Sunday, September 8, 2013

இரைப்பை என்றொரு மிக்ஸி:


சாதாரணமாக இரைப்பையின் கொள்ளளவு, சுமார் ஒரு லிட்டர் உணவாகும். ஒரு லிட்டர் உணவு என்பது ஒரு கிலோ எடையுள்ள உணவுக்குச் சமம். ஆக ஒரு கிலோ உணவு, அது சாதமாக இருக்கலாம், பிரியாணியாக இருக்கலாம், பிஸ்ஸாவாக இருக்கலாம், பொங்கலாக இருக்கலாம், சப்பாத்தியாக இருக்கலாம். இப்படி எந்த வகை உணவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சில நேரங்களில், நாம் சாப்பிடும் சாப்பாட்டு அயிட்டங்கள் எல்லாமே ரொம்ப ருசியாக இருந்துவிட்டால், நாம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு விடுவோம். இரைப்பையின் சுவர்கள், நான்கு அடுக்கு திசுக்களினால் ஆனது. இந்த நான்கடுக்கு திசுக்களில், மூன்றாவது அடுக்கிலுள்ள திசுவின் பெயர் `மங்குவாரிஸ் எக்ஸ்டெர்னா' ஆகும். மிக ஸ்ட்ராங்கான, மிக மெல்லிய தசைகளைக் கொண்ட இந்த மூன்றாவது அடுக்கு திசுதான், இரைப்பை ஒரு மிக்ஸி மாதிரி அரைப்பதற்கும், பிசைந்து பிசைந்து உணவைக் கலக்குவதற்கும், கூழாக்குவதற்கும் மிக மிக உபயோகப்படும் தசையாகும். இந்த `மஸ்குவாரிஸ் எக்ஸ்டெர்னா' தசை அடுக்கு, இரைப்பையைத் தவிர, உணவுப் பாதையின் வேறு எந்த இடத்திலும் கிடையாது. இரைப்பையின் சிறப்பம்சம் இதுதான். மிக்ஸி மாதிரி கம்பி, கத்தி, பற்சக்கரம் இது எதுவுமில்லாமல், `மஸ்குவாரிஸ் எக்ஸ் டெர்னா' என்று சொல்லக்கூடிய இந்த தசை அடுக்கை வைத்துக்கொண்டுதான், இரைப்பை, நாம் கன்னா பின்னா என்று சாப்பிடும் கடினமான உணவைக் கூட உண்டு இல்லை என்று அரைத்துத் தள்ளி, உணவுக்காக தயார் பண்ணி விடுகிறது. நாம் வாயில் போடும் உணவு, போட்ட சில வினாடிகளிலேயே நெஞ்சிலுள்ள உணவுக்குழாய் வழியாக, இரைப்பைக்கு வந்து சேர்ந்து விடுகிறது. அதிலும் நாம் தண் ணீரோ, காப்பியோ, மோரோ குடிக்கிறோம் என்றால், அது எல்லாமே சில வினாடிகளிலேயே இரைப்பைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் இரைப்பையிலிருந்து உணவு வெளியேற, சுமார் முக்கால் மணி நேரத்திலிருந்து சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதே மாதிரி, நாம் எவ்வளவு உணவு சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தும், என்ன விதமான உணவு சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தும் தான், இரைப்பை ஜீரணம் செய்யும் வேலையின் நேரம் முடிவு செய்யப்படும். கூழாக்கி, ஜீரணம் ஆரம்பமாகும் நேரம், சுமார் நாற்பது நிமிடத்திலிருந்து சில மணி நேரங்கள் பிடிக்கும். இரைப்பை, ஜீரணத்துக்கு இரண்டு வழிகளில் உபயோகமாக இருக்கிறது. 1. இரைப்பையின் மிகக் கடினமான தசைச் சுவர்கள், இரைப்பையில் வந்து விழும் உணவுப் பொருட்களை, கலக்கி, பிசைந்து, கடைந்தெடுத்து, ஒரு கூழ் போல் ஆக்கி விடுகிறது. 2. இரைப்பையின் சுவர்களிலுள்ள சுரப்பிகள், ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், நிறைய என்ஸைம்களையும் சுரக்கிறது. இந்த அமிலமும், என்ஸைமும் சேர்ந்த `ஜீரண நீர்க்கலவை' தான், உணவிலுள்ள புரோட்டின், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை ஜீரணிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. இரைப்பையே முழு ஜீரண வேலையையும் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. ஏனெனில் இரைப்பைக்கு ஜீரண நீரை சுரக்கச் செய்து, உணவுப் பொருட்களை, ஜீரண நீருடன் சேர்த்து கூழாக்க வேண்டிய வேலை இருக்கிறது. ஆகவே இரைப்பையே, ஜீரணமான பொருட்களை உறிஞ்சும் வேலையை பார்க்கக்கூடாது என்பதற்காக, இரைப் பையின் உள் சுவர்கள் `ம்யூகோஸா' என்று சொல்லப்படும், ஒரு மெல்லிய திசுவினால் மூடப்பட்டிருக்கிறது. இந்த ம்யூகோஸா திசு, ஒருவித திரவத்தை சுரக்கிறது. இதன் பெயர் `ம்யூகஸ்' ஆகும். இரைப்பையிலுள்ள ஸ்ட்ராங்கான ஹைட்ரோகுளோரிக் அமிலம், உணவோடு சேர்ந்து விடும் கெட்ட பாக்டீரியாக்களைக் கொன்று விடும் சக்தி கொண்டது. உணவிலுள்ள அனேக சத்துக்களை உறிஞ்சும் வேலையை முக்கியமாக சிறுகுடல் செய்தாலும் (1) தண்ணீர், (2) அமினோ அமிலங்கள், (3) குளூகோஸ், (4) சில மருந்துப் பொருட்கள் (உதாரணம்: ஆஸ்பிரின்) இவைகளையெல்லாம் சில நேரங்களில் இரைப்பையிலேயே உறிஞ்சப்படுகிறது. சிறுகுடல் காலியாகவும், ஓய்வாகவும் இருந்தால்தான், இரைப்பை, தான் அரைத்து வைத்திருக்கும் உணவை, சிறுகுடலுக்குள் தள்ளும். சிறுகுடல் நிரம்பியும், பிஸியாகவும் இருந்தால், இரைப்பை தான் அரைத்து வைத்திருக்கும் உணவை, அப்படியே வைத்திருக்கும். எப்பொழுது சிறுகுடலில் இருக்கும் உணவு காலியாகிறதோ, அப்பொழுது இரைப்பை, தன்னிடமுள்ள உணவை சிறுகுடலுக்குள் தள்ளும். நீங்கள் சாப்பாட்டை வாயில் போட்டு விழுங்குவதற்கு சுமார் இரண்டு நிமிடங்கள்தான் ஆகிறது. ஆனால் நீங்கள் சாப்பிட ஆரம்பித்த உடனேயே, உணவுப்பாதை, ஜீரண வேலையை பார்க்க ரெடியாகி விடுகிறது. அப்புறம் என்ன, சாப்பிட்ட உணவை, முழுவதும் ஜீரணமாக்கி வெளியே தள்ள, மணிக்கணக்காக, ஏன் நாள் கணக்காகக் கூட, உணவு மண்டலம் ஜீரண வேலையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. உணவு நன்றாக ஜீரணமாவதற்கு, உணவுப்பாதையிலுள்ள ஜீரண நீர்க்கலவை மட்டுமல்லாமல், கல்லீரல், கணையம், பித்தப்பை ஆகியவைகளில் சுரக்கும் என்ஸைம்களும் மிக மிக உதவியாக இருக்கின்றன.

No comments:

Post a Comment