பச்சைப் பருப்பு எலும்புகள் வலுவடைய உதவும். முடி நீண்டு வளரும். குடல், கல்லீரல் முதலிய உறுப்புகளுக்கு வலுவைத் தரும்.
உடலில் ஏற்படும் ரத்தப் பெருக்கை நிறுத்தவும், மூக்கில் ரத்தம் வருவது, மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கு ஆகியவற்றை நிறுத்த நிலக்கடலை உதவும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி நிலக்கடலை சாப்பிட்டால், சத்து குறைந்து உடல் மெலிவது தவிர்க்கப்படும். உடலுக்கு வலிமை தரும், தசையை வளர்க்கும்.
உடல் வலிமை பெற, மூக்கடலை எனப்படும் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவில் ஊற வைத்து அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment