அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் இலேதம்வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே’’
கரும்பச்சை வண்ணத்தில் உள்ள ஒரு செடியை பொற்கொடி என நமது முன்னோர்கள் அழைத்தார்கள் என்றால், அதன் குணம் எத்தகையை தன்மை கொண்டதாக இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. கரிசலாங்கண்ணி, கரிப்பான், பொற்றலை, பொற்கொடி என்ற பெயர்களால் மஞ்சள் கரிசலாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கைகேசி, பிருங்கராஜம், கையான், தேகராஜம் என்ற பெயர்களில் வெள்ளை கரிசலாங்கண்ணி அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நீர் நிலைகள் உள்ள இடங்களில் தானாகவே முளைத்து செழித்து வளரும். இது எதிரடுக்கில் அமைந்த கரும் பச்சை இலைகள் கொண்டதாக அமைந்திருக்கும்
.
இதன் பூக்கள் வெள்ளை, மஞ்சள், நீல நிறத்தில் அழகுடன் காட்சியளிக்கும். பெரும்பாலும் வெள்ளையும் மஞ்சளும்தான் வயல்வெளிகளில் இருக்கும். நீலம் காடுகளில், மலைப்பகுதிகளில் அரிதாக தென்படும். இது குறுஞ்செடியாகவும் தரையோடு படரும் இனமாகவும் காணப்படுகிறது. மஞ்சள் அல்லது வெள்ளை கரிசலாங்கண்ணிச்சாறு 90 மிலி அளவில் எடுத்து அதனுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து சாப்பிட பாம்பு நஞ்சு நீங்கும். பழமையான வேப்பமரத்தின் பட்டையை காயவைத்து சிறு சிறு துண்டுகளாக பொடித்து அதை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து பின்பு நிழலில் காயவைக்கவேண்டும். மீண்டும் அந்த பட்டைகளை புதிய சாற்றில் ஊற வைக்கவேண்டும்.
ஏழு முறை ஊறவைத்த பட்டையை சூரணமாக்கி அதில் 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து 48 நாள் முதல் 4 மாதம் வரை தொடர்ந்து சாப்பிட 18 வகை குஷ்டநோய்களும் தும்பை இலை, கீழாநெல்லி ஆகியவற்றை சம அளவு மசிய அரைத்து, கொட்டைபாக்கு அளவு மோரில் கலந்து காலை, மாலை 7முதல் 9 நாட் கள் சாப்பிட மஞ்சள் காமாலை தீரும்.கரிசலாங்கண்ணி சாறு 10 சொட்டு எடுத்து அதே அளவில் தேன் ஒரு பாலாடை அள வில் வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க இருமல், சளி குணமாகும். இலைச்சாறு 5.6 லிட்டர், நெல்லிச்சாறு 5.6 லிட்டர், நல்லெண்ணெய் 1.75 லிட்டர், அதிமதுரத்தூள் 8 கிராம் எடுத்து இவைகளை நன்றாக குழைத்து, அதனை சிறு தீயிட்டு மண் சட்டியில் எரிக்கவும்.
பழமையான வேப்பமரத்தின் பட்டையை காயவைத்து சிறு சிறு துண்டுகளாக பொடித்து அதை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து பின்பு நிழலில் காயவைக்கவேண்டும். மீண்டும் அந்த பட்டைகளை புதிய சாற்றில் ஊற வைக்கவேண்டும். ஏழு முறை ஊறவைத்த பட்டையை சூரணமாக்கி அதில் 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து 48 நாள் முதல் 4 மாதம் வரை தொடர்ந்து சாப்பிட 18 வகை குஷ்டநோய்களும் தும்பை இலை, கீழாநெல்லி ஆகியவற்றை சம அளவு மசிய அரைத்து, கொட்டைபாக்கு அளவு மோரில் கலந்து காலை, மாலை 7முதல் 9 நாட் கள் சாப்பிட மஞ்சள் காமாலை தீரும்.
கரிசலாங்கண்ணி சாறு 10 சொட்டு எடுத்து அதே அளவில் தேன் ஒரு பாலாடை அள வில் வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க இருமல், சளி குணமாகும். இலைச்சாறு 5.6 லிட்டர், நெல்லிச்சாறு 5.6 லிட்டர், நல்லெண்ணெய் 1.75 லிட்டர், அதிமதுரத்தூள் 8 கிராம் எடுத்து இவைகளை நன்றாக குழைத்து, அதனை சிறு தீயிட்டு மண் சட்டியில் எரிக்கவும். சடசடப்பு அடங்கியவுடன் பதமாய் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு அவ்வப்போது தலை முழுகிவர கண்காசம், பல்வேறு வகையான காது நோய்கள் நீங்கும். உடலில் ரத்தத்தின் அளவு குறைந்து உடல் வெளுத்து சோர்வுடன் இருப்பவர்கள் பத்து கிராம் கரிசலாங்கண்ணி இலையுடன் 2 கிராம் மிளகு சேர்த்து, வெண்ணெய் போல் அரைத்து மோரில் கலந்து காலை, மாலை சாப்பிட சோகை போகும். இதை
குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோமை
யுற்றபாண்டு பன்னோ யொழிய- நிரற்சொன்ன
மெய்யாந் தகரையொத்த மீனிண்ணு நற்புலத்துக்
கையாந் தகரையொத்தக் கால்’’
என்கிறது அகத்தியர் குணவாகடம்.
கடு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் கரிசாலங்கண்ணி, தும்பை, கீழாநெல்லி சம அளவு எடுத்து, மசிய அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மருந்துண்ணும் நாட்களில் உப்பு, காரம், புளி நீக்கி, பத்தியம் இருக்க வேண்டும்.வெள்ளை பூக்கள் கொண்ட இலைகளை அரைத்து அதை சிறு அடையாக தட்டி காய வைத்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் சமமாக எடுத்து அதில் இந்த அடைகளை ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவிவர இளமையில் ஏற்பட்ட நரை மாறி முடி கருத்து செழித்து வளரும்.
உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு கபம், பித்தம், வாதம் போன்றவை முக்கிய காரணங்களாக விளங்கிறது. இதில் கபத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பெரும்பாலான நோய்களை போக்கி நம்மை நலமுடன் வாழவைக்கும். முன்னோர்கள் கண்டு நமக்களித்த கரிசலாங்கண்ணியை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வளமுடன் வாழ்வோம்.

No comments:
Post a Comment