ஜலதோஷத்திற்கான எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!!!
பொதுவாக குளிர்காலம் வரும் பொழுது ஜலதோஷமும் சேர்ந்து வரும். குளிர்காலம் தொடங்கியதும் சில வைரஸ்கள் சுறுசுறுப்பாக உடலில் நுழைத்து செயலில் ஈடுபட்டு மூக்கு ஒழுகுதல் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை தூண்டுவதற்கான காலமாக இந்த குளிர்காலம் அமைகிறது. ஜலதோஷம் சாதாரணமாக மூக்கில் தொடங்குகிறது. ஆனால் மெதுவாக உடல் முழுவதையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இந்த ஜலதோஷம் தொடங்கியதற்கான சில அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை புண், குளிர், காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவை. மேலும் குளிரால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பலவீனமாக மற்றும் மந்தமாக காணப்படுகிறார். இந்த பருவத்தில் குளிரை தவிர்க்க முடியாது. இதற்கு செயற்கை மருந்துகளும் எப்போதும் முழுமையான நிவாரணம் வழங்குவதில்லை. ஆனால் சில இயற்கை வைத்தியங்கள் மூலம் குணப்படுத்த முடியும். இப்போது அந்த இயற்கை வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போம்.
வரும் முன் காப்போம்
தொண்டை அடைப்பு மற்றும் ஜலதோஷம் பிடித்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்தல் வேண்டும். இதனால் உடலினுள் வைரஸ்கள் மேலும் நுழைவதை தடுக்க இயலும்.
நீராவி பிடித்தல்
நீராவி பிடித்தால் மூக்கடைப்பு மற்றும் மாரடைப்பிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். சூடான நீராவி சுவாச பாதையில் இருக்கும் கிருமிகளை கொல்லும். மேலும் இது மென்மையான நாசி திசுக்களை, சூடான நீராவி காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரு ஸ்டீம் இன்ஹேலர் இல்லாத நிலையில், சுடு தண்ணீரை பயன்படுத்தலாம். ஜலதோஷம் வருவதுப் போல் தோன்றினால், நீராவி பிடித்தலால் இதனை தடுக்க இயலும். ஏற்கனவே ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், ஜலதோஷ வலி நிவாரணி மற்றும் ஸ்டீமரை பயன்படுத்துதல் வேண்டும்.
இஞ்சி டீ
ஆவி பறக்கும் சூடான இஞ்சி டீ குடித்தால், ஜலதோஷத்தை எளிமையாகப் போக்கலாம்.
புதினா டீ
புதினா மற்றும் துளசி இலைகள் சேர்க்கப்பட்ட டீயை ஜலதோஷத்தின் போது குடித்தால், தொண்டை மற்றும் சுவாச பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குணமாகும்.
சூடான ரசம்
புளி மற்றும் கருப்பு மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் சூடான ரசம், உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேற உதவுகிறது. மேலும் மூக்கு மற்றும் கண்களில் நீர்பெருக்கெடுப்பால், நாசி பாதையில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகின்றது.
பூண்டு ரசம்
பூண்டு ரசம், ஒரு பழமையான முறை. இது ஜலதோஷத்தின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. மேலும் பூண்டு ஒரு ஒருங்கிணைந்த சுவை மணத்தின் விளைவுக்காகவும் ரசத்தில் சேர்க்கப்படுகிறது.
மஞ்சள் தூள்
பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கவும் செய்யலாம். ஏனெனில் மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அது ஒரு பயனுள்ள தீர்வாகும் .
வைட்டமின் சி
வைட்டமின் சி, ஒரு தொற்று எதிர்ப்பு மருந்தாகும், ஜலதோஷத்திற்கு நன்கு அறியப்பட்ட மருந்தாக உள்ளது. எனவே ஒரு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து குடிப்பதால், உடலுக்கு எதிப்பு சக்தியானது அதிகரிக்கும்.
துளசி இலைகள்
குழந்தைகளுக்கு மூக்கு அடைத்திருந்தால், தேனுடன் துளசி இலை சாற்றை கலந்து ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம். பெரியவர்கள் துளசி இலையை மென்று சாப்பிடலாம்.
சுத்தமான கைகள்
உணவு பொருட்கள் தொடர்பான எதையும் கையாளுவதற்கு முன்பு கிருமி நாசினியைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும். இந்த செயல் உடலினுள் ஜலதோஷம் காரணமாக நுழையும் நுண்ணுயிரிகளைக் குறைக்கிறது.
No comments:
Post a Comment