பவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்: ஆய்வில் தகவல்
முகத்திற்கு போடும் டால்கம் பவுடரை உபயோகிப்பதன் மூலம் கருப்பை புற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வியர்வை நாற்றத்தை தடுக்க, ஈரப்பதத்தை உறிஞ்சும் முகப்பவுடர்களை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் இது சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். என்றெல்லாம் பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், அதிகாரப் பூர்வமாக இந்த கூற்று இதுவரை நிரூபிக்கப்பட்டதில்லை.
ஆனால், ரகசிய உயிர்க் கொல்லி என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.
கருப்பை புற்றுநோய்
8 ஆயிரத்து 525 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முகப் பவுடரை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து ஆய்வு
இங்கிலாந்தின் பிரிகாம் மற்றும் பாஸ்டன் ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள் 8 வகையிலான ஆய்வுகளை மேற்கொண்ட வகையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட கையேட்டில் கூறப்பட்டுள்ளது.
பவுடர் போடாதீங்க
குளியலுக்கு பின்னர் நறுமணத்திற்காக உடல் முழுவதும் பவுடர் பூசிக் கொள்வது பலரது வாடிக்கை. மிக முக்கியமாக அந்தரங்க உறுப்புகளில் பவுடர் போட்டுக் கொள்வது போன்ற பழக்கத்தினால் கருப்பை புற்று நோய் தாக்கும் அபாயம் 24 சதவீதம் அதிகம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிர் கொல்லி ரசாயனங்கள்
முகத்துக்கு பூசும் டால்கம் பவுடரில் சிலிகேட் டால்க் போன்ற ரசாயனங்கள் இருப்பதால், அவை புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென் மட்டுமல்லாது, நுரையீரலில் தொற்றும் ஏற்படுத்தும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. லிப்ஸ்டிக் போன்ற மேக் அப் சாதனங்கள் பயன்படுத்தினால்தான் புற்றுநோய் பாதிப்பு வரும் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது பவுடர் போட்டாலே கருப்பை புற்றுநோய் வரும் என்று பீதியை கிளப்புகின்றனர்.
No comments:
Post a Comment