Wednesday, September 25, 2013

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!


பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு! பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம். காரணங்கள்: ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம். அத்திப் பால் ஐந்து சொட்டு எடுத்து வெண்ணெய் சேர்த்து உண்ணலாம். குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ணலாம். இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம். இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம். தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம். நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம். கால்ஸ்பூன் லவங்கப் பட்டைப் பொடியை எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம். கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம். அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம். கட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம். முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றின் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம். மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம். அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம். மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ணலாம். நிலப் பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர்க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம். வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம். திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்கு சேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையில் குடிக்கலாம். மாம்பிசின், விளாம்பிசின் பொடி சமஅளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம். கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத்துடன் கலந்து உண்ணலாம். சேர்க்க வேண்டியவை: துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்திப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல். நீக்க வேண்டியவை: இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.

No comments:

Post a Comment