Saturday, September 14, 2013

சிவவாக்கியரின் பாடலில் மந்திரத்தைப்பற்றி..


சிவவாக்கியரின் பாடலில் மந்திரத்தைப்பற்றி.. மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்தெலுத்துமே விளக்கம்: உலகில் மனிதகுலம் தோன்றியபோது எந்த வித மந்திரங்களும் கிடையாது. பிறகு பல ரிஷிகள் மற்றும் முனிவர்களால் உருவாக்கப்பட்டது தான் மந்திரங்கள். மனதின் திறத்தை கொண்டு எழுத்துகளை ஒன்றுசேர்த்து கூறும்போது ஒருவித சக்தி நமக்கு கிடைக்கிறது. ஆயினும் இதனால் நமக்கு நன்மை உண்டு என்றாலும் பிறவா பேரின்ப நிலைக்கு மந்திரங்கள் உதவாது என்பது எனது கருத்து. கற்ற மந்திரத்தால் இறந்த உடலுக்கு உயிர் கொடுக்க முடியமா? முடியாது இறந்தப்பின் நாம் படித்த மந்திரத்தால் நமக்கு என்னப்பயன் கிடைக்கும் ? அல்லது நம்மால் அதைதான் பிரயோகிக்க முடியுமா ? முடியாது அல்லவா. உண்மையான மந்திரம் என்பது ஐந்தெழுத்து அந்த ஐந்தெழுத்தையும் மெய்உணர்ந்தப்பின் எந்த மந்திரம் நமக்கு தேவைப்படாது ... " நமசிவய என்ற மந்திரம் தான் அது"--இந்த ஐந்தெழுத்தைதையும் யார் நன்றாக உணர்ந்து பயன் படுத்துகிறார்களோ அவர்களே பிறவா யாக்கையை பெறமுடியும். இவை வெறும் வார்த்தைகள் கிடையாது பஞ்சபூத தத்துவத்தைகொண்டது. "முடிந்தால் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ." "அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்திலும் உள்ளது"

No comments:

Post a Comment