Friday, May 30, 2014

சர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு மருந்தாகும் வெந்தயம்

ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற  அளவில், காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம். 

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும். 

இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக  காணப்படும். வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம். 

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு  அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.

Thursday, May 29, 2014

பாரம்பரிய நெல் அல்லது அரிசி கிடைக்கும்

பாரம்பரிய நெல் அல்லது அரிசி கிடைக்கும் :
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள் நேரடியாக விவசாயிகளிடமே வாங்க கீழ் கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு :
1.விலை மற்றும் அரிசியின் தரத்தை சோதித்துக் கொள்ளவும்.
2.இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான எங்களின் முயற்சி . )
தொலைபேசி எண்கள் :
1.கருடன் சம்பா , பூங்கார்( சிகப்பு ) , குள்ளத்தார்( சிகப்பு ) , கருங்குறுவை ஆகிய அரிசி & விதைநெல் ரகங்களுக்கு பாண்டிச்சேரி , கிருஷ்ணமூர்த்தி : 99432 49900
2.வெள்ளைப் பொன்னி அரிசிக்கு கருணாகரன் , வத்தாரயிருப்பு, விருதுநகர் மாவட்டம் : 90472 73009
3.ஆடுதுறை 50 அரிசிக்கு சுப்பாராஜ், விருதுநகர் மாவட்டம் : 93445 09193.
பாரம்பரிய நெல் அல்லது அரிசி பயன்படுத்த விரும்பும் நண்பர்களுக்காக இதனை அவசியம் பகிரவும்..!

Thursday, May 22, 2014

கத்தரிக்காய்

கத்தரிக்காய்
மருத்துவக் குணங்கள்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாகும். கத்தரிப்பிஞ்சும், முற்றிய காய்களும் சமைத்து உண்ண உபயோகப்படுகின்றன. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்  ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால்  நாம் சாப்பிடும்  மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக்  கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பாரிசவாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகல்கிறது. உடல் வலுவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது  முதலியவையும் தடுக்கப்படுகிறது. முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும்  அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட  இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம். கத்தரிவற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். இந்தியாவில் தோன்றியது கத்தரிக்காய். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிர்  செய்யப்பட்டு வருகிறது. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய  நாடுகளின் முக்கிய காய்கறிப்  பதார்த்தமாய் இப்பொழுதும் இருந்து வருகிறது. மத்திய தரைக்கடல் நாடுகளிலும், பால்கன் பகுதிகளிலும் முக்கிய உணவாகக் கத்தரிக்காயைப் போற்றி உண்ணுகின்றனர். அமெரிக்காவின் முக்கியமான முதன்மையான 22 காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாய் விளங்குகிறது. உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள்  மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் ஊதா அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். அவை இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து  சிதைந்து  சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு  வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும். 

தூதுவளை

மருத்துவக் குணங்கள்:
  1. தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
  2. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.
  3. தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
  4. தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
  5. வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
  6. தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.
  7. தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.
  8. காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.
  9. மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.
  10. தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.
  11. தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
  12. தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் நீங்கும். பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.
  13. தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.
  14. தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.http://sithamarunthu.blogspot.in/

Sunday, May 18, 2014

பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )

பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்........... ( இய‌ற்கை வைத்தியம் )


1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.
9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.

Saturday, May 17, 2014

ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்

ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்


ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்
குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது. மேலும் இந்த பிரச்சனை சிறுவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த ஹெர்னியா என்னும் குடலியக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
மேலும் குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இத்தகைய ஹெர்னியா இருந்தால், உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
இப்போது அந்த குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.
ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!
அதிமதுரம்
குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
இஞ்சி
இஞ்சி கூட குடலிறக்கத்தை சரிசெய்யப் பயன்படும். அதிலும் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
சீமைச் சாமந்தி டீ
வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.
மோர்
ஹெர்னியா இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று முமுறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலியக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.

அல்சரை தவிர்க்க.........!

அல்சரை தவிர்க்க.........!
ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர்
வரவே வராது.......!
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண்
பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும்
நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால்
ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில்
பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில்
பாலுண்ணி தோன்றியதும்,
வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால்
இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால்
விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால்,
தலைவலி நீங்கும்.......!

Friday, May 16, 2014

கோடைக்கு ஏற்ற பாசிப்பயறு

கோடைக்கு ஏற்ற பாசிப்பயறு

பயறு வகை உணவான பாசிப்பயறு பல்வேறு சத்துகளின் பெட்டகமாக உள்ளது. பண்டைய காலம் முதலே பாசிப்பயறு இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா போன்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

கடந்த நூற்றாண்டு களில்தான் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளன. புரதம், கார்போஹைட்ரேட்டுடன், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. 

பக்கவாதத்தில் இருந்து மீளலாம்

பக்கவாத பாதிப்பு உலகெங்கிலும் பயத்தினை அளித்தாலும், ஒரு மகிழ்ச்சியான செய்தி... இதில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடிய மருத்துவ முன்னேற்றம் சமீபத்திய காலகட்டத்தில் ஏற்பட்டு உள்ளது. பொதுவாக இது 65 வயதை கடப்போருக்கு அதிகமாக பக்கவாத பாதிப்பு காணப்படுகிறது. 

வயதானவர்களைத்தான் இது அதிகமாக தாக்கும் என்பதில்லை. நடுத்தர வயதில் இருப்போருக்கும் வர வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த பாதிப்பு அதிக இயலாமையை கொடுத்து விட்டாலும், தொடர் சிகிச்சை பயிற்சி மூலம் அவர்கள் நல்ல முன்னேற்றம் பெற முடிகிறது. பக்கவாதத்துக்கான அறிகுறிகள்...

Thursday, May 15, 2014

மணமும் மருத்துவ குணமும் கொண்ட தாழம்பூ

தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும்  சக்தியுடையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே  கொண்டுள்ளது. தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது.  

ரத்தம் சுத்தமடைய

முன்னோர் வழங்கிய மூலிகை பட்டிடை


மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங்கருத் திதுதானே


மனித உறுப்புகளில் இன்றியமையாதது கண். இந்த கண்ணை குறித்து பல்வேறு சங்க இலக்கிய பாடல்களும் பேசுகின்றன. ராமாயணத்தில் கூட  ராமனும் சீதையும் இணைவதற்கு அவர்களின் முதல் பார்வை சந்திப்பே முக்கிய காரணம் என வர்ணிக்கப்படுகிறது. குழந்தைகள் படிக்கவில்லை  என்றால், கண்ணை மட்டும் விட்டு விட்டு உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் அடித்து உதையுங்கள் என முன்பெல்லாம் பெற்றோர் கூறுவது  வழக்கம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு, கண். அந்த கண்ணை தினந்தோறும் காப்பதற்கு இயற்கை படைத்த முக்கியமான துணை  உறுப்பு, இமை.

இவ்வளவு பாதுகாப்புடன் அமைந்துள்ள கண்ணை நோய் தொற்றினால் என்ன செய்வது? அதற்கு தான் ஒரு மூலிகையை முன்னோர் வழங்கியுள்ளனர்.  அது, தெய்வத்தன்மையுடைய கோயில்களில் இறைவனுக்கு சாத்தப்படும் பூச்சரங்களில் இடம் பெறக்கூடிய பூ. அதன் பெயர் பட்டிடை. கோயில்  நந்தவன பூங்காக்களில் வளர்க்கப்படும் செடி. எதிரெடுக்கில் கரும்பச்சை நிறத்துடன் இலைகளும், நடுவே வெள்ளை நிற பூக்களும் கொண்ட அழகிய  சிறு செடி. வீட்டு தோட்டங்களிலும் கோயில்களிலும் இது வளர்க்கப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் அழகு செடியாக வளர்க்கின்றனர். 3 முதல் 6  அடி உயரம் வரை வளரும்.

கண் நோய்க்கு பயன்படும் கண் காச மாத்திரை மற்றும் கண் நோய் தீர்க்கும் நண்டுக்கல் பற்பம் ஆகியவற்றில் பட்டிடை சேருகிறது. மேலும் கண்  நோய்க்கு தயாரிக்கப்படும் அனைத்து சித்த மருந்துகளிலும் பட்டிடைக்குதான் முதலிடம். ஆவணங்கள் எழுத உதவும் அழியாத மை தயாரிக்க பட்டிடை  பயன்படுத்தப்படுகிறது. 

வாசனை திரவியங்கள் தயாரிக்கும் பொருட்களிலும் வாசனை நீண்ட காலம் நிலைத்து நிற்க பட்டிடை பயன்படுத்தப்படுகிறது. இரும்பு பற்ற வைக்கும்  தொழிலாளர்கள் கண் சிவந்து தூங்க முடியாமல் வலியால் துடிப்பார்கள். இவர்கள் புதிய பட்டிடை பூவால் ஒத்தடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கும்.  பூவை பறித்து தண்ணீரில் கழுவி கண்களை மூடி அதன் மேல் வைத்து மெல்லிய துணியால் கட்டிக்கொண்டு படுத்தால் கண் வலி பறந்து போகும்.  சிவந்த கண்கள் பழைய நிலைக்கு வந்து சேரும்.

நேத்திர வாயுகமழ் நேத்திரபுண் வெட்டருகல்
நேத்திரங் பாலசன்னி நீசவினைக்- கோத்திரங்கள்
மாள நொடுக்குதலால் வாகடர்கைக் கேற்றவச்ர
வாளஞ் சுயோதனனார் மாலை 
என்கிறது தமிழ்பாடல் ஒன்று.

பட்டிடை செடி மற்றும் பூவின் பாலில் நல்லெண்ணெய் விட்டு நன்றாய் கலந்து நெற்றியில் தேய்க்க கண் வலி நீங்கும். பழங்காலங்களில் போரில்  வெட்டு பட்டால் காயம் சீழ் பிடிக்காமல் ஆற பட்டிடை இலைகளை ஒடித்தால் வரும் பாலை பயன்படுத்தினர். இன்றும் கிராமங்களில் இதை  பயன்படுத்தி வருகிறார்கள்.பட்டிடை பூ 50 கிராம், களாப்பூ 50 கிராம் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு பூக்கள் மூழ்கும் வரை நல்லெண்ணெயை ஊற்றி  20 நாள் வெயிலில் வைத்து (இந்த தயாரிப்புக்கு சூரிய புடம் என பெயர்) வடி கட்டி காலை, மாலை வேளைகளில் கண்ணில் ஓரிரு துளிகள் விட்டு  வர பூ, சதை வளர்ச்சி, பலவிதமான கண்படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

இதன் வேரை வாயில் போட்டு மென்றால் பல் வலி நீங்கும். தண்ணீரை சிறிதளவு விட்டு அரைத்து கொட்டை பாக்கு அளவு உள்ளுக்கு கொடுக்க  வயிற்றுப் புழு சாகும். பட்டிடை பூ தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாக எடுத்து கசக்கி கண்களில் இரண்டொரு துளி விட்டு வர கண் பூ விலகும்.  பட்டிடை பூ செண்பகப் பூ, எள்ளுப்பூ இவற்றை சுத்தம் செய்து அதனுடன் துளசி வேர், சங்குப் பொடி ஆகியவற்றில் புளியம் பூ சாறு, எலுமிச்சை சாறு  ஆகியவற்றை அரைத்து நிழலில் உலர்த்தி வைத்து தாய்ப்பாலில் உரைத்து கண்களில் தீட்டி வந்தால் கண் வலி, பூ விழுதல், சதை வாங்கி  முதலியவை தீரும். 

இத்தனை பெருமைக்கும் உரிய பட்டிடை செடி எது தெரியுமா? தினந்தோறும் நாம் எளிதாக பார்க்க முடியும் நந்தியாவட்டை தான்.சங்க இலக்கியங்களில் பெண்கள் விளையாடி மகிழ்ந்த 96 வகை மலர்களில் ஒன்று, இந்த நந்தியாவட்டை. நந்தியாவ நேத்திர வாயுகமழ் நேத்திர புண்  வெட்டருகல், நந்தி பத்திரி, நந்தியா வர்த்தம், பட்டிடை, வலம்புரி, சுயோதனன் மாலை என பல்வேறு பெயர்கள் இதற்கு உண்டு.

காசம் படலம் கரும்பாவை தோடமெனப்
பேசுவிழி நோய்கடமை பேர்ப்பதன்றி- ஓசைதரு
தந்திபோ லேதெறித்துச் சாருமண்டை நோயகற்றும்
நந்தியாவட்டப்பூ நன்று
 என்கின்றது பழம் பாடல்.

இந்த அரிய மருத்துவ குணம் கொண்ட பட்டிடையாம் நந்தியாவட்டையை தகுந்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று முன்னோர்கள் காட்டிய  வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

முன்னோர் வழங்கிய மூலிகை: தகரை




Monday, April 14, 2014

வெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் :


வெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் :

வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வெந்தயம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.
பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு :

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சர்க்கரை வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது.

வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது. பொடுகு பிரச்சனை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.

வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்....

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்..!

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்..!

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள். விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்.

நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பல வகையான உணவுகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது

நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பல வகையான உணவுகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. ஒருகாலத்தில் நம் முன்னோர்கள் உடல்சூட்டை தணிக்க நீர்மோர், கேழ்வரகுகூழ், போன்ற எளிய உணவுகளை சாப்பிட்டனர், இதனால மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை நிலையை அடைந்தனர். தற்போது, வெயில் காலம் தொடங்கிவிட்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகுகூழின் விற்பனை ஒருபுறம் அமோகமாக இருக்க, ஒருபக்கம் குளிர்பான வியாபாரமும் களைகட்டி வருகிறது.

உடலுக்கும், மனதுக்கும் சக்தி கொடுக்கும் ஒரு ஜிலீர் பானம் தற்போது விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. அதன் பெயர் ‘‘மோலாசம்’’, அது என்ன மோலாசம் என்ற கேள்வியோடு குளிர்பானக்கடையை நடத்திவரும் செல்வி என்பவரிடம் கேட்டோம், அது குறித்து ஆர்வத்தோடு அவர் கூறுகையில், வெள்ளை புட்டரிசி, பன்னீர், தேங்காய்பால், கல்யாண முருங்கை இலை, ஆகிய எளிய பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் மோலாசம்.

இதை தினமும் குடித்து வந்தால் உடல்சூடு முழுவதும் குணமடையும், மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், கண் எரிச்சல், அடிவயிற்று வலி, வயிற்றுபுண், உடல் சோர்வு, போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இந்த பானத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம். மேலும் வெயில் காலத்திற்கு மிகவும் சிறந்த குளிர்பானவகை என்றார்.

செய்முறை: வெள்ளை புட்டரிசி (அ) உயர்தர பச்சரிசியை, பயன்படுத்துவதற்கு முன்பாக ஒருநாள் முழுவதும் பன்னீரில் ஊறவைக்கவேண்டும், அதில் கல்யாண முருங்கை இலைகளின் நரம்புகளை நீக்கி வெறும் இலைகள் மட்டும் 2ல் இருந்து 5 இலைகள் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும், மறுநாள் காலையில் பயன்படுத்தலாம். இதனுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து தேங்காய்பால் ஊற்றி சாப்பிடலாம்.

மரபணு மஞ்சள் வாழைப்பழம்:-



மரபணு மஞ்சள் வாழைப்பழம்:-
*** மக்களை காப்பாற்றுங்கள் தயவு செய்து படிக்கவும், படித்ததும் பகிரவு ***
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.
இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.
பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.
பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.
மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.
இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி. ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும்.
நன்றி
தினமலர்

உடல் எடையைக் குறைக்க வெந்தயம் சாப்பிடுங்க!


உடல் எடையைக் குறைக்க வெந்தயம் சாப்பிடுங்க!------------------கோடைகாலத்தில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. இப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.
எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.
வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.
வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்!

Saturday, March 8, 2014

உடற்செல்களுக்கு வலிமை தரும் கீரை

கீரை வகைகளில் முருங்கைக் கீரைக்கு தனி மவுசு உண்டு. 90 வகையான சத்துப்பொருட்களும், 46 வகை நோய் எதிர்ப்பு பொருட்களும் கொண்டது முருங்கைக் கீரை. ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது. முருங்கைக் கீரையின் சத்துக்களை பார்க்கலாம்... 

* முருங்கைக் கீரை குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது. 100 கிராம் கீரையில் 64 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. 

* கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது. 100 கிராம் கீரையில் 8.28 கிராம் கார்போஹைட்ரேட்டும், 2 கிராம் நார்ப்பொருளும், 1.4 கிராம் கொழுப்புச்சத்தும் உள்ளன. 

* புரதம் நிறைந்தது முருங்கைக் கீரை. 100 கிராம் கீரையில் 9.40 கிராம் புரதம் கிடைக்கிறது. மேலும் 78.66 கிராம் அளவில் நீர்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. 

* வைட்டமின்-ஏ, தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 47 சதவீதம் அதாவது 378 மைக்ரோ கிராம் காணப்படுகிறது. கண் பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமாகும். சரும பாதுகாப்பிலும் பங்கெடுக்கிறது. உலர்ந்த கீரையை விட பச்சைக் கீரையில் 10 மடங்கு அதிகமாக வைட்ட மின்-ஏ, கிடைக்கிறது. 

* பி-குழும வைட்டமின்களான தயாமின் (வைட்டமின் பி-1), ரிபோபிளேவின் (பி-2), நியாசின்(பி-3), பான்டோ தெனிக் அமிலம்(பி-5), வைட்டமின்-பி6, போலேட்(பி-9)ஆகியவையும் சராசரி அளவில் காணப்படுகிறது. கிராம் கீரை தினசரி உடலுக்குத் தேவையான வைட்டமின்-சியின் 67 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. அதாவது 40 மைக்ரோ கிராம் வைட்டமின்-சி உடலுக்கு கிடைக்கிறது. 

கிருமிகளின் நோய்த் தொற்றுகளில் இருந்தும், தீமை விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களிடம் இருந்தும் பாதுகாப்பு அளிக்கக்கூடியது வைட்டமின்-சி. ஆரஞ்சு பழத்தில் கிடைப்பதைப்போல 7 மடங்கு வைட்டமின்-சி கீரையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சளி, காய்ச்சலுக்கு எதிர்ப்பு சக்தி வழங்கக்கூடியது இது.  

* எலும்புகள், பற்களின் உறுதிக்கு துணைபுரியும் கால்சியம், 100 கிராம் கீரையில் 185 கிராம் என்ற அளவில் மிகுந்து காணப்படுகிறது. 

* தாது உப்புக்களான இரும்பு (31 சதவீதம்), மக்னீசியம் (41%), மாங்கனீசு (17%), பாஸ்பரஸ் (16%), பொட்டாசியம் (7%), சோடியம் (1%), துத்தநாகம் (6%) போன்றவையும் முருங்கைக் கீரையில் உள்ளன. துத்தநாகம் ரோம வளர்ச்சிக்கும், சருமத்தின் நன்மைக்கும் உதவக் கூடியது. இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும். பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்குத் துணை நிற்கும். உடற்செல்களுக்கு வலிமையைத் தரக்கூடியது முருங்கைக் கீரை தாதுக்கள். 

* தினமும் 3 கிராம் முருங்கைக் கீரை தூள் சாப்பிட்டு வந்தால் வலிப்பு மற்றும் பல்வேறு டிஸ்ஸார்டர் பாதிப்புகள் ஏற்படாமல் எதிர்ப்பு சக்தி தரும்

இரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரை

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு உண்டு. அதிலுள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா... 

* வெந்தயக் கீரைகள் ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'. 

* வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதீத அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. 

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது. 

* 'வைட்டமின்-கே' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன. 

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். 

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது. 

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. 

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன. 

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன. 

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.

Monday, March 3, 2014

சித்த மருத்துவ குறிப்புகள்

தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கு எண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி,  நெஞ்சுவலி முதலியன அகலும்.

இருமல் குணமாக: 
அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி  சர்க்கரை, பால் சேர்த்து குடித்தால் இருமல் குணமாகும்.

ஜலதோஷம்:
 ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டால்  குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக 
:கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான  நோய்கள் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக
:முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட  ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க: 
தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு  சளிகட்டு நீங்கும்.

பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த 
:தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.

காசம் இறைப்பு நீங்க :
கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

தலைப்பாரம் குறைய :
 நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

தும்மல் நிற்க 
:தூதுவளை பொடியை மிளகு பொடி அல்லது தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.

உடல் வலுப்பெற-ஓரிதழ் தாமரை

மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.
 
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.


இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.
நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. .
இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.


இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.
இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.


உடல் வலுப்பெற


சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக்கியமான உடல் அமைந்தால்தான் நாம் பிறந்ததின்பலனை அனுபவிக்க முடியும்.
சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடல் என்னும் கோவிலை நாசப்படுத்திவிடுகின்றன.


இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும். மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.
உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.


உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்துவைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.


இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். 

இளமை தரும் ஆரஞ்சு பழம்


உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம். சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்து ஆரஞ்சில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

மாத விலக்கு பிரச்சனை தீர மாதுளை பூ சாப்பிடுங்க

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு,  அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு  ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்  படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும்,  உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி,  வெப்பநோய் தீரும்.

மாதுளம்பழத் தோலின் பயன்கள்

மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் நன்கு மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில்  கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.