Sunday, September 15, 2013

எருக்கு


எருக்கு தாவரவியல் பெயர் : Calotropis gigantea எருக்கன் செடி வகையைச் சேர்ந்தது. வறண்ட பிரதேசத்திலும் வளரும்.ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும்.எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும். இதன் இலை சாம்பல் நிறத்தில் இருக்கும். 3 செ.மீ. கனமும் 10 செ.மீ. நீளமும் சுமார் 5 - 6 செ .மீ. அகலமும் முட்டை வடிவத்தில் இருக்கும். வெள்ளெருக்கனை மாந்தீரீக சம்பந்தமான காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர் எல்லாமே மருத்துவ குணம் உடையன. வெள்ளெருக்கன் வேர் அதிசயமாக சில வினாயகர் உருவில் இருப்பதுண்டு.வினாயகர்சிலை இந்த வேரில் செய்து வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு. மலர் பூத்துப் பிஞ்சாகி, காயாகி கொத்தாக இருக்கும். சுமார் 7 - 9 செ.மீ. நீளத்துடன் 3 - 4 செ.மீ. கனமுள்ளதாக இருக்கும். நன்கு முற்றிய பின் வெடித்து பஞ்சாக மாறி காற்றில் பறந்து சென்று விழுந்த இடத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்கிறது. வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு சிறந்தது. இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்களல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளை உடையது. “எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் வாயுவைத் திருக்கறவே கொன்றுவிடும் தீர _ செருக்கான சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம் உண்ணமுடியுமென ஓது.” 1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும். 2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம். 3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். 4. 200 மி.லி. உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும். 5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும். எருக்கம்பூவினால் செய்த மருந்து -சுவாசகுடாரி மாத்திரை -சளி ,இளைப்பு ,சுவாசம் போன்ற நோய்களை தீர்க்கும். இலைகள் : எருக்கன் செடியின் இலைகளை எரித்து, அதன் புகையை முகர்ந்தால், வாய் வழியாகச் சுவாசித்தால், மார்புச் சளி வெளியேறும். ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும்.இதன் இலைகள், பூக்கள், வேர், பட்டைகள், எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை. மொட்டுகள் : இதன் மொட்டுகள், சுக்கு, ஓமம், கறுப்பு உப்பு ஆகியவற்றை மெல்லியதாகப் பொடியாக்கி, சிறிதளவு தண்ணீர் கலந்து பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். தினசரி இரண்டு மாத்திரைகள் வீதம் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம், பசியின்மை, வாயு கோளாறு, வயிறு உப்புசம் ஆகியவை கட்டுப்படும்.பூக்கள் : காலரா, வயிற்றுப் போக்கு, வாந்தி, குமட்டல் போன்றவற்றால் உடல் பலவீனம் அடைவதிலிருந்து காக்க இரண்டு எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும்.பால் : எருக்கம் பால் தலைப் பொடுகு, படை, மூட்டு வலிகள், மூட்டு வீக்கம், மூலநோய்க்கு மருந்தாகப் பயன்தருகிறது. கிராமப்புறங்களில் காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால் அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவுவர். இதனால் வலி குறைவதுடன் முள் குத்திய இடம் விரைவில் பழுத்துச் சீழ் வெளியே வரும். அத்துடன் முள்ளும் வந்துவிடும். குதிகாலில் வலி வந்தால், செங்கல்லைச் சூடாக்கி அதன்மீது பழுத்த எருக்கிலையை வைத்து அதன்மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும். உடம்பில் கட்டிகள் தோன்றி உடையாமல் வேதனை கொடுத்தால் எருக்கு இலையை நெருப்பில் வாட்டி, தாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும். எருக்கஞ் செடியின் குச்சியை, கருப்பைக்குள் செலுத்துவது கொடூரமான கருச்சிதைவு முறைகளில் ஒன்றாக உள்ளது. வெள்ளெருக்கம்பூ Bronchitis, asthma ஆகியவற்றுக்குச் சிறந்தது. தேவ மூலிகை அல்லது விருட்சம் என்று கூறப்படும் வெள்ளெருக்கு அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குப்பை மேடுகளிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.

No comments:

Post a Comment