Friday, January 10, 2014

அவரை

தமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.

இலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.

1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.

2. இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்.

3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.

4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.

அகத்தி

வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறுமென்மரவகை. தமிழ் நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும். 1. கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். 2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும். 3. இலைச்சாறும் நெல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

Tuesday, January 7, 2014

அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்

வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதே இன்றைக்கு சாப்பாடு கார குழம்போ அல்லது சாம்பாரோ என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வருபவர்கள்  வீட்டில் சிக்கனோ மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம். இவ்வாறு தீடீர் அஜீரணக்கோளாறால்  அவதி படுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று  வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி  அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

எலுமிச்சை மற்றும் இஞ்சி


எலுமிச்சை  மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும்  பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில்  எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை  சொல்லிவிடலாம்.

ஆரஞ்சு சாறு

வீட்டு மருந்துகளில் அஜீரணக்கோளாறுகளுக்கு சிறந்த ஒன்று ஆரஞ்சு சாறு. சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு தம்ளர் ஆரஞ்சு சாறு சாப்பிட்டால் உணவு  செரிமானம் அடைந்து உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.

மோர், பால்

தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும்  அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால்,  அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.

திராட்சை

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்தது திராட்சைபழம்.. இந்தப்பழத்தை தோலுடன் சாப்பிட்டாலோ அல்லது ஜீஸ் செய்து  சாப்பிட்டாலும் வயிறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக செயல்படும்.

எலுமிச்சை

சூடான எலுமிச்சை தண்ணீர் அஜீரணத்தை குணப்படுத்த சிறந்தது. உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு கப் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன்  எலுமிச்சை சாறை எடுத்துக்கொண்டால் அமிலத்தை தடுத்து பாக்டீரியாவுடன் போராடி செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது.

பூண்டு மருத்துவம்

வீட்டு மருத்துவத்தில் இஞ்சிக்கும் பூண்டுக்கும் தனி இடமே உண்டு. அனைத்து மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சிறந்த  அடுப்பங்கறை மருந்து பூண்டு. நீங்கள் வயிற்று வலியால் அவதிபடுகிறீர்கள் என்றால் சமஅளவு பூண்டு சாறு , சோயா எண்ணெய் எடுத்து வயிற்று  பகுதியில் மசாஜ் செய்யவேண்டும். வயிற்றில் தடவிய எண்ணெய் தோல் மூலமாக உறிஞ்சப்படும். இது அஜீரணத்தை உடனடியாக நீக்கிவிடும்.

சமையல் சோடா

செரிமான பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டு விட்டதா! ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை போட்டு கலந்து குடித்தால்  செரிமான பிரச்சனையை குறைக்கலாம்.

கொத்துமல்லி இலை

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு சீரகம், கொத்துமல்லி சாறு, உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். வயிற்று வலி ற்படின் இதை  பருகலாம். மேலும் கொத்தமல்லி இலை இரண்டு தேக்கரண்டி, இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி மூன்று ஏலக்காய், கிராம்பு கலந்து குடிக்கலாம். இது வாயு  தொந்தரவை நீங்கிவிடும்.

மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?

முருங்கைப் பட்டை, மூக்கரட்டை வேர், ஊமத்தன் இலை, பூண்டு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப்  போட்டால், மூட்டு வீக்கம் கரையும். மூட்டு வலி குறையும். மூட்டு சம்மந்தப்பட்ட வாயு நோய் குணமாகும்.

வாயு தொல்லை நீங்க?
முருங்கைக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அத்துடன் மிளகு, கொட்டை நீக்கிய கடுக்காய் பாதி, சீரகம், சேர்த்து, ரசம் வைத்து (சூப் போல)  வடிகட்டி, ஒரு டம்ளர் குடித்து வந்தால் பேதி நின்று விடும். மேலும் மலக்கட்டு, வாயு, வயிறு உப்புசம், உடல் பளு, உடல் உஷ்ணம், உடல் அசதி  ஆகிய பிரச்னைகள் நீங்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க?

முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப்பூ இம்மூன்றையும் உணவில் சேர்த்து, அடிக்கடி உண்டு வந்தால், நரம்பு தளர்ச்சி நோய் குணம்  ஆகும்.

நரித்தலை வாதம் பிரச்னைக்கு தீர்வு?

நரித்தலை வாதமென்பது கால் மூட்டுகளில் நரித்தலை போன்று வீங்கி வலி எடுக்கும். இந்தநோய்க்கு நரித்தலை வாதம் என்று பெயர் முருங்கைக்  கீரைகளை நீக்கி விட்டு, அதன் ஈர்க்கு மட்டும் எடுத்து கொண்டு, அதில் சிறிது முருங்கைப்பட்டை, மிளகு சேர்த்து அரைத்து, 3 டம்பளர் தண்ணீரில்  கலந்து, அது ஒரு டம்ளராகும் வரை சுண்டக் காய்ச்சி கசாயமாக ஆகும் வரை காய்ச்ச வேண்டும். காலை, மாலை இரு வேலைகளில் 250 மிலி வீதம்  சாப்பிட்டு வந்தால், கால் முட்டுகளில் ஏற்படும், வாதமும், நரித்தலை வாதமும் நீங்கும்.

முழங்கால் வாதம் ?


ஒருசில மனிதர்களுக்கு முழங்காலில் வாதநீர் தங்கியிருந்து தொந்தரவு கொடுக்கும். முழங்கால் வலிக்கிறது என்று கூறுவார்கள். அவர்கள் வாரம்  இருமுறை முருங்கைக்காயைக் சமையல் செய்து, நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் முழங்காலில் உள்ள, வாதம் நீங்கும். முழங்காலில்  வாத நீர் தங்காது. காலில் தொந்தரவு இருக்காது.

எலுமிச்சை இலையை வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளு வலி குறையும். அத்தி காயை நன்கு  அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி வலி குறையும். கால்கள் மிருதுவாகும்.

மூட்டு வலி குறைய விளக்கு எண்ணெய்யை நன்கு காய்ச்சி, ஒரு கப் ஆரஞ்சி பழச்சாற்றில் கலந்து தினமும் காலை யில் சாப்பிட்டு வந்தால் மூட்டு  வலி மறையும். பாதப்படை குறைய வினிகரை வெது வெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தம் செய்த பிறகு வினிகர் நீரை பாதத்தில் ஒத்திரம்  கொடுத்து வந்தால் பாதப்படை வராது.

இயற்கை தரும் ஆரோக்கியம்

தொண்டைப்புண் குறைய: சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

மூட்டு வலிகுறைய:
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.

காதுவலி குறைய:
கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

கண் உஷ்ணம் குறைய
: வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

வாய்ப்புண் குறைய:
பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

மசாலா பொருட்களின் மகத்துவம்

நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும், மசாலா பொருட்களும் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பவனவாகவும் சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துபவனாகவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுபவனாகவும் உணவின் தரத்தை மேம்படுத்துபவனாகவும் அமைந்துள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.

உடலின் எடையை குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும் மசாலா பொருட்களையும் பார்க்கலாம். வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளை தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனை கட்டுப்படுத்துகிறது. மஞ்சளுக்கு உடல் எடையை குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்பு திசுக்கள் உருவாவதை குறைக்க உதவுகிறது.

இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. வரமிளகாயில் கேப்சைசின் எனும் பொருள் அடங்கி உள்ளது. இது கொழுப்பை எரித்து பசியுணர்வை அடக்கி வைக்கிறது. இலவங்கப்பட்டை உடலின் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இலவங்கப்பட்டையானது ரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது.

நீண்ட நேரத்துக்கு பசியுணர்வு தோன்றாமல் பார்த்துக் கொள்கிறது. கொழுப்பினை விரைவாக செரிக்க செய்கிறது. இஞ்சியானது ரத்தத்தை நன்றாக சுத்திகரிக்கிறது. செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்கள் தேங்கி கிடக்காத வகையில் எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் சீரகம் உதவுகிறது. சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் எனும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகடிறது.

நமது செரிமான சக்தியை தூண்டி கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது. ஓட்டல்களில் சாப்பிட்ட பின்னர் சாம் சோம்பு சாப்பிட தருவார்கள். இதற்கு காரணம் வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கும் என்பது மட்டுமின்றி உணவு செரிமானத்துக்கு சோம்பு சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும் கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.

தீராத இருமலைப் போக்கும் கைமருந்து

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால்,  தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று  நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும்.

பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன்  நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில்  உள்ள சளி நீங்கி விடும்.

வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு  நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது.  மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப்  புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.

தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில்  தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள்  யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம்  வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும். துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக்  கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.

வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை,  ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி  வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு  விலகும்.

உடல் கட்டிகளை நீக்கும் கோரைக்கிழங்கு

கிராமப்புறங்களில் வயல் வெளிகள் பக்கம் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய மூலிகை இது. உலர்ந்த கோரைக் கிழங்கை நாட்டு  ம ருந்துக் கடைகளில் முத்துக்காசு என்றும் குறிப்பிடுவர். உலர்ந்த கோரைக்கிழங்கு மருந்துப் பொருளாக மட்டுமின்றி ஊதுவத்தி  போன்ற நறுமணப் பண்டங்கள் செய்யவும் பயன்படுகிறது.

கோரைக்கிழங்கு உடல் கட்டிகளை அகற்ற உதவும் டானிக் போன்றது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.  கோரைக்கிழங்கினால் பொதுவாக குளிர்காய்ச்சல் நீங்கும். அதிதாகம் பித்த வளர்ச்சி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்து. கடு மையான குன்ம நோயை அகற்றி குணமாக்க கீழ்கண்ட முறையில் இம்மருந்தினை தயாரிக்க வேண்டும்.

இரண்டு பச்சை கோரைக்கிழங்கை எடுத்து நறுக்கி நூறு மில்லி நீரில் போட்டு பாதியளவாகச் சுண்டக்காய்ச்சிக் கொள்ள வேண்டும்.  இந்தக் குடிநீரை வேளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் முன்று வேளை என்ற கணக்கில் இருபது நாட்கள் சாப்பிட்டு வர கடுமையான  குன்ம வயிற்றுவலி குணமாகும். குடிநீரை சாப்பிட்டால் அஜீரணபேதி, சீதபேதி, வாந்திபேதி ஆகியவையும் குணமாகும்.

குடலில் பூச்சித்தொல்லை இருந்தால் ஒரு கோரைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ் சியை எடுத்துத் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.  இரண்டையும் சேர்த்து நன்கு இடித்துப் பின் சிறிது தேன் விட்டு அரைத் துக்கொள்ள வேண்டும்.

காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அகன்றுவி டும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நாட்களில் சுடு சோற்றில் எலுமிச்சம் பழம் சாறும் கொஞ்சம் நெய்விட்டும் சாப்பிடவேண் டும். இதே முறையில் சாப்பிட சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.

தாய்பால் குறைந்து விட்ட தாய்மார்கள் கோரைக்கிழங்கை பச்சையாகக் சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக இட பால்  நன்றாக சுரக்கும். 

ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்

இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள்  கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர்  cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம்,  தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் கொண்டவை .  தண்டு குட்டையானது. நேரானது, முழுத்தாவரமும் இனிப்பு சுவையுடையது. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது  என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.

அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா  வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.

சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு,  கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இது சால சிறந்தது.

உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி,  இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு  அருகம்புல் ஒரு உலக புகழ்வாய்ந்த டானிக்.

சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம்  குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற  தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.

வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் சூதக கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு  ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய  பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்க்காத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து வரவேண்டும்.  இரண்டு மூன்று வாரங்கள் இவ்வாறு செய்தால் ரத்த மூலம் கட்டுப்படும்.

தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை உணர்வும் எழுச்சி பெறும். ஆண்மை குறைவிற்கு நிரந்தர தீர்வாக  அருகம்புல் உள்ளது. ஹோமியோபதியில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக  பயன்படுகிறது.

எலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். ஒரு மாதம் வரை இவ்வாறு  குடித்தால் வெட்டை நோய் குணமாகும்.

அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி., அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம்  சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

இதன் சாறை கண்ணில் ஊற்றினால் கண்நோய் மற்றும் கண் புகைச்சல் மாறும். இப்புல்லை வெட்டி தலையில் வைத்து கட்டிக்கொண்டால் கபாலச்சூடு  தணியும். அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பூ, கிராந்தி தகரம், கஞ்சாங்கோரை போன்றவற்றை சம அளவில் எடுத்து இவற்றோடு மோர் விட்டு  அரைத்து பாதித்த இடங்களில் பூசி வர படர்தாமரை மறையும். உடலின் சூட்டை குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.

அருகம்புல், கணுபோக்கி இரண்டையும் பத்து கிராம் அளவு எடுத்து அதோடு வெண்மிளகு இரண்டு கிராம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிக்க  வேண்டும். அந்த நீரோடு 2 கிராம் வெண்ணெய் சேர்த்து உட்கொண்டு வர மருந்துகளின் காரணமாக உண்டாகும் விஷம் முறிந்து விடும். நீரடைப்பு,  வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் இருந்தால் அவை நீங்கும்.

இரவில் ஒரு இளசி இலையுடன் அருகம்புல்லையும் கொதிநீரில் போட்டுவிட வேண்டும். பின்னர் மூடி வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு  தொடர்ந்து கொடுத்து வர சளித்தொல்லை மெதுவாக குறையும். மேலும் சீதள தொல்லையும் நீங்கும். சமீபத்தில் சென்னை கடற்கரையில்  உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்பவர்கள் அருகம்புல் சாற்றை அருந்த தொடங்கியதில் இருந்து அதன் மகத்துவம் மக்களுக்கு தெரிய  ஆரம்பித்திருக்கிறது.

காலை உணவாக


அருகம்புல்லை சாற்றை காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் ஒரு பழம் சாப்பிட்டால் போதும். உடலுக்கு தேவையான அனைத்து சத்தும் அதில் கிடைத்துவிடும்.அடுத்து மதிய சாப்பாடு தான்.

புல்லின் தனிமங்கள்


அருகம்புல் ஈரப்பதம் நிறைந்த சாதாரண மண்ணில் தானாக வளருகிறது. இதற்கென எந்த தனி வளர்ப்பு முறைகளும் இல்லை. அருகம்புல்லை பறித்த  உடனேயே பயன்படுத்துவதால் அதன் முழு மருத்துவ குணத்தையும் பெறமுடியும். காய்ந்த புல்லில் சத்துகள் குறைந்துவிடுகிறது. இதில்  பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ளன.

Wednesday, January 1, 2014

எப்படி சாப்பிட வேண்டும்?

‘ஸ்பா’ என்று சொன்னதுமே இளசுகளின் புத்துணர்ச்சி மையம் என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். சென்னையில் பிரபல நட்சத்திர  ஹோட்டல்களிலும், அழகு நிலையங்களிலும் ஸ்பா கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. சரி, இந்த ‘ஸ்பா’வை முதன்முதலில்  இந்தியாவில்அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா?

அசோக் கண்ணா. இவர்தான் ‘ஸ்பா’மகன்! அமெரிக்காவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர். பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் உயர்  பொறுப்புகளில் இருந்தவர். 1999ம் ஆண்டு சுபயோக சுபதினத்தில் இமாசலப் பிரதேசத்தில் டெஸ்டினேஷன் ஸ்பாவான ‘ஆனந்தா’வை தொடங்கினார்.  உலகம் சுற்றும் வாலிபனாக பறந்துகொண்டிருக்கும் இவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

‘‘அவசர வாழ்க்கைக்குப் பழகிட்டோம். இந்த வேகத்துலேந்து சில நாட்களாவது தப்பிக்க முடியுமான்னு யோசிக்கிறோம் இல்லையா? அவங்களுக்காக  ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஸ்பா’. இதுவெறும் அழகு நிலையம், நீராவிக்குளியல், மசாஜ் மட்டும் கிடையாது. ஆயுர்வேத, அரோமாதெரபி சிகிச்சையோட  நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்னு பஞ்ச பூதங்களின் சக்திகளை ஒருங்கிணைச்சு மனசையும், உடலையும் சுத்தப்படுத்தறதுதான் ‘ஸ்பா’.

ஒவ்வொருவரும் உணவை எப்படி பிரிச்சு சாப்பிடனும்னு ஒரு வரைமுறை இருக்கு. அதன்படி செஞ்சா, உடலும் மனசும் ஆரோக்கியமா இருக்கும்.

மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.

ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

ஒரு முறை சாப்பிட்டதும், அந்த  உணவு நல்லா செரிமானம் ஆன பிறகுதான் அடுத்த வேலைக்கான உணவை எடுத்துக்கனும்.

புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம்.

உப்பு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏன்னா, கொழுப்புள்ள உணவை சாப்பிடனும்ங்கற ஆர்வத்தைத் தூண்டுவது உப்புதான்.

கார்போஹைட்ரேட் அதிகமிருக்கிற அரிசி உணவை குறைச்சலா சாப்பிடவும்.

பச்சைக் காய்கறிகளை தினமும் மூனு வேலையும் சாப்பிடறது நல்லது. நான்கைந்து பழங்களை ஒண்ணா சேர்த்து
சாப்பிடக் கூடாது.

உணவுக்கு அரை மணிநேரம் முன்னாடி பழம் சாப்பிடலாம். அல்லது உணவு சாப்பிட்ட 2 மணி நேரங்கள் கழிச்சு பழங்களை சாப்பிடலாம். ‘ஸ்பா’  எடுத்துக் கொள்ள பர்ஸ் தடுத்தாலும் இந்த வழிமுறைகளை உணவில் பின்பற்றலாமே?

ஆரோக்கியப் பெட்டகம் : சோயா

உடல்  வளர்ச்சிக்கு புரதமே அடிப்படை. உடலில் புதிய திசுக்களைக் கட்டமைக்கவும், அழிந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும் புரதம் அவசியம். ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ஒவ்வொரு கிலோ கிராம் எடைக்கும் ஒரு கிராம் என்ற விகிதத்தில் புரதம் தேவை என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், நம் எல்லோருக்கும் அந்தளவு புரதம் கிடைக்கிறதா என்றால் சந்தேகம்தான்.

நல்ல புரதம் என்று பார்த்தால், எப்போதும் விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிற புரதம்தான் சிறந்தது. அத்தியாவசிய அமினோ அமிலமான ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதில்தான் இருக்கிறது. அதனால்தான் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்கிறார்கள். தாவர உணவுகளில் அதற்கு இணையான அதிக புரதம் கொண்ட ஒரே பொருள் சோயா. எனவே, சைவ உணவுக்காரர்கள் அதிக புரதம் பெற சோயாவையே நம்ப வேண்டியிருக்கிறது.

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றில் 100 கிராமுக்கு 20 முதல் 25 கிராம் அளவு புரதம் இருக்கிறது என்றால், சோயாவில் அது 40 சதவிகிதம். அது மட்டுமா..? கால்சியம், பி 12, நல்ல கொலஸ்ட்ரால் எல்லாமும் சோயாவில் அதிகம். சோயா என்றதும் பலருக்கும் தெரிந்தது சின்னச் சின்ன உருண்டைகளாக மளிகைக் கடைகளில் கிடைப்பதுதான். உண்மையில் சோயா என்பது ஒரு வகையான பயறு. அதை பயறாக உட்கொள்வது தான் சிறந்தது. சோயா உருண்டைகள் சோயாவை அரைத்து, அதன் சாரத்தைப் பிழிந்தெடுத்த பிறகு பெறப்படுகிற புண்ணாக்கு மாதிரியான ஒன்றுதான்.

அதில் சத்துகளோ, அத்தியாவசிய அமினோ அமிலமோ இருக்காது. உருண்டை வடிவில், அவல் மாதிரி, இன்னும் மசாலா சேர்த்தெல்லாம் சோயா கிடைக்கிறது. இதில் ஃப்ளேக்ஸ் வடிவில் கிடைக்கிற சோயாவை பொரியல், கூட்டு செய்யும் போதெல்லாம் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வடிவத்தில் சோயாவை வாரத்தில் 2 முறை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோயாவை சமையலில் உபயோகிக்கத் தயங்குபவர்கள், அதிலுள்ள லேசான கசப்புத் தன்மையைக் காரணம் காட்டுவதுண்டு. அதுதான் புரதம்.

சோயாவை நேரடியாக உபயோகிக்க விரும்பாதவர்கள், 1 கிலோ கோதுமை மாவுக்கு 100 கிராம் சோயா வீதம் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். சூப் செய்கிற போதும், அதைக் கெட்டியாக்க சோயா மாவை 1 டீஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

சோயா தரும் நன்மைகள்...

எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும். இதயத்துக்கும் நல்லது. சோயாவிலிருந்து பெறப்படுகிற ப்ரோபயாட்டிக் தயிரில் உள்ள ஈஸ்ட், செரிமானத்துக்கு மிகவும் நல்லது. விளையாட்டு வீரர்களுக்கு புரதத்தின் தேவை அதிகம். அதை ஈடுகட்ட சோயா சிறந்த உணவு. மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைய ஆரம்பித்து, சினைப்பைகளின் செயல்திறனும் மங்கும். வாரத்தில் 5 நாட்கள் சோயா மில்க் எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

சோயா பயறை ஊற வைத்து, முளைகட்டச் செய்து, சுண்டலாகச் செய்து சாப்பிட்டால், ஈஸ்ட்ரோஜென் மற்றும் வைட்டமின் இ தேவை பூர்த்தியாகும். பச்சைப்பயறில் 56.7 சதவிகிதமும், ராஜ்மாவில் 60 சதவிகிதமுமாக உள்ள கார்போஹைட்ரேட், சோயாவில் மட்டும்தான் 20.9 சதவிகிதம். எனவேதான் எடைக் குறைப்புக்கு உதவும் உணவுகளில் சோயாவுக்கு முக்கிய இடமிருக்கிறது.

எடையைக் குறைக்க நினைப்போர்,கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது முதன்மையான விதி. மற்ற பருப்புகளில் இல்லாத அளவு அதிக கால்சியமும் (240 மி.கி.), பாஸ்பரஸ் சத்தும் (690 கிராம்) சோயாவில் உண்டு. இந்த இரண்டும் இதய நோய் பாதித்தவர்கள், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம் தேவை. இரும்புச் சத்தும் மற்ற பருப்புகளைவிட, சோயாவில் சற்றே அதிகம். அதாவது, 10.4 சதவிகிதம்.

யாருக்குக் கூடாது?

ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம் என்பதால், ஆண்கள் சோயா அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். தசைகளை பில்டப் செய்ய ஜிம் செல்பவர்களை தினமும் 100 கிராம் சோயா எடுக்கச் சொல்வார்கள். ஆனால், அப்படி எடுப்பது செரிமானத்தைப் பாதிக்கும். காலை வேளைகளில் 25 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இது முற்றிலும் புதிய உணவு என்பதால் இரவில் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தவிர, வயதானவர்களுக்குக் கொடுக்கும் போதும், சோயாவாக அரைத்துக் கொடுப்பதற்குப் பதில், சோயா உருண்டைகளை சமையலில் சேர்த்துக் கொடுக்கலாம்.

வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும். மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உபாதைகளையும், வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.

கையை பிரித்து குதிகால் அல்லது கணுக்காலை பற்றி பிடிக்க வேண்டும். வயிற்றை முன்னோக்கி தள்ளி ஆசனத்தை சரி செய்யவும்.

30 எண்ணிக்கை சாதாரண மூச்சில் இருக்கவும்.

குதிகால்கள் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து திரும்பவும் செய்யவும். மூன்று முறை செய்தால் போதும்.

பலன்கள்:

ஆஸ்த்மா, ரத்த சோகை போக்கும். சிறு வயதில் ஆரம்பித்தால் உயரம் பெறலாம். கண் பார்வை தெளிவடையும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. கூன் முதுகு நிமிர்கிறது.

நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

அருகம்புல் சாறு.: எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது போலவும், உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சக்தியை அளிக்கும். ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மலச்சிக்களை தீர்க்கும். ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும். ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும். தாய்பாலை அதிகரிக்க செய்யும். உடலில் நச்சுத்தன்மையை அகற்றும். கொழுப்பு சத்தை குறைக்கும்.

துளசி இலைச்சாறு: காய்ச்சல், இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள் காதுவலி ஆகியவற்றறை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும்.

தூதுவளை இலைச்சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு: உடல்நிறம் பொலிவு பெறும். கண்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

பொண்ணாங்கண்ணி சாறு: உடலுக்கு வலிமை ஊட்டும். பொன் போல் உடல் பளபளப்பாகும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல்சூடு குறையும்.

வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள், நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும் இதயம் வலுவாகும்.

வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரிழிவு குறையும். வயிற்று புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலையை போக்கும்.. காலாரா குறையும்.

புதினா இலைச்சாறு: வாய் புண், வயிறு, குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். வெண்குஷ்டம் குறையும்.

நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள், குறையும். நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய் குறையும். உடல் பலமடையும்

வாழைத்தண்டு சாறு:
சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம் தொந்தி, அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும். உடல், கை, கால் வீக்கத்தை குறைக்கும். ரத்தம் சுத்தமாகும்.

கேரட் சாறு: கண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள், பல் நோய்கள் குறையும். அமிலத்தன்மையை குறைக்கும்.

அரச இலைச்சாறு: மலச்சிக்கல், உடல்சூடு, கர்ப்பப்பை நோய்களை குறைக்கும். காம உணர்ச்சியை தூண்டச் செய்யும்.

கொத்தமல்லி சாறு: பசியை தூண்டும். பித்தம், வாத நோய், காய்ச்சல் குறையும். மூலம், சளி, இருமல் குறையும்.

வெந்தயத்தில் என்ன இருக்கிறது?

டயட்டீஷியன் அம்பிகா சேகர்

அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவக் காத்திருக்கிற அற்புத மருந்து  வெந்தயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். சாம்பாரோ, வத்தக்குழம்போ, புளிக்குழம்போ... எதுவானாலும்,  தாளிக்கும்போது சிறிது வெந்தயம் தூக்கலாகச் சேர்த்துப் பாருங்கள். முழுதாக வெந்தயம் சாப்பிடப் பிடிக்காதவர்கள், கொதித்து இறக்கும் முன்  வெந்தயப் பொடியைத் தூவிப் பாருங்கள்... உங்கள் சமையலறை வாசம், தெருக்கோடி வரை வீசும். மணத்தில் மட்டுமின்றி, குணத்திலும் மிகச்  சிறந்தது வெந்தயம்!

வெந்தயத்தில் என்ன இருக்கிறது? (100 கிராமில்)

புரதம்     26.2 கிராம்
கொழுப்பு     5.8 கிராம்
நார்ச்சத்து     7.2 கிராம்
ஆற்றல்     333 கிலோ கலோரி

ஜீரணமாகாத மாவுச்சத்தைதான் நாம் நார்ச்சத்து என்கிறோம். அந்த நார்ச்சத்து வெந்தயத்தில் மிக அதிகம். தவிர பெக்டினும், பிசினும்கூட அதிகம்.   100 கிராம் வெந்தயத்தில் 40 சதவிகிதம் பிசின் உள்ளது. அபரிமிதமான புரதமும், நார்ச்சத்தும் கொண்ட வெந்தயத்தின் மகிமை நமக்குத்தான்  முழுமையாகத் தெரிவதில்லை. அதனால்தான், அதை சமையலில் ஏனோதானோவென, அதுவும்
கொஞ்சமாகத்தான் உபயோகிக்கிறோம். வெந்தயத்தின் மகத்துவம் தெரிந்தால், சாப்பிடுகிற உணவிலிருந்து வெந்தயத்தை ஒதுக்கித் தள்ளும் பழக்கத்தை  மாற்றிக் கொள்வீர்கள்!

வெந்தயம் நீரிழிவுக்காரர்களுக்கு மிக நல்லது என்பது தெரியும். ஏன் நல்லது எனத் தெரியுமா? சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80  - 110 வரை இருக்க லாம். நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும். அதிக  கலோரி உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின்  சுரப்பு சரியாக இருக்காது.

அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது. தினமும் இரவில் 1 டீஸ்பூன்  வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், ரத்தத்தில்  சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதே போல புற்றுநோய்  பாதிப்பையும் குறைக்கும்.

வெந்தயத்தில் உள்ள பிசின், குடலுக்குள் போய், தண்ணீரை எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பான்ஜ் போல விரிவடையும். அது உணவுக்குழாயில் உள்ள  நச்சுப்பொருள்களை எல்லாம் வெளியேற்றிவிடும். எனவே, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. வெந்தயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். அது ‘அசிடிட்டி’ எனப்படுகிற அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும். உதாரணத்துக்கு எலுமிச்சை ஜூஸ்  குடிக்கிறோம் என்றால், அதிலுள்ள அமிலத்தன்மையை ஈடுகட்ட, மோர் குடிக்க வேண்டும்.

உணவின் மூலம் உடலுக்குள் சேர்கிற அமில - காரத் தன்மைகளை பேலன்ஸ் செய்து சரியான அளவில் வைக்கக்கூடியது வெந்தயம். செரிமானம்  சரியில்லாத நேரங்களில் வெந்தயம் கலந்த மோர் குடித்தால், அமிலத் தன்மை சரியாகி, செரிமானம் சீராகும். வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி  இருந்தால் 10 கிராம் வெந்தயத்தை, மோரில் கலந்து சாப்பிட, உடனே குணம் தெரியும். வெந்தயம் வயிற்றுக்குள் போய், ஊறி, கெட்ட கிருமிகளை  உறிஞ்சி, இன்ஃபெக்ஷனை சரியாக்கும். உடல் சூட்டினால் உண்டாகும் வலியையும் விரட்டும்.

வயிற்றில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருந்தாலும் வெந்தயம் வெளியேற்றி விடும். அமீபியாசிஸ் மாதிரியான நோய்களுக்கும் வெந்தயம்  பிரமாதமான மருந்து. தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். சிறுநீரகங்கள் சீராக இயங்கும். வாயுத் தொந்தரவு நீங்கும். எலும்புகள்  பலமாகும். சருமம் அழகு பெறும். வெந்தயத்தை வறுத்துப் பொடித்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், தாய்ப்பால்  கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும். மாதவிலக்கு நாள்களில் உண்டாகிற கோளாறுகளுக்கும் வெந்தயம் மருந்து. உடல் சூட்டைத்  தணித்து, கர்ப்பப் பையைப் பலப்படுத்தும். மூல நோய்க்கும் நிவாரணம் தரும்.

வெந்தயம் ஸ்பெஷல் ரெசிபி

வெந்தயக் கீரை - சேப்பங்கிழங்கு குழம்பு


என்னென்ன தேவை?

வெந்தயக் கீரை - 1 கட்டு, சேப்பங்கிழங்கு - 100 கிராம், வெங்காயம் - 1, தக்காளி - 2, இஞ்சி - பூண்டு விழுது - சிறிது, குழம்பு மிளகாய் தூள் - சிறிது,  மஞ்சள் தூள் - கால் சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிது. அரைப்பதற்கு: தேங்காய்த் துருவல் - 2  டீஸ்பூன், சோம்பு, கசகசா - தலா கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை - அரை டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சேப்பங்கிழங்கை தோல் மட்டும் நீக்கி, வேக வைக்காமல், சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெந்தயக் கீரையை அலசி, நறுக்கி வைக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.  சேப்பங்கிழங்கு சேர்த்து வதக்கவும். பிறகு வெந்தயக் கீரையும் சேர்த்து வதக்கி, உப்பு, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த விழுது,  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும். அல்லது நன்கு கொதிக்கும் போது, குக்கரில் வெயிட் போட்டு,  குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

வெந்தய மிக்சர்


என்னென்ன தேவை?

வேக வைத்து வடித்த வெந்தயம் - 1 கப், கடலை மாவு - கால் கப், சோம்பு - தாளிப்பதற்கு, கறிவேப்பிலை - சிறிது, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,  மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதிலேயே கடலை மாவையும் சேர்த்து, லேசாக வறுக்கவும். மிளகாய் தூள்,  மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து வறுக்கவும். வேக வைத்து, தண்ணீரை நன்கு வடித்த வெந்தயத்தை அதில் சேர்த்து, குறைந்த தணலில்  வைத்து வதக்கவும். வெந்த வெந்தயத்தில் உள்ள தண்ணீரே அது வதங்கப் போதுமானதாக இருக்கும். கலவை நன்கு உதிர் உதிராக வறும் வரை  வதக்கி, ஆறியதும், காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைக்கவும். இதை தினம் 1 டீஸ்பூன் வெறுமனே சாப்பிடலாம் அல்லது தயிர் சாதத்துக்குத்  தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

வெந்தய தோசை


என்னென்ன தேவை?
சிகப்பரிசி - 2 கப், கருப்பு உளுந்து - கால் கப், பச்சைப் பயறு - கால் கப், வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் 4 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்து, உப்பு சேர்த்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு  தோசையாக வார்க்கவும்.

தொகுப்பு: ஆர்.கௌசல்யா
படங்கள்: லோகு


அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்!

அன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு.

மஞ்சள்

நறுமணப்பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது மங்களகரமான ஒன்றாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. அது மட்டுமா...? சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண் போக்கியாகவும் உள்ளது. மேலும் தோல் அழகை மெருகேற்றவும் உதவுகிறது.

மல்லி

மணக்கும் மல்லி பித்தத்தை அகற்றுவதில் கில்லி. உணவை சமநிலைப்படுத்துவதோடு உடல் நிலையையும் சீராக்கும் தன்மையுடையது.

சீரகம்

தாய்மையடைந்த பெண் முதல் அனைத்துப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவி உடல்நலத்தை சீராக்கும் சீரகம்.

கசகசா
கரகரவென இருக்கும் கசகசா வயிற்றுவலியை போக்கும் தன்மையுடையது. நரம்புகளை இரும்பாக்கும். மூளைக்கு பலம் தரும். நல்ல தூக்கம் தரும்.

மிளகு

மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

கிராம்பு

மட்டன் குழம்பை மணக்க வைப்பதில் மட்டுமல்ல... கிராம்பு தசைப்பிடிப்பு, நெஞ்சு சளி, பல்வலி, ஈறுவலியை போக்குவதிலும் சிறந்தது. இதை தினமும் உணவில் சேர்ப்பது சுகம். அஞ்சறைப்பெட்டியின் அருமருந்து ரகசியத்தை அறிந்து பயன்படுத்தி உடல்நலம் பேணுவோம். இவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவோம்.

என்ன பழங்களில் என்ன இருக்கிறது.

மாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும்.  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்தசோகை, இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம்.  விஷகிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாபழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும்  விஷக்கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை  உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது.

பப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அலற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும்  சிறுநீர்பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும்.

மாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு  இருமலை குணப்படுத்தும்.

வாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு, பலனடையலாம். இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல ஜீரண  சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை சக்தியை அளிக்கும்.

ஆரஞ்சு: வைட்டமின் ஏ, வைட்டன் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் படுக்கச்செல்லும் முன்  அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம் சொத்தை விழுந்து வலி  ஏற்படுதல், பல் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு உள்ளவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பழித்து விழுங்கி நிவாரணம் பெறலாம்.

திராட்சை: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சரியாக பசி எடுக்காமல் பயிறு, மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர்  திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக  கோளாறுகளுக்கு திராட்சை சாறு பலனளிக்கும். முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.

எலுமிச்சை:  எலுமிச்சை சாற்றுடன் சிறிய இஞ்சித்துண்டை நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து ஆறியபிறகு தினமும் 2முறை குடித்தால் இருமல்  நின்றுவிடும். சூடான டீயில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 நாட்கள் குடித்தால் தலைவலி வராது. வயிற்றுவலி, பித்தத்தால், ஜீரண  உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை சிறுநீர் தொந்தரவுகள் வராது.

பேரீட்சை: தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் 2 பேரீட்சை பழமும் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்  புதிய ரத்தம் உண்டாகும்.

தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:

1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.
2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.
3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.
4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.

மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.

தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:


1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.

4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.

5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.

6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.

7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.

9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.

10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.