தானியங்களும் அவற்றின் மருத்துவ பயன்களும்!
பச்சரிசி :- இது பலத்தைத் தரும். பித்தத்தை தணிக்கும். வாதத்தை விருத்தி செய்யும். பத்தியத்திற்குதவாது.
புழுங்கலரிசி :- இது பாலர்முதல் முதியவர் வரை அனைவருக்கும் நோயாளிகளுக்கும் பொருத்தமான உணவாகும். பத்தியத்திற்காகும்.
கோதுமை :- இது பலம், சுக்கிலம், பித்தம் இவைகளை விருத்தி செய்யும். வாதத்தையும், பிரமேகத்தையும் நீக்கும். ஷயம் மது, மேகம் முதலிய நோயினருக்கு நல்ல உணவாகும்.
சோளம்:- தினவு, வீரணம், கரப்பான் முதலியன அதிகரிக்கும் நல்ல மருந்தும் கெடும் .
கேழ்வரகு:- இது வாதம் அல்லது பித்தவாதத்தை உண்டாக்கும். பலம் எற்படும். இது கபதேகிகளுக்கு சிறந்த உணவாகும்.
கம்பு:- இதனால் சொரி, சிரங்கு உண்டாகும். ஆனால் உடலுக்கு பலத்தைதரும். சரீரத்தின் வெப்பத்தைத்தணிக்கும் குளிர்ச்சி என்பர்.
கடலை :- இது வயிற்றுவலி வயிற்றுப்புரம்,மந்தம், கிரகணி, மயக்கம், மூலவாயு முதலியவைகளை உண்டாக்கும். மருந்தின் குணத்தை கெடுக்கும்.
உளுந்து :- இது பித்தாதிக்கம், எலும்புறுக்கி முதலியவைகளை நீக்கும். கபவாதம் இடுப்பிற்கு பலம். வீரியவிருத்தி முதலியவைகளை உண்டாக்கும்.
துவரை :- இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத்தருவதுடன் இது சிறந்த பத்திய உணவாகும்.இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும் பத்தியர்களுக்கும் உதவும்.
பச்சைப்பயறு:- இது பித்தத்தை நீக்கும், வாய்வை உண்டாக்கும் சீதளமென்பர்.
பட்டாணி :- இது நுரையீரலுக்கும், இருதயத்திற்கும் வலிவைத்தரும். ஆனால் வாய்வையும்,மந்தத்தையும், உண்டாக்கும்.
மொச்சை :- திரிதோஷணங்களை விருத்தி செய்யும். உஷ்ணத்தை தணிக்கும், மலத்தைப்பெருக்கும்.
பார்லியரிசி:- இது சிறுநீரைப்பெருக்கும், மந்தபேதியைக்கட்டும், பசியைத்தணிக்கும். சுரம் முதலிய நோயாளிகளுக்கு கஞ்சிக்கு உதவும்.
No comments:
Post a Comment