறது. அக்கரரோகத்தில், நோய் வந்த சிலநாட்களில் தானாகவே குணமாகிவிடும் என்பதால் கண்களுக்கு ஓய்வும், சுத்தமான நீரில் கழுவுவதே ஆரம்ப சிகிச்சையாகும். நீரில் கிருமிநாசினி, ஆண்டிபயாடிக் மருந்துகளைச் சேர்த்து கண்களைக் கழுவலாம். ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள். மைக்கேலியா செம்பகா என்ற தாவரவியல் பெயர்கொண்ட பெரிய செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன. செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.

கண்ணீர் ஒரு கிருமி நாசினி.


கண்ணீர் ஒரு கிருமி நாசினி. பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி. மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும். லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது. இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....!


உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....! நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம். 1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது. சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும். விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும். பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

முதுகு வலி ஏன் வருது தெரியுமா? இன்றைய காலத்தில் நோயில்லாத மனிதரைப் பார்ப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அந்த அளவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நோயானது புகுந்து விளையாடுகிறது. சும்மா சொல்லக்கூடாது, உடலில் வரும் நோய்க்கு முதற்காரணமே நாம் தான். ஆனால் அதை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல், நான் ஒன்றும் செய்யவில்லை, ஆனால் எதற்கு இது வருகிறது என்று தெரியவில்லை என்று சொல்வோம். முதலில் நாம் சரியாக இருந்தால், நமக்கு எந்த ஒரு நோயும் வராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி. இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது அந்த முதுகு வலி ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணம் என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன். நீண்ட நாள் வலி முதுகு அல்லது கழுத்து அல்லது மற்ற இடங்களில் ஏதாவது வலி ஏற்பட்டால், அந்த வலியை சரிசெய்ய நாம் உடலை ஏதேனும் ஒரு வித்தியாசமான நிலையில் நீண்ட நேரம் வைத்திருப்போம். மேலும் தற்காலிகமாக அந்த வலியை நீக்க மேற்கொண்ட அந்த நிலையை எப்போது வலி ஏற்பட்டாலும் பின்பற்றுவோம். ஆகவே அவ்வாறு வித்தியாசமான நிலையில் வைப்பது உடலின் பல பகுதியை பாதித்து, வலி அல்லது பிடிப்பு போன்வற்றை உண்டாக்குகிறது. ஊட்டச்சத்து குறைவு நமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும். அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து, பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும். பரம்பரை ஒருவேளை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதுகு வலி இருப்பின், அது பரம்பரையாக தொற்றிக் கொண்டிருக்கும். இவற்றால் கூட காரணமின்றி வலி ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியைப் போக்குவதற்கு சரியான நிலையில் உட்கார்ந்து வந்தால், சரிசெய்யலாம். அதிக எடை நாம் சரியான நிலையில் எப்போதும் இல்லாததற்கு காரணம் உடல் எடையும் தான். ஏனெனில் இதனால் அவர்களது வயிற்றில் அதிகமான அளவில் கொழுப்புகள் சேர்ந்து, தொப்பையாக வருவதோடு, அந்த தொப்பை நேராக உட்காரவிடாமல், முன்புறமாக இழுக்கிறது. இதனால் முதுகு வளைந்து, கூன் உண்டாகி, இறுதியில் வலியை அதிகமாக்குகிறது. பழக்கம் சில நேரங்களில் நடக்கும் நிலை கூட, முதுகு வலியை ஏற்படுத்தும். உதாரணமாக, நடக்கும் போது தலையை குனிந்து கொண்டு நடக்கும் போது, தன்னை அறியாமலே தோள்பட்டையும் வளையும் நிலை ஏற்படுகிறது. மேலும் ஏதாவது ஒரு எடையுள்ள பொருளை ஒரே பக்கத்தில் தூக்கும் போது அல்லது படுக்கும் போது சரியான நிலையில் படுக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் கூட முதுகு வலி வருதற்கு காரணமாகும். கம்ப்யூட்டர் வேலை முதுகு வலி பெரும்பாலான கம்ப்யூட்டர் முன் வேலை பார்ப்பவர்களுக்கே ஏற்படுகிறது. ஏனெனில் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் போது, கழுத்து மற்றும் தலை சற்று முன்னரும், தோள்பட்டை சற்று வளைந்தும் தான் இருக்கும். இதனால் முதுகை நேராக வைக்காமல், நீண்ட நேரம் வளைந்தே வைத்திருப்பதால், அந்த நிலை பெரும் வலியை உண்டாக்கும். ஃபேஷன் ஃபேஷன் என்ற பெயரில் வந்துள்ள உடைகள் மற்றும் செருப்புகள் கூட இந்த வகையான வலிக்கு முக்கிய காரணங்களாகும். அதிலும் பெண்களுக்கு பென்சில் ஹீல்ஸ், ஹை ஹீல்ஸ், டைட்டான ஆடைகள் என்றும், ஆண்களுக்கு என்றால் நல்ல எடையுள்ள பூட்ஸ், பெல்ட் என்றும் வந்து, அவர்களின் முதுகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் தாங்க முடியாத வலியை கொடுக்கிறது.

வாய் விட்டு அழுதாலும், நோய் பறந்து போகும்!!!


வாய் விட்டு அழுதாலும், நோய் பறந்து போகும்!!! பொதுவாக 'வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்' என்பர். ஆனால் சிரித்தால் மட்டுமல்ல, மனம் விட்டு அழுதால் கூட நோய்கள் ஏதும் அருகில் அணுகாது. சொல்லப்போனால், உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே மனம் தான். மனதில் ஏற்படும் கோளாறுகளே உடல்நலக் கோளாறுகளாக பிரதிபலிக்கின்றன. மனிதராய் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் பிரச்சனைகள், சிரமங்கள் நிச்சயம் இருக்கும். ஆனால் பிரச்சனைகளின் மூலம் ஏற்படும் உணர்சிகளை அடக்குபவரே இங்கு ஏராளம். சோகமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, சிலருக்கு அழுகை பீறிட்டு விடும். ஆனால் அழுகையை பலவீனமாக நினைத்து, அதனை அடக்கி கொள்வோர் அநேகம். அவ்வாறு அழுகை வரும் போது, அதை அடக்கிக் கொள்வதாலே நிறைய நோய்கள் உடலை பற்றிக் கொள்கின்றன. பெரும்பாலான மக்கள் கண்ணீரை உணர்ச்சி பெருக்கெடுத்து வரும் பலவீனத்தால் ஏற்படுவது என்றே பார்க்கின்றனர். ஆனால் கண்ணீர் என்பது உடல் மற்றும் மனதில் உள்ள அழுத்தத்தை போக்குவது என்று பலரும் உணருவதில்லை. அழுகை என்பது நாம் அடக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகளை, அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, வெறுப்பாக இருந்தாலும் சரி, வெளிபடுத்துவதற்கு உதவுகிறது. இது மட்டுமின்றி அழுவதால் நிறைய ஆரோக்கிய நலன்களும் உள்ளன. அழுவதை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். மேலும் கண்ணீரிடையே பல வகையான இரசாயன வேறுபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கண்ணீர்களில் உள்ள வகைகள் மற்றும் அவ்வாறு அழுவதனால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களைப் பற்றி இங்கே காண்போம். உணர்ச்சி பெருக்கால் வரும் கண்ணீர் இந்த வகையான மக்கள் உணர்ச்சி வயப்படும் போதெல்லாம், கண்ணீர் சிந்துவர். இது சோகம், அழுத்தம், விரக்தி மற்றும் ஆனந்த கண்ணீராக இருக்கலாம். அடிப்படை சார்ந்த கண்ணீர் இவ்வகை கண்ணீர், பைலாக்ரைமல் (bylachrymal) என்னும் சுரப்பிகள் வெளியிடும் திரவம் ஆகும். இது பாக்டீரியா தாக்குதல்களில் இருந்து, விழிகளை பாதுகாக்க அத்தியாவசியமானதாகும். தற்காத்துக் கொள்ள வெளியாகும் கண்ணீர் இது தூசிகள் கண்களில் படும்போது, அதிலிருந்து கண்கள் பாதுகாத்து கொள்ள வெளியிடும். இவ்வகை கண்ணீர்கள் கண்களில் அன்னிச்சையான செயலாகும். கண் பார்வை மேம்படும் கண்ணீர் பார்வையை மேம்படுத்த உதவும். கண்களில் உள்ள விழி திரைகள் மற்றும் சவ்வுகள் நீரற்று காய்ந்து போனால், பார்வையில் தடுமாற்றம் ஏற்படும். அந்த நிலையில் அழுதால், கண்ணீரானது விழித்திரை மற்றும் சவ்வுகளை ஈரப்படுத்தி பார்வையை சரிசெய்யும். கண்களை சுத்தம் செய்யும் மற்ற பகுதிகளில் இருப்பதை போல விழிகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். ஆனால் கண்ணீரில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்க்கும் பண்புகள் (Anti Bacterial Activity) உள்ளன. வெறும் ஐந்து நிமிடங்களில் 90 முதல் 95 சதவீதம் வரை, கண்களில் இருக்க கூடிய பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய திரவமான லைசோஜோம் (Lisozom) கண்ணீரில் இருக்கின்றது. மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் மன அழுத்தம் மற்றும் கவலையுடன் இருக்கும் போது, உடலில் உள்ள இரசாயன நிலைகளில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அதனை சரிசெய்ய கண்ணீர் உதவுகிறது. ஒருவர் கவலையான சூழ்நிலையில் இருக்கும் பொழுது, மனம் விட்டு அழுதால் மன இறுக்கம் மற்றும் அழுத்தம் இருக்காது என்று கூறப்படுகிறது. உணர்ச்சி பெருக்கால் வரும் கண்ணீர் அட்ரினோகார்ட்டிகாட்ரோபிக் (Adrenocorticotropic) மற்றும் லூசின் (Leucine) என்ற உடலில் இருந்து மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன்களை வெளிபடுத்துகின்றன . நச்சுப் பொருட்களை போக்கும் சாதாரணமாக வெளிப்படும் கண்ணீரில் 95 சதவீதம் தண்ணீர் இருப்பதாகவும், உணர்ச்சி பெருக்கால் வெளியாகும் கண்ணீரில் மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றன. மேலும் உணர்ச்சியால் உடலில் ஏற்படும் அழுத்தங்களினால் உருவாகும் நச்சுகள் கூட, கண்ணீர் வழியாக வெளியேற்றப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண் உறுத்திகளிடம் இருந்து பாதுகாப்பு வெங்காயம் நறுக்கும் போது கண்களில் ஏன் கண்ணீர் ஏற்படுவது என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம். ஏனெனில் வெங்காயத்தில் கண்களை எரிச்சலடைய செய்யக்கூடிய என்சைம்கள் உள்ளன. அது போலவே ஏதேனும் தூசி பட்டாலும், கண்கள் நீரை சிந்தும். இந்த வகை அழுகை கண்களை சுத்தப்படுத்தி தூசி போன்ற அந்நிய பொருட்கள் கண்களை பாதிக்காமல் வெளியேற்றுகிறது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் அளிக்கிறது உணர்ச்சி பெருக்கால் வெளியாகும் கண்ணீரில் 24 சதவீதம் வரை அல்புமின் (albumin) புரதம் உள்ளது. இது உடலின் ஜீவத்துவ பரிணாமத்தை மேம்படுத்துகிறது. அழுகை உடலில் மன அழுத்தத்தால் ஏற்படக் கூடிய நோய்களான இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்களில் இருந்து காக்கிறது. ஆறுதலாக உணர வைக்கும் வாழ்வில் நிறைய பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை சந்தித்தாலும், அழுகை சிறந்த மன ஆறுதலை தரும். மேலும் கண்ணீர் விட்டு அழுத பின் மூளை, இதயம் சரியான நிலையில் செயல்பட ஆரம்பித்துவிடும். எனவே தான் அழுதப் பின்னர், உடல் அளவில் மிகவும் ஆறுதலாக உணர முடியும். ஆகவே அழ நினைத்தால் உடனே அழுது விட வேண்டும். அப்போது பலவீனம் என்று நினைத்து அதனை மனதிலேயே அடக்கி வைத்து கொண்டால், உடலுக்கும் மனதிற்கும் கேடு விளையும். அதுமட்டுமின்றி, அழுவதால் இவ்வளவு நன்மை என்று தெரிந்த பின்னும் அழுவதற்கு யோசிக்க கூடாது.

பவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்: ஆய்வில் தகவல்


பவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்: ஆய்வில் தகவல் முகத்திற்கு போடும் டால்கம் பவுடரை உபயோகிப்பதன் மூலம் கருப்பை புற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வியர்வை நாற்றத்தை தடுக்க, ஈரப்பதத்தை உறிஞ்சும் முகப்பவுடர்களை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் இது சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். என்றெல்லாம் பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், அதிகாரப் பூர்வமாக இந்த கூற்று இதுவரை நிரூபிக்கப்பட்டதில்லை. ஆனால், ரகசிய உயிர்க் கொல்லி என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். கருப்பை புற்றுநோய் 8 ஆயிரத்து 525 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முகப் பவுடரை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து ஆய்வு இங்கிலாந்தின் பிரிகாம் மற்றும் பாஸ்டன் ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள் 8 வகையிலான ஆய்வுகளை மேற்கொண்ட வகையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட கையேட்டில் கூறப்பட்டுள்ளது. பவுடர் போடாதீங்க குளியலுக்கு பின்னர் நறுமணத்திற்காக உடல் முழுவதும் பவுடர் பூசிக் கொள்வது பலரது வாடிக்கை. மிக முக்கியமாக அந்தரங்க உறுப்புகளில் பவுடர் போட்டுக் கொள்வது போன்ற பழக்கத்தினால் கருப்பை புற்று நோய் தாக்கும் அபாயம் 24 சதவீதம் அதிகம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிர் கொல்லி ரசாயனங்கள் முகத்துக்கு பூசும் டால்கம் பவுடரில் சிலிகேட் டால்க் போன்ற ரசாயனங்கள் இருப்பதால், அவை புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென் மட்டுமல்லாது, நுரையீரலில் தொற்றும் ஏற்படுத்தும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. லிப்ஸ்டிக் போன்ற மேக் அப் சாதனங்கள் பயன்படுத்தினால்தான் புற்றுநோய் பாதிப்பு வரும் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது பவுடர் போட்டாலே கருப்பை புற்றுநோய் வரும் என்று பீதியை கிளப்புகின்றனர்.

ஜலதோஷத்திற்கான எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!!!


ஜலதோஷத்திற்கான எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!!! பொதுவாக குளிர்காலம் வரும் பொழுது ஜலதோஷமும் சேர்ந்து வரும். குளிர்காலம் தொடங்கியதும் சில வைரஸ்கள் சுறுசுறுப்பாக உடலில் நுழைத்து செயலில் ஈடுபட்டு மூக்கு ஒழுகுதல் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை தூண்டுவதற்கான காலமாக இந்த குளிர்காலம் அமைகிறது. ஜலதோஷம் சாதாரணமாக மூக்கில் தொடங்குகிறது. ஆனால் மெதுவாக உடல் முழுவதையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்த ஜலதோஷம் தொடங்கியதற்கான சில அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை புண், குளிர், காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவை. மேலும் குளிரால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பலவீனமாக மற்றும் மந்தமாக காணப்படுகிறார். இந்த பருவத்தில் குளிரை தவிர்க்க முடியாது. இதற்கு செயற்கை மருந்துகளும் எப்போதும் முழுமையான நிவாரணம் வழங்குவதில்லை. ஆனால் சில இயற்கை வைத்தியங்கள் மூலம் குணப்படுத்த முடியும். இப்போது அந்த இயற்கை வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போம். வரும் முன் காப்போம் தொண்டை அடைப்பு மற்றும் ஜலதோஷம் பிடித்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்தல் வேண்டும். இதனால் உடலினுள் வைரஸ்கள் மேலும் நுழைவதை தடுக்க இயலும். நீராவி பிடித்தல் நீராவி பிடித்தால் மூக்கடைப்பு மற்றும் மாரடைப்பிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். சூடான நீராவி சுவாச பாதையில் இருக்கும் கிருமிகளை கொல்லும். மேலும் இது மென்மையான நாசி திசுக்களை, சூடான நீராவி காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரு ஸ்டீம் இன்ஹேலர் இல்லாத நிலையில், சுடு தண்ணீரை பயன்படுத்தலாம். ஜலதோஷம் வருவதுப் போல் தோன்றினால், நீராவி பிடித்தலால் இதனை தடுக்க இயலும். ஏற்கனவே ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், ஜலதோஷ வலி நிவாரணி மற்றும் ஸ்டீமரை பயன்படுத்துதல் வேண்டும். இஞ்சி டீ ஆவி பறக்கும் சூடான இஞ்சி டீ குடித்தால், ஜலதோஷத்தை எளிமையாகப் போக்கலாம். புதினா டீ புதினா மற்றும் துளசி இலைகள் சேர்க்கப்பட்ட டீயை ஜலதோஷத்தின் போது குடித்தால், தொண்டை மற்றும் சுவாச பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குணமாகும். சூடான ரசம் புளி மற்றும் கருப்பு மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் சூடான ரசம், உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேற உதவுகிறது. மேலும் மூக்கு மற்றும் கண்களில் நீர்பெருக்கெடுப்பால், நாசி பாதையில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகின்றது. பூண்டு ரசம் பூண்டு ரசம், ஒரு பழமையான முறை. இது ஜலதோஷத்தின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. மேலும் பூண்டு ஒரு ஒருங்கிணைந்த சுவை மணத்தின் விளைவுக்காகவும் ரசத்தில் சேர்க்கப்படுகிறது. மஞ்சள் தூள் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கவும் செய்யலாம். ஏனெனில் மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அது ஒரு பயனுள்ள தீர்வாகும் . வைட்டமின் சி வைட்டமின் சி, ஒரு தொற்று எதிர்ப்பு மருந்தாகும், ஜலதோஷத்திற்கு நன்கு அறியப்பட்ட மருந்தாக உள்ளது. எனவே ஒரு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து குடிப்பதால், உடலுக்கு எதிப்பு சக்தியானது அதிகரிக்கும். துளசி இலைகள் குழந்தைகளுக்கு மூக்கு அடைத்திருந்தால், தேனுடன் துளசி இலை சாற்றை கலந்து ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம். பெரியவர்கள் துளசி இலையை மென்று சாப்பிடலாம். சுத்தமான கைகள் உணவு பொருட்கள் தொடர்பான எதையும் கையாளுவதற்கு முன்பு கிருமி நாசினியைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும். இந்த செயல் உடலினுள் ஜலதோஷம் காரணமாக நுழையும் நுண்ணுயிரிகளைக் குறைக்கிறது.

முல்லைப் பூவின் மருத்துவ குணம்:


முல்லைப் பூவின் மருத்துவ குணம்: முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது. முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும். முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும். முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும். ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும். உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும். முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

பேஸ் வாஷ்… ஹேண்ட் வாஷ்… ப்ளோர் கிளீனர்… : பயன்படுத்துபவரா நீங்கள்? மிஞ்சினால் ஆபத்து தான்! எச்சரிக்கை


பேஸ் வாஷ்… ஹேண்ட் வாஷ்… ப்ளோர் கிளீனர்… : பயன்படுத்துபவரா நீங்கள்? மிஞ்சினால் ஆபத்து தான்! எச்சரிக்கை பெரிய பெரிய மால்கள் வந்து விட்டன. இந்த பல்பொருள் அங்காடிகளில், காய்கறி முதல் கம்ப்யூட்டர் வரை விற்கப்படுகின்றன. அதிலும், உணவுப்பொருட்களாகட்டும், சோப்பு சமாச்சாரங்களாகட்டும் எல்லாமே கவர்ச்சிகர பாட்டில்கள், பாக்கெட்களில் கண்களை கவர்கின்றன. அதுபோல, தரையை சுத்தம் செய்ய ஏகப்பட்ட “ப்ளோர் கிளீனர்’கள் வந்து விட்டன. அது மட்டுமில்லை, உடலை “கமகம’ என்று வைத்துக் கொள்ள “டியோடரன்ட்’களும் வந்து விட்டன. இப்படி கவர்ச்சிகர பிளாஸ்டிக் பாட்டில்களில் ஏகப்பட்ட பிராண்ட்களில் இது போன்ற “டிடெர்ஜென்ட்’கள் குவிந்துள்ளன. அவற்றில் என்ன ரசாயனம் கலக்கப்படுகிறது, அது உடலுக்கு நல்லதா, தோலுக்கு பாதுகாப்பானதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. இப்போது பல வகை “டிடெர்ஜென்ட்’கள் வந்தாலும், எல்லாமே நல்லவை தான்; சில முக்கிய பிராண்ட்களில் விற்பனையாகும் அவை தரமானவை தான். ஆனால், தரமற்ற பல கவர்ச்சிகர பிராண்ட்களும் வலம் வருகின்றன. தரமான பொருட்களை வாங்கினால், அவற்றை மிதமாக பயன்படுத்த வேண்டும். தரமற்ற பொருட்களை, விலை மலிவானவற்றை வாங்கவே கூடாது. சில ஆண்டு முன்வரை, மருத்துவமனைகளில் மட்டும் இது போன்ற பல வகை “டிடெர்ஜென்ட்’கள் பயன்படுத்தப் பட்டு வந்தன. மருத்துவமனைக்கு தான் இந்த பொருட்களை நிறுவனங்கள் விற்றும் வந்தன. ஆனால், தனியார் நிறுவன வர்த்தகம், எதையும் விற்று காசாக்கலாம் என்று இறங்கியதன் விளைவு இன்று, ஒவ்வொருவரும் நடமாடும் மருத்துவமனை போல ஆகி விட்டனர். “டிடெர்ஜென்ட்’களில் பெரும்பாலும் “ஆன்டி பாக்டீரியல் கெமிக்கல்’ சேர்க்கப்பட்டுள்ளது. பாக்டீரியா கிருமிகளை கொல்லும் ரசாயனங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக இருந்தாலோ, அடிக்கடி பயன்படுத்தினாலோ ஆபத்து தான். அடிக்கடி கையை சுத்தம் செய்வது நல்லது தான். அதுவே டாக்டர்கள் சொல்லும் போது, “சந்தேகத்தின் பேரில் அடிக்கடி கையை அலம்புவதும் கெடுதல் தான். தோல், தசைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி விடும்’ என்று எச்சரிக்கின்றனர். அதுபோலத்தான், “டிடெர்ஜென்ட்’களும். அடிக் கடி மற்றும் அதிகமாக பயன்படுத்துவதோ ஆபத்தானது. குறிப்பாக, தோல் தான் முதலில் பாதிக்கப்படும். தரமான கம்பெனிகள் தயாரித்த “பேஸ் வாஷ்’கள் விற்பனை செய்யப்படுகின்றன; அது போல, விலை மலிவு “பேஸ் வாஷ்’களும் சந்தையில் மலிவாக குவிந்துள்ளன. இவற்றை பயன்படுத்தும் இளைய தலைமுறையினர் காசுக்கு ஏற்ப வாங்கிக்கொள்கின்றனர். தரத்தை பார்க்காமல், விலையை பார்த்து வாங்குவதால், சருமத்துக்கு தான் பாதிப்பு அதிகம். போகப்போக சொறி, சிரங்கு பாதிப்புகள் வரும். “ஹேண்ட் வாஷ்’ என்பது, கையில் உள்ள பாக்டீரியா கிருமிகளை கொல்வதற்காக, கையை சுத்தமாக வைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள டாக்டர், நர்ஸ்கள் தான், ஆபரேஷனுக்கு முன் இதை பயன்படுத்துவர். அவர்கள் தேவைக்கு மட்டும் தான் பயன் படுத்தி வந்தனர். ஆனால், இப்போது வீட்டுக்கு வீடு இந்த பாட்டில் தான் காணப் படுகின்றன. வாஷ் பேசினில் கையை அலம்பும் போது, இந்த ரசாயன கலவையை கையில் தேய்த்து, தண்ணீரில் சுத்தம் செய்வது வாடிக்கையாகி விட்டது. கைகளை மட்டுமின்றி, முகத்தையும் சிலர் இதனால் சுத்தம் செய்கின்றனர். இது மிக மிக ஆபத்து. குறிப்பாக பெண்களுக்கு முகத்தின் எண்ணெய்ப்பசை போய், சொறசொற…என்றாகி விடும். இந்த வகை “டிடெர்ஜென்ட்’களை அடிக்கடி , அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், கெட்ட பாக்டீரியா மட்டுமல்ல, நல்ல பாக்டீரியாக்களும் நம் உடலில் இருந்து நீங்கி விடும் ஆபத்தும் உண்டு. அப்படி நீங்கி விடும் போது, கெட்ட பாக்டீரியா எளிதில் நுழைந்து விடுகிறது. தொற்றுநோய் முதல் பெரிய நோய்கள் வரை வர இது காரணமாகி விடுகிறது. நிமோனியா, காலரா போன்ற வியாதிகள் எளிதில் வரும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைய இந்த வகை “டிடெர்ஜென்ட்’களும் காரணம். இந்த வகை டிடெர்ஜென்ட்களை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், மிதமாக பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். குளிக்காமல் இருப்பது தெரியாமல் இருக்க, பெர்ப்யூம்களை உடலில் தெளித்துக் கொள்வதால், பல வியாதிகள் வரும். கவர்ச்சிகரமான பாக்கெட்டை பார்த்தவுடன் இளம் வயதினர் வாங்கி விடுகின்றனர். அதை வாங்கிப் பயன்படுத்திய பின் பாதிப்பு வந்தால், டாக்டர் ஆலோசனைப்படி, பழையபடி சாதா சோப்புக்கு வந்து விடுகின்றனர். நீங்கள் அந்த நிலைக்கு போக வேண்டாமே…! இப்போதே புரிந்து கொண்டு பயன்படுத்துங்களேன்!

குடல் புண்(Alsar) பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!!


குடல் புண்(Alsar) பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!! இன்றைய பரபரப்பான உலகில் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் புண் நோய். இந்த நோயின் அறிகுறிகள், நோய் தாக்குவதற்கான காரணங்கள், குடல் புண்னின் வகைகள், நோயின் பாதிப்புகள் என்ன என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம். குடல் புண்ணின்(Alsar) அறிகுறிகள் : வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கும் குடல் புண் நோய் இருக்கலாம். குடல் புண்(Alsar) என்றால் என்ன? இரைப்பையும் சிறுகுடலும் இணைந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம். குடல் புண்(Alsar) ஏற்படுவதற்கான காரணங்கள் : குடல் புண் ஏற்படுவதற்கான தெளிவான காரணங்கள் இதுவரை வரையறுக்க படவில்லை என்றாலும், புகை பிடித்தல், புகையிலையை வாயில் போட்டு சுவைத்தல், மது அருந்துதல், மற்றும் சில வகை மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல். குடல் புண்(Alsar) வகைகள் : 1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் . 2) சிறு குடலில் ஏற்படும் குடல் புண். குடல் புண்(Alsar) இருப்பதை அறிந்து கொள்ளவது எப்படி ? காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம். வயிற்று பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது. சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் சாப்பிடும் அளவுக்கேற்ப இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம். சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். குடல் புண்ணுக்கு(Alsar) மருத்துவம் செய்யாமல் விட்டால் : குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும். இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.. குடல் புண்ணுக்கு(Alsar) மருத்துவம் : குடல் புண்ணுக்கு மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். குடல் புண்(Alsar) உள்ளவர்கள் செய்ய வேண்டியவை : 1. குறைந்த உணவை அடிக்கடி சாப்பிட வேண்டும் 2. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். 3. வாழைப் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். 4. தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். 5. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். 6. இருக்கமாக உடை அணியக் கூடாது. 7. யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும். 8. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 9. மருத்துவர் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். குடல் புண்(Alsar) உள்ளவர்கள் செய்யக்கூடாதவை : 1. புகைபிடிக்கக் கூடாது. 2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. 3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது. 4. நடு இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும். 5. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். 6. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது. 7. அவசரப்படக் கூடாது. 8. அதிகமாக கவலைப்படக் கூடாது.

கற்பூரவல்லி


கற்பூரவல்லி கற்பூரவல்லி (Coleus aromaticus) இது ஓர் அற்புதமான மூலிகை செடி. இதன் தாயகம் இந்தியாதான். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. இதன் வேறு பெயர்கள் - ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ். வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டது. எப்படி சாப்பிடலாம்? கற்பூரவல்லி இலைகளை தேங்காய், பருப்பு, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சட்னியாக செய்து சாப்பிடலாம். இதன் இலைகளை நன்கு கழுவி, கடலை மாவு சேர்த்து, பஜ்ஜி, பகோடா செய்து சாப்பிடலாம். என்ன பல‌ன்கள்? கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும். இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும். உடலின் சளி நீங்க இலைகளை அரைத்து நீர்கலந்து கொதிக்க வைத்து ஏலக்காய், கிராம்பு (சிறிதளவு) மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து 3 நாட்களுக்கு தினசரி 2 வேளை பருகி வரவும்.

உடல் அழகை கெடுக்கும் தழும்பை மறையவைக்கும் இயற்கை மருத்துவ முறை.!


உடல் அழகை கெடுக்கும் தழும்பை மறையவைக்கும் இயற்கை மருத்துவ முறை.! உடல் அழகை கெடுப்பதில் தழும்புகள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. தழும்புகள் பொதுவாக தீகாயத்தினாலோ, விபத்தினாலோ அல்லது அலர்ஜியினாலோ ஏற்படுகிறது. சில வகை தழும்பை மறைய வைக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு பலனும் இருப்பதில்லை. ஆனால அத்தகைய தழும்புகளையும் மறைய வைக்கும் சில இயற்கை மருத்துவ பொருட்களை பற்றி இங்கு காண்போம். கற்றாழை கற்றாழையில் உள்ள ஜெல்லானது மருத்துவ துறையில் அதிகமாக பயன்படுத்தும் மிக சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் பளபளக்கும். தக்காளி சாறு தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும். எலுமிச்சை சாறு சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும். பாதாம் எண்ணெய் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும். பால் பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது. எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம். ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.