நம் ஊர் சீதோஷ்ண நிலையில் நன்றாக வளரும் கொய்யாப் பழத்தில் `வைட்டமின் சி' சத்து நிறைந்திருக்கிறது. கொய்யாப்பழம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து. அதற்காக இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வரலாம்.
* வளரும் குழந்தைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப்பழங்களை சாப்பிடுவது நல்லது. சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில் கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.
* கொய்க்காப் பழத்தை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு கொட்டைகள் நீக்கிய கொய்யாப் பழத்தை அரைத்து, அதனுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து தோசையாக வார்த்து கொடுக்கலாம்.
* ரத்த சோகை இருப்பவர்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு சூடான தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி 48 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடலில் சக்தி ஏறும்.
* சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாலட் போல் செய்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.
* கொய்யா மரத்தின் வேர் மற்றும் பட்டையை சுத்தம் செய்து நசுக்கி, வெந்நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் வாய்ப்புண் குணமடைவதுடன், அது மீண்டும் வராமலும் தடுக்கலாம்.
* மா இலையுடன் கொய்யா இலையை காய வைத்து அரைத்து, பல்பொடியாகப் பயன்படுத்தினால், பல்லில் ரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்றவை குணமாகும்.
* மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.
ராஜம் முரளி
மூலிகை அழகு கலை நிபுணர்
போன்:044-24852196

No comments:
Post a Comment