Saturday, August 23, 2014

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
விளாம் பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ வகைகளில் ஒன்று. இதன் மருத்துவ மகத்துவத்தை படித்துப்பாருங்கள். அடுத்த முறை எங்கு 
விளாம் பழத்தைப்பார்த்தாலும் வாங்கி சுவைப்பீர்கள்.

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் !

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் !

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....!

அனைவருக்கும் பயனுள்ள இந்த தகவலை ஷேர் செய்யலாமே...!பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் !

இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...? ...
உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது .
தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது.
உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.

ஆண்களின் மலட்டுதன்மையை போக்கும் அத்திப்பழம்

ஆண்களின் மலட்டுதன்மையை போக்கும் அத்திப்பழம்

அத்திப்பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது

Sunday, August 17, 2014

இள நரை மறையணுமா?

பாட்டி வைத்தியம்

இள நரை மறையணுமா?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?

நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?

நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவுகளா, துரித உணவுகளா என்பது பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி, எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் விளக்கமளிக்கிறார்.

சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்

சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

நட்சத்திர பழம்

நட்சத்திர பழம்
பழங்களின் மருத்துவப் பயன்கள் எண்ணற்றவை. உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. நட்சத்திரப் பழத்தின் மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோம்.

Friday, August 15, 2014

குழந்தைகள் பிரளி (பேதி)

குழந்தைகள் பிரளி (பேதி)

இது அசீரணத்தால் வரக்கூடியது தாய்பால் கொடுக்கும் பெண்கள் புருஷனோடு சையோகம் செய்து விட்டு பிறகு பிள்ளைக்கு பாலுட்டினால் அந்தப்பால் காமப்பால் ஆவதால் குழந்தைகளுக்கு வயிறுப்பசம் வந்து பல நிறங்களில் பேதியாகும் இப்பிணி எந்த மருந்துக்கும் வசப்படாது 

கண் படலத்திற்கு

கண் படலத்திற்கு
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தேவையான சரக்குகள் :
சுத்தமான தேன் 250 கிராம்
பசுவின் நெய் 300 கிராம்

தீராத வயிற்று நோய்கள் நீங்க

தீராத வயிற்று நோய்கள் நீங்க
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
குழந்தைகள் வயிற்றுவலி வாயு ' குன்மம் முதலிய நோய்களால் கஷ்டப்பட்டால் மூன்று பெரிய மேஜைக் கரண்டி சத குப்பை மூன்று கரண்டி ரோஜா மொட்டு இரண்டையும் இடித்துக் 260 மி.லி.கொதிக்கிற தண்ணீர் விட்டுவைத்து மூன்று மணி நேரம் கழித்து வடிகட்டி ஒரு தரத்திற்கு இரண்டு தேக்கரண்டி வீதம் 15 மி.லி. கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க வயிற்றுவலி நின்று உடனே ஸுகமாகும் நன்றி திருசிற்றம்பலம்

மூத்திர அடைப்பு

மூத்திர அடைப்பு
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதை சதையடைப்பு என்பர் சிலர் கல்லடைப்பு என்பர் சில மருத்துவர்கள் ஆங்கிலத்தில் Prostate enlargement என்பர்
இதர்க்கு மருந்து

முடக்கு வாதம் ( rheumatism) கை கால் முட்டிகளில் வீக்கம்

முடக்கு வாதம் ( rheumatism)
கை கால் முட்டிகளில் வீக்கம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உஷ்ண மிகையினால் பிரிக்கப்பட்ட நீர் முட்டிகளில் தங்கி இப்பிணி மிக்க உபத்திரவத்தைக் கொடுக்கும் இதர்க்கு முடக்குவாதம் மென்பர் சிலர் தோள்களில் கண்ணுக்குத் தெறியாத வீக்கங்கண்டு கை தூக்க முடியாமல் சங்கடப்படுவர் கையை ஆட்டும்போது பொறுக்க முடியாத வலியுமிருக்கும் இதற்கு ஆங்கில மருத்துவத்தில் arthritis rheumatism என்பர் ரத்தக்குறைவினாலும் நரம்பு தளர்ச்சினாலும் அல்லது மனச் சஞ்சலத்தினாலும் இப்பிணி வருவதுண்டு கணுக்களில் வலியும் வீக்கமும் ஏற்படும் இப்பிணிக்கு முதல் மருந்து புலால் உண்ணுவதை நிறுத்துவதே புலாலில் 100க்கு 90பங்கு அழுக்குத் தண்ணீர்ருள்ளதென்பதை விஞ்ஞான மேதாவிகள் கண்டுபிடித்துள்ளனர் சுலபமாய் சீரணிக்கக்கூடிய காய்கறிப் பொருள்களையே உபயோகம் செய்யவேண்டும் மனக்கவலை ஒதுக்கி வைக்கவேண்டும் 

Wednesday, August 13, 2014

அகத்திக்கீரையும் ஆரோக்கியமும்!...


அகத்திக்கீரையும் ஆரோக்கியமும்!...

இயற்கை உணவு வகைகளில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா? 
********************************************************************************
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ... 
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்

உடல் நலம் பெற ஓர் அற்புத பானம்"

உடல் நலம் பெற ஓர் அற்புத பானம்" 

உடல் நலத்திற்கு மிகவும் நன்மை செய்யக் கூடிய அற்புத பானம் ஒன்றை நண்பர் மின்னஞ்சலித்திருந்தார். 

வெண்டைக்காய் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்"

வெண்டைக்காய் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்"

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (Ladies finger) என்கிறார்கள்.

மீன்சாப்பிட்டால் இதயநோய் எட்டிப் பார்க்காது!!

மீன்சாப்பிட்டால் இதயநோய் எட்டிப் பார்க்காது!! 

முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தைராய்டு பற்றிய தகவல்கள் ..!

தைராய்டு பற்றிய தகவல்கள் ..!

தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?

கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான். இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.

தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?

தயிரின் அற்புதங்கள்

தயிரின் அற்புதங்கள்

''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.' 

கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு:

கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு:

இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

பலாப்பழம் சாப்பிட்டால் ! ! !

பலாப்பழம் சாப்பிட்டால் ! ! !

முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து,நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை ரசம்! ! ! !

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை ரசம்! ! ! !

அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.

பிளம்ஸ் பழங்கள்

பிளம்ஸ் பழங்கள் 

நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ் பழங்கள், ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும் பிளம்ஸ் கனிகளின் உள்ள சத்துக்களை பார்ப்போம்... 

உடலை பாதுகாக்கும் பப்பாளி…..

உடலை பாதுகாக்கும் பப்பாளி….. 

சாதாரணமாக அனைவரும் ஒதுக்கும் அல்லது பெரிதாக அனைவராலும் விரும்பப்படாத பப்பாளி பழத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

பிள்ளைகள் நலம் காக்கும் பேரிக்காய்….பிள்ளைகள் நலம் காக்கும் பேரிக்காய்….

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

“இலந்தை பழம்” (JUJUBI) ஜுஜுபீ


“இலந்தை பழம்” (JUJUBI) ஜுஜுபீ
சிவந்த நிறமாக சிறு நெல்லிக்காயளவிற்கு இருக்கும் இலந்தை பழங்களை சாப்பிடுவதில் பிள்ளைகளுக்கு ஒரே உற்சாகம் தான்.
அப்படியே சாப்பிடப்படும் இந்தப் பழத்திற்கு சமையலறையில் அவ்வளவாக வரவேற்பு இல்லாவிடினும், மேலை நாட்டினர் இதை மிட்டாய், ஊறுகாய் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதில் உபயோகிக்கிறார்கள்.

Saturday, August 9, 2014

உருளைக்கிழங்கு
உருளைக் கிழங்கு இல்லாத உலகம் கற்பனையில் கூட சாத்தியமா என்று தெரியவில்லை. பல் முளைக்காத பருவத்திலேயே உருளைக்கிழங்கின்  சுவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பால்யத்திலேயே தொடங்கும் அந்த உருளைக்கிழங்கு பந்தம், பல் போன காலத்துக்குப் பிறகும்கூட  பிரிய மறுக்கிறது. உணவியல் துறை சர்ச்சைகளில் அதிகம் அடிபட்டது உருளைக்கிழங்காகவே இருக்கும். உருளைக்கிழங்கு நல்லதா, கெட்டதா என்ற  விடை தெரியா கேள்வி, வருடங்கள் கடந்தும் நம்மை விரட்டிக் கொண்டே இருக்கிறது.

கேரட்

கேரட்
விலை உயர்ந்த வைரத்தின் தூய்மையைக் கணக்கிடும் போது கேரட் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். சாப்பிடுகிற கேரட்டுக்கும் இதற்கும்  எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், வைரத்தைப் போல அத்தனை மேன்மையானது சாப்பிடுகிற கேரட். காய்கறிகளிலேயே மிகவும் உன்னதமான  ஒன்று கேரட். அத்தனை வைட்டமின்களையும் சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அற்புதம். மஞ்சள் நிற உணவுகளைத் தவறாமல் சேர்த்துக்  கொள்ள வேண்டும் என்கிறது உணவியல். அதில் நம்பர் ஒன் இடம் கேரட்டுக்கே. மஞ்சள் கலந்த அதன் ஆரஞ்சு நிறத்தில்தான் அடங்கியிருக்கிறது  கேரட்டின் மொத்த ஆரோக்கியமும்.

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களில் ஏராளமான பயன்கள் உள்ளன. பழங்கள் சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கும் தீர்வு உள்ளது. அதுபற்றிய விவரம்:

ஒரு எலுமிச்சை ஒரு டஜன்

ஒரு எலுமிச்சை ஒரு டஜன்

வாதநோய்

வாதநோயினால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை சரிசமமாக நறுக்கி, ஒரு பகுதியின் சாற்றை பிழிந்து, ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனில் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் தொடர்ந்து அருந்தினால் வாத நோய் படிப்படியாக தணியும்.

வெள்ளை பூசணிக்காய்

வெள்ளை பூசணிக்காய்

பூசணிக்காய் என்றதும் நமக்கெல்லாம் திருஷ்டி பொம்மை தான் நினைவுக்கு வரும். மற்றவரது திருஷ்டிகளை எல்லாம் தன் மேல் ஏற்றிக்கொண்டு உடைந்து சிதறும் அந்தப் பூசணிக்காய்க்கோ, அதை உடைப்பவர்களுக்கோ அதன் நற்குணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... பலரும் அதை ஒரு  காயாகவே மதிப்பதில்லை. உடலை இளைக்கச் செய்வதி லிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை  வெள்ளை பூசணிக்குள்  ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான  மருத்துவக் குணங்களே! 

‘‘டயட்டீஷியன்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன்   குறைய உதவும் உன்னத காய் என்பது அதில் முதல் காரணம்’’ எனப்  பெருமையுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்பூசணியின் நல்ல தன்மைகளைப் பற்றி அவர் தருகிற தகவல்கள்,  பூசணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ‘‘ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய  இடமுண்டு. அசிடிட்டி பிரச்னைக்கு பூசணிக்காய் சாறு  மாமருந்து.

‘கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்).  வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு  திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும்  நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும்.

பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு  பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48  கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார்  வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. பூசணிக்காயை பச்சையாக  எடுத்துக் கொண்டால் சளி பிடிப்பதாக சிலர் . அது நிரூபிக்கப்படாதது என்றாலும், அப்படி ஒத்துக் கொள்ளாதவர்கள் பச்சையாக சாப்பிடு வதைத்  தவிர்க்கலாம்.

இத்தனை நல்ல குணங்கள் இருக்கிற காரணத்தினால், தினசரி பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா எனக் கேட்டால், கூடாது என்றுதான்  சொல்வேன். இந்த விதி பூசணிக்காய்க்கு மட்டுமல்ல... எல்லா காய்கறிகளுக்குமே பொருந்தும். சாதத்தையும் பருப்பையும் தவிர, வேறு எந்த  உணவையும் தினசரி உண்பது சரியல்ல. இயற்கையின் படைப்பில் நமக்கு எத்தனையோ காய்கறிகளும், பழங்களும் கிடைக்கிற போது, ஒன்றை  மட்டுமே தொடர்ந்து எடுப்பது தவறு. அது எத்தனை சத்தானதாக இருந்தாலும் அப்படித்தான்...’’ என்கிற தாரிணி கிருஷ்ணன், பூசணிக்காயை வைத்துத்  தயாரிக்கக் கூடிய இரண்டு ஆரோக்கிய ரெசிபியும் தருகிறார்.

எப்படி சமைப்பது?

பூசணி பத்தையை நறுக்கிய பிறகு கழுவாமல், முழு பத்தையையும் கழுவி விட்டு, பிறகு சின்ன துண்டுகளாக நறுக்கி சமைக்கவும். பூசணிக்காய்  சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் மற்ற காய்கறிகளைப் போல நீண்ட நேரம் சமைக்க வேண்டியதில்லை. ரொம்பவும் வெந்துவிட்டால், அது கரைந்து,  கூழாகி விடும். பூசணிக்காய்க்கென தனி ருசி கிடையாது. அத்துடன் சேர்க்கிற மற்ற பொருட்களின் மணத்தையும் ருசியையும் தானும் கிரகித்து  அப்படியே பிரதிபலிக்கக் கூடியது. எனவே, பூசணிக்காயை சூப், கூட்டு, பாயசம், அல்வா, கிரேவி என எதில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். நறுக்கிய  பூசணிக்காயை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனாலும், அதை அதிக பட்சம் 2 நாட்களுக்குள் பயன்படுத்தி விடுவதே நல்லது.

பூசணித் தகவல்கள்

மனநலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி கொண்டதாம் பூசணி. ஆயுர்வேதத்தில் மனநோய்களுக்கான மருந்துத் தயாரிப்பில் பூசணிக்காயின்  பங்கு பிரதானமானது. வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. அல்சர் பாதித்தவர்களுக்கு பூசணிக்காய் சாறு கொடுக்கும் பழக்கம் கிராமங்களில்  உண்டு.ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள், ரத்த தொடர்பான நோய்கள், சிறுநீரகப் பாதை தொடர்பான நோய்கள், சிறுநீரகக்கல் போன்றவற்றுக்கும்  பூசணிக்காய் பலன் தருகிறது. பூசணிக்காயின் அத்தனை பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. அடிபட்ட காயத்தின் மேல் பூசணி இலையைத்  தேய்த்தால் சீக்கிரமே ஆறும்.  பூசணி விதைக்கு, குடல் புழுக்களை அகற்றும் சக்தி உண்டாம்.

எப்படி வாங்குவது?

இப்போதெல்லாம் பூசணி பத்தையாகக் கிடைக்கிறது. அதன் சதைப் பகுதி வெள்ளையாக, மஞ்சள் படராமல், நிறம் மாறாமல் இருக்கவேண்டும். முழு  பூசணிக்காயாக வாங்குவதென்றால் கெட்டியாக இருக்க வேண்டும். நல்ல கனமான, அழுத்தமான காய் சிறந்தது.

‘‘டயட்டீஷியன்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன்   குறைய உதவும் உன்னத காய் என்பது அதில் முதல் காரணம்’’ எனப்  பெருமையுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்பூசணியின் நல்ல தன்மைகளைப் பற்றி அவர் தருகிற தகவல்கள்,  பூசணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ‘‘ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய  இடமுண்டு.

அசிடிட்டி பிரச்னைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து. ‘கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்பது ஒருவகை செரிமானக் கோளாறு  (நெஞ்செரிச்சல்).  வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு  பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10  நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும்.

பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு  பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48  கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார்  வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. பூசணிக்காயை பச்சையாக  எடுத்துக் கொண்டால் சளி பிடிப்பதாக சிலர் . அது நிரூபிக்கப்படாதது என்றாலும், அப்படி ஒத்துக் கொள்ளாதவர்கள் பச்சையாக சாப்பிடு வதைத்  தவிர்க்கலாம்.

இத்தனை நல்ல குணங்கள் இருக்கிற காரணத்தினால், தினசரி பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா எனக் கேட்டால், கூடாது என்றுதான்  சொல்வேன். இந்த விதி பூசணிக்காய்க்கு மட்டுமல்ல... எல்லா காய்கறிகளுக்குமே பொருந்தும். சாதத்தையும் பருப்பையும் தவிர, வேறு எந்த  உணவையும் தினசரி உண்பது சரியல்ல. இயற்கையின் படைப்பில் நமக்கு எத்தனையோ காய்கறிகளும், பழங்களும் கிடைக்கிற போது, ஒன்றை  மட்டுமே தொடர்ந்து எடுப்பது தவறு. அது எத்தனை சத்தானதாக இருந்தாலும் அப்படித்தான்...’’ என்கிற தாரிணி கிருஷ்ணன், பூசணிக்காயை வைத்துத்  தயாரிக்கக் கூடிய இரண்டு ஆரோக்கிய ரெசிபியும் தருகிறார். 

ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் அளித்த இரு ஆரோக்கிய ரெசிபிகளையும் பாரம்பரிய ரெசிபியான காசி அல்வாவையும் செய்து காட்டுகிறார்  சமையல்கலை நிபுணர் சந்திரலேகா ராமமூர்த்தி.

பூசணிக்காய் கூட்டு


என்னென்ன தேவை?


சின்ன துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காய் - 4 கப், உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - அரை  டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - தாளிக்க.

அரைப்பதற்கு..

தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், அரிசி - அரை டீஸ்பூன் (எல்லாவற்றையும் அப்படியே  அரைக்கவும்) அல்லது காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - சிறிது (மிளகாய் முதல் மிளகு  வரை வறுத்து, அத்துடன் பொட்டுக்கடலையை அப்படியே சேர்த்து அரைக்கவும்).

எப்படிச் செய்வது?

பூசணிக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் அரைக்கக் கொடுத்துள்ளதில் முதல்  வகையையும் தேங்காயைத் தவிர்க்க விரும்புவோர் இரண்டாவது முறையிலும் அரைத்துக் கொள்ளவும். வெந்த காயை அடுப்பில் வைத்து, அரைத்த  விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு, தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டுப் பரிமாறவும்.

பூசணிக்காய் சூப்

என்னென்ன தேவை?


பூசணிக்காய் - 1 பெரிய பத்தை, பச்சை மிளகாய் - 1 அல்லது 2, பெரிய வெங்காயம் -1, பயத்தம் பருப்பு (தேவையானால்) - 1 டேபிள்ஸ்பூன், காய்ச்சிய  பால் (தேவையானால்) - 1 கரண்டி, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி சின்னதாக நறுக்கவும். அவரவர் விருப்பப்படி பயத்தம் பருப்பு சேர்த்தோ, தவிர்த்தோ, பூசணிக்காய், நறுக்கிய  வெங்காயம், பச்சை மிளகாயுடன் அளவாகத் தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் 2 விசில் வேக வைக்கவும். அதிலுள்ள தண்ணீரை தனியே எடுத்து  வைத்துக் கொண்டு, வெந்ததை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு அரைத்த விழுதுடன், தனியே எடுத்து வைத்துள்ள தண்ணீரைச் சேர்த்து  மறுபடி சூடாக்கவும். கெட்டியாக கிரீமி சூப் போல வேண்டுமென்பவர்கள், இந்தக் கட்டத்தில் சூப்பில் 1 கரண்டி பால் சேர்க்கலாம். உப்பு, மிளகுத்தூள்  சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

நம் எல்லோருக்கும் 3 வேளை சாப்பாடு அவசியம். அது தவிர ஒவ்வொரு உணவுக்கு இடையிலும் ஏதாவது கொறிக்கிற பழக்கம் இருக்கிறது. அதைத்  தவிர்க்க நினைத்தாலும் முடியாத வர்கள் இந்த மாதிரி ஆரோக்கியமான சூப்புக்கு மாறலாம்.

பாரம்பரிய ரெசிபி: காசி அல்வா

என்னென்ன தேவை?


வெள்ளை பூசணி (துருவியது ) - 2 கப், சர்க்கரை - 1 1/2 கப் , நெய் - 1 கப், பாதாம் பருப்பு - 5, முந்திரிப் பருப்பு - 10, பால் - 2 டேபிள்ஸ்பூன்,  கேசரி  கலர் - 1 சிட்டிகை, ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தோல் சீவி, துருவிக் கொள்ளவும். துருவியதைக்  கையால் நன்கு பிழிந்து, அதில் உள்ள நீரை எடுத்து  விடவும்.  கேசரி கலரை சிறிது தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில்  பிழிந்து வைத்துள்ள வெள்ளை பூசணி துருவலைச் சேர்த்து நிறம் மாறி, மிருதுவாகும் வரை வதக்கவும். அடிப் பிடிக்காமல் கவனமாக வதக்க  வேண்டும்.

சர்க்கரை சேர்த்து நன்கு கரையுமாறு கிளறவும். சர்க்கரை கரைந்து கெட்டியாக ஆரம்பிக்கும்.  நெய் பாத்திரத்தின் ஓரங்களில் வரும்போது கேசரி கலர்   சேர்க்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். அல்வா பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல்  வரும்போது அடுப்பை அணைத்து விட்டு துருவிய பாதாம் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

சுண்டைக்காய்

சுண்டைக்காய்

பைசா பெறாத  விஷயங்களை சுண்டைக்காய் சமா சாரம் என அலட்சியப்படுத்திப் பேசுகிறோம். அளவில் சிறுத்தது என்பதைத் தவிர சுண்டைக்காயை இத்தகைய விஷயங்களுடன் ஒப்பிட வேறு காரணமே இருக்காது. அப்படி அலட்சியப் படுத்தக் கூடிய காய்கறி களில் ஒன்றல்ல சுண்டைக்காய். 

ஆரோக்கியப் பெட்டகம்: நெல்லிக்காய்

ஆரோக்கியப் பெட்டகம்: நெல்லிக்காய்

“An apple a day keeps the doctor away எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தினமொரு ஆப்பிள் சாப்பிடுவதென்பது எல்லோருக்குமா சாத்தியம்?  ஆப்பிளுக்கு இணையாக, ஏன், ஆப்பிளை விட அதிகமான நற்குணங்கள் வாய்ந்தது நெல்லிக்காய். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே ஆயுளும் ஆரோக்கியமும் இளமையும் நீடிக்கும். 

கல்லீரல் அழற்சி தடுக்கும் சைவ உணவு!

கல்லீரல் அழற்சி தடுக்கும் சைவ உணவு!மனிதன் உயிர் வாழ முக்கிய உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. இக்கல்லீரலை பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் ஆகும். இதில் ஏ, பி,  சி, டி, இ என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்னையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலை பாதிக்கும் வைரஸ்  கிருமிகள் ஆகும். பொதுவாக கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் அழற்சியை கடுமையான வகை,  நீடித்த கடுமையான வகை என்று இரண்டாக பிரிக்கலாம்.