Sunday, September 15, 2013

வாயு தொல்லையா?


வாயு தொல்லையா? இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும். வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும். காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும். உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும். காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

No comments:

Post a Comment