Thursday, February 13, 2014

மூலிகை கீரைகளின் மகத்துவங்கள்

அகத்தி கீரை: அகத்தி கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகளில் மூலிகையாக பயன்படுகிறது. சிறப்பாக இதன் இலை தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்தி கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து  உண்ணப்படுகிறது.

அகத்தியின் சிறப்பு
: அகத்தி கீரை சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறு, செரிமானம் போன்றவை சரியாகும்.

அகத்தியில் உள்ள சத்துகள்:
அகத்தி கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாக  கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையிலும் மாவுச்சத்து இரும்புச்சத்து, வைட்டமின் (உயிர்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

அகத்தியின் பயன்பாடு:
அகத்தி இலையிலிருந்து ஒரு வகை தைலம் தயாரிக்கப்படுகிறது.அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாக பயன்படுகிறது. அகத்திக்கீரை  உடலின் உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது. தாய்ப்பால் அதிகம் சுரக்க வல்லது அந்த கீரைக்கு மூளையை பலப்படுத்தும்  சக்தி அதிகம் உள்ளது. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் பித்தத்தை தணிக்கலாம். இதை உலர்த்தி சூரணம் செய்து காலை  மாலை வெந்நீரில் கலந்தும் குடிக்கலாம்.இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் படிப்படியாக குணமாகும். இது வாய்வு கூடிய  கீரை. எனவே வாய்வு பிரச்சனை உள்ளவர்கள் வாய்வை கண்டிக்கும் பூண்டு பெருங்காயம் சேர்த்து சமைத்து உண்ண வேண்டும். தொண்டையில் புண்  இருப்பின் இந்த கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

கரிசலாங்கண்ணி
: வெண்கரிசலை அல்லது கையாந்தரை ஒரு மருத்துவ மூலிகை செடியாகும் இதில் இருவகை உண்டு மஞ்சள் கரிசலாங்கண்ணியை  அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம்  காணலாம். கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேசசுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது.  வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான். கரிசலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான  மருத்துவ குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துகள்:


நீர்- 85 சதவீதம், மாவுப்பொருள்- 9.2 சதவீதம், புரதம்- 4.4 சதவீதம், கொழுப்பு - 0.8 சதவீதம், கால்சியம் 62 யூனிட், இரும்பு தாது - 8.9 யூனிட்,  பாஸ்பரஸ்- 4.62 சதவீதம். இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

மருத்துவ குணங்கள்:


உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும் கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல்  வளம் பெறும் புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும் ஈரல் மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம்  கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது  ஓராண்டு தாவரமாகும்.

தூதுவளை:


மூலிகையாக பயன்படும் கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்து புதிர் போல வளரும் இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா  நிறமானது சிறிய காய்கள் தோன்றி பழுக்கும் இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும். தூதுவளை இந்தியாவில் அனைத்து  இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் இதுவும் ஒன்று இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அலர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா  முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை பூ காய் வேர் அனைத்தும்  மருத்துவ பயன்கொண்டது.

பயன்படும் உறுப்புகள்:

வேர் முதல் பழம் வரை எல்லா பாகங்களும் பயன்படுகிறது.

* தூதுவளை இலையை பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.
* இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாக கடைந்தோ சாப்பிட்டால் கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவு தெளிவும் உண்டாகும்.
* இலை சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவரகாசம் மார்பு சளி நீங்கும். காயை உலர்த்தி தயிர் உப்பு  ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பைத்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.
* ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளை புகைபிடிக்க சளி இளகி குணப்படும்.

பொன்னாங்கண்ணி:

பொன்னாங்கண்ணி ஈரமான இடங்களில் வளரும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில்  பல்வேறு நாடுகளில் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர் பாகங்கள் உணவுக்கு பயன்படும் உணவு மற்றும் மருத்துவதேவைகளுக்காக  பயிரிடவும் படுகிறது.இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையிலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. கண் எரிச்சல் கண்  மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. பின்பு இந்நோய்கள் குணமாகும். வாய்நாற்றம், வாய்ப்புண்  ஆகியவையும் நீங்கும்.

குப்பைமேனி:


குப்பைமேனி ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். ஓராண்டு தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.  குப்பைமேனியின் அனைத்து மருத்துவ பாகங்களும் மருத்துவ பயன்பாடு உடையனவாகும்.

மருத்துவ குணங்கள்:

* இலை மலம் இளக்கியாகும்.
* சொறி, சிரங்கு, உடல், அரிப்புக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது.
* இலை சாறு பாம்புக்கடி நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
* நெஞ்சு சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது.
* வேர் பேதி மருந்து தயாரிப்பில் பயன்படுகிறது.


வல்லாரை:

வல்லாரை ஒரு மருத்துவ மூலிகை பயன்பாடுடைய தாவரமாகும். ஆசியா ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்.

சத்துகள்:

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து எ உயிர்சத்து, சி மற்றும் தாது உப்புகள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு  தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை தான், இதனை சரசுவதி கீரை என்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்:


இரத்த சுத்தகரிப்பு வேலையை செய்யும்.
* உடல் புண்களை ஆற் றும் வல்லமை கொண்டது.
* தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய் களை தடுக்கும் வல்லமை கொண்டது.
* மனித ஞாபகசகதியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
* பல்துலக்கினால் பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
* சளி குறைய உதவுகிறது.


இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்தி கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.

No comments:

Post a Comment