ஒரு எலுமிச்சை ஒரு டஜன்
வாதநோய்
வாதநோயினால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை சரிசமமாக நறுக்கி, ஒரு பகுதியின் சாற்றை பிழிந்து, ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனில் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் தொடர்ந்து அருந்தினால் வாத நோய் படிப்படியாக தணியும்.
இருமலுக்கு இதம்
இருமல் ஏற்பட்டு சளியை வெளியேற்றி வருபவர்களுக்கு எலுமிச்சம் பழம் உடனடி பலன் அளிக்கிறது. கோழி முட்டையின் வெள்ளை ஓட்டை சுத்தம் செய்து இரண்டரை கிராம் உள்ள ஓட்டை அம்மியில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு மைபோல் அரைக்க வேண்டும். நெல்லிக்காய் பரிமாணம் எடுத்து தேக்கரண்டியளவு இஞ்சி சாற்றில் குழைத்து காலை, மாலை ஒரு வாரம் கொடுக்க சளி, இருமல் பூரணமாக குணமடையும்.
நாக்குப்புண் உடலில் உஷ்ணம் அதிகரிப்பால் பல் ஈறுகள் வெந்து புண்கள் ஏற்படும். இதனால் பல்வலி ஏற்பட்டு பற்கள் ஆட்டம் காணும். நாவில் புண் ஏற்பட்டு, வாய் துர்நாற்றமும் வீசும். இதற்கு ஒரு டம்ளர் வெந்நீரில் பாதியளவு எலுமிச்சை சாற்றை கலந்து துணியில் வடிகட்டி சூட்டுடன் வாயை கொப்பளிக்க வேண்டும். காலை, மாலை இருவேளையாக 3 வேளை இவ்வாறு கொப்பளித்தால் ஈர்ப்புண், நாக்குப் புண் குணமாகும்.
சுகபேதியை நிறுத்த
சாப்பிட்டவுடன் சிலருக்கு அளவு மீறி பேதியாகும்.இதனால் களைப்பு ஏற்படும். பார்வை கிறுகிறுத்து உடல் உஷ்ணம் தணியும். இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து உடனே உட்கொள்ள வயிற்றுபோக்கு நிற்கும். பின்னர் கஞ்சிபோன்ற லேசான ஆகாரம் அளிக்க வேண்டும்.
கருப்பு நிறம் மாற
சிலரது உடல் கருநிறமாக இருக்கும். இவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சம் சாற்றை பிழிந்து சிறிதளவு உப்பு சேர்த்து காலையில் மட்டும் ஆகாரத்திற்கு பின்னர் 40 நாள் சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் சற்று வெளுக்கும்.
வயிற்று கடுப்பிற்கு
அடிக்கடி வயிற்று கடுப்பு ஏற்படுபவர்கள் ஒரு டம்ளர் இளநீரில் எலுமிச்சம் பழத்தின் ஒரு பகுதியை பிழிந்து நன்றாக கலந்து காலையில் மட்டும் 3 நாட்கள் சாப்பிட சுகம் ஏற்படும்.
கர்ப்பவதிகளின் இரத்தபேதி சரியாக
சில கர்ப்பவதிகளுக்கு ரத்தபேதி ஏற்பட்டு சதா ரத்தம் வெளியேறும். இது தொடர்ந்தால் உடலில் ரத்தம் குறைந்து ஆபத்தை உண்டு பண்ணும். இதற்கு அரை டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறும், ஒரு தேக்கரண்டியளவு சிற்றாமணக்கு எண்ணெயும், ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கி காலையில் மட்டும் 5 நாட்கள் தர குணமாகும்.
அஜீரணம் பித்த கிறுகிறுப்பு
அஜீரணம், பித்த கிறுகிறுப்பு, வாயுத்தொல்லை, புளியேப்பம் போன்றவையால் பாதிப்பு ஏற்படும்போது இஞ்சி சொரசம் அருமருந்தாகும். மேற்கட்ட பாதிப்புகள் ஏற்படும் போது இரண்டரை கிராம் முதல் 5 கிராம் வரை காலை, மாலை இருவேளை சாப்பிட குணமாகும்.
வயிற்றுவலி
அதிக உஷ்ணம், அஜீரணம், வாயு தொந்தரவு காரணமாக 3 வகைகளில் வயிற்று வலி ஏற்படும். குடல்புண் உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடன் வயிற்றில் எரிச்சலும், வலியும் உண்டாகும். இதுபோன்ற வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்து விதைகளை எடுத்து விட்டு ஒரு சிட்டிகை ஆப்பச்சோடாவை அதில் போட்டுக் கலக்கினால் அது சாதம் பொங்குவது போல் நுரையுடன் பொங்கும். அந்த சமயம் அதை அப்படியே உட்கொண்டால், எந்தவிதமான வயிற்று வலியானாலும் கால்மணி நேரத்தில் சரியாகும்.
பல்வலி
பல்வலி ஏற்படும்போது உப்பைத்தூள் செய்து எலுமிச்சை சாறு கலந்து பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும்.
சொரி சிரங்கு
இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் இதே அளவு தேங்காய் எண்ணெய் கலந்து குழப்பி, சொரி சிரங்கு உள்ள இடத்தை கிருமி நாசினியால் சுத்தம் செய்து இந்த கலவையை பூசி வர குணமாகும்.
பேன்பொடுகு
ஒரு டம்ளர் பாசிப்பயிறை எலுமிச்சை சாறு விட்டு மைபோல அரைத்து எடுத்து மூக்குப்பொடித் தூள் நாலில் ஒரு பங்கு சேர்த்து குழப்பி தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து தலைமுழுக வேண்டும். இவ்வாறு 3 நாள் செய்ய பேன் பொடுகு ஒழிந்து கூந்தல் சுத்தமாகும்.
ஒருபக்க தலைவலி
ஒரு பக்க தலைவலி, இருபக்க தலைவலி ஏற்படுகிறவர்கள், எலுமிச்சை தோலை மட்டும் மைபோல அரைத்து ஒரு ரூபாய் அகலத்திற்கு பொட்டில் கனமாக பற்றுப்போட்டால் 10 நிமிடத்தில் தலைவலி நிற்கும்.
தேள், தேனீ கொட்டினால்
தேள், தேனீ, குளவி கொட்டினால் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை கடுப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் நன்றாக அழுத்தி 10 நிமிடம் தேய்த்தால் விஷம் இறங்கும். கடுப்பு நிற்கும்.
பித்தமயக்கம் ஏற்பட்டால்
பித்தம் அதிகரித்தால் காலையில் ஒருவித மயக்கம் உண்டாகும். தலை சுற்றும். இதற்கு ஒரு எலுமிச்சம் பழத்தின் பாதிபகுதியை பிழிந்து அந்த சாற்றுடன் தேக்கரண்டி சீரகம், சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல அரைத்து வாயில் விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும். ஏழு நாட்கள் சாப்பிட்டால் பித்தம் சம்மந்தமான சகல நோய்களும் குணமாகும்.
பித்தவாந்தி நிறுத்த
பித்தம் அதிகரிப்பால் சிலருக்கு காலையில் பச்சை நிறம் கலந்த பித்தநீர் வாந்தியாகும். இதனை நிறுத்த ஒருசட்டியை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தை போட்டு பொன் வறுவலாக வறுத்து சிவந்து வரும் போது ஒரு தேக்கரண்டியளவு சுத்தமான தேனை விட வேண்டும். பொங்கும் போது ஒரு எலுமிச்சம் பழத்தின் பாதி சாற்றை விட்டு உடனே டம்ளர் அளவு தண்ணீரை விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வடிகட்டி காலை வேளையில் மட்டும் சூட்டுடன் அருந்திட வேண்டும். இவ்வாறு 3 நாட்கள் சாப்பிட பித்த வாந்தி நிற்கும்.
சருமம் மிருதுவாக
தேகம் வறட்சி காரணமாக சுரசுரப்பாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் பூசி வைத்திருந்து குளித்து வந்தால் தோல் மிருதுவாகும்.
|
No comments:
Post a Comment