அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. இப்போது அந்த கொத்தமல்லி இலைகளின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போமா!!!
http://sithamarunthu.blogspot.in/
http://sithamarunthu.blogspot.in/