Tuesday, February 11, 2014

நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்!

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும்.   கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நார்த்தங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

நார்த்தங்காயின் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.

எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம். நார்த்தங்காய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌சியி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம்

குளிர் கால உணவுக் குறிப்புகள்

கிச்சடி, பொங்கல் போன்றவை, குளிர் காலத்துக்கான முழுமையான காலை உணவுகள். இவற்றில் சேர்க்கப்படும் பருப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகு என எல்லாப் பொருள்களுமே இந்தத் தருணத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவப் பொருட்கள். சீக்கிரத்திலேயே செரிக்கும்.

சாதாரணமாக நாம் குடிக்கும் சுக்கு, மல்லிக் காப்பி இந்தக் காலத்துக்கு மிகச் சிறந்த பானம். சுக்கு, மல்லியுடன் இரண்டு மிளகையும் பொடித்துச் சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது. சளி முதல் சகலத்தையும் விரட்டிவிடும். கால்வலி, வாதத்தால் ஏற்படுகிறது.

வலியால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிது பெருஞ்சீரகம், மிளகு, ஓமம், சீரகம் ஆகியவற்றை எடுத்துப் பொடித்து, அதில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். கால்வலி குறையும். இஞ்சிக்கு வீக்கத்தைக் குறைக்கும் மருத்துவக் குணம் உண்டு.

ரத்த ஓட்டத்தில் பிரச்சனை இருந்தாலும், இஞ்சி சரிசெய்யும். மூட்டுவலி, உடல்வலி இருப்பவர்கள் டீயில் இஞ்சியைத் தட்டிப்போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். சமையலில் நிறைய இஞ்சி சேர்க்கலாம். இதனால் கால் வீக்கம் குறைவதுடன், வலியும் நீங்கும்.

உணவில் இஞ்சி, கொத்துமல்லி இலை, புதினா இலை, கறிவேப்பிலை போன்றவற்றை அதிகம் சேர்க்கவேண்டும். இவையெல்லாமே சிறந்த வலி நிவாரணிகள்தான். பனிக் காலத்தில் பால் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. அப்படிக் குடித்தாலும், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்துக் குடிக்கவேண்டும்.

இதனால் கபத்தின் குணம் குறையும். அரிசி, கோதுமைக்குப் பதிலாக, கம்பு, ராகி, பார்லி போன்ற தானியங்களில் கஞ்சி தயாரித்துச் சாப்பிடலாம். ஓட்ஸை விட பார்லி மிகவும் நல்லது. சில குழந்தைகளுக்கு 'வீசிங்’ எனப்படும் இளைப்பு ஏற்படும். சளித் தொந்தரவும் இருக்கும்.

துளசியைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டிக் கொடுத்தால் சளி பிடிக்காது. பேக்கரி உணவுகளான கேக், பஃப்ஸ், பன் போன்றவை மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்த ஸ்நாக்ஸ் கொடுப்பதைத் தவிர்த்து, கொட்டைப் பருப்பு வகைகள் (நட்ஸ்), உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

முளைகட்டிய பயறு சுண்டல், பாசிப்பருப்பில் செய்த லட்டு, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவை சிறந்த ஸ்நாக்ஸ். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், மற்ற செயல்பாடுகளுக்கும் கொழுப்பு மிக அவசியம். எனவே எண்ணெய், நெய் சேர்த்துக்கொள்ளலாம். நெய் போட்டுச் செய்த முறுக்கு, சீடை சாப்பிடத் தரலாம்.

சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடப் பழகிய குழந்தை, 'ஜங்க் ஃபுட்’-ஐ நாடிப் போகாது. இந்தப் பருவத்தில் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற காய்களை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆனால், பூசணி, வெள்ளரி போன்ற நீர்க்காய்களைத் தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழத்தைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக குளிர் காலத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆரஞ்சுப் பழத்துக்கு இதுதான் சீஸன். ஆனால், சளி, ஜலதோஷம் இருப்பவர்கள், ஆரஞ்சைத் தவிர்த்துவிட்டு, நெல்லிக்காய் சாப்பிடலாம்.

அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

கையில் வேர்ப்பகுதி மட்டும் மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தயவர்களுக்குத்தான் தெரியும். அதை நீங்களும் அறிந்துகொள்ளலாமே...

* அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருள், உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்ப்பதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

* ஊட்டச்சத்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

* அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து இலேசாக வறுத்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

* அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்துக் கொண்டு, 20 கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மி.லி.யாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்திவிடலாம்.

* அதிமதுரச் சூரணத்தை தயாரித்து வைத்துக்கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மைப் பலவீனம் நீங்கும். உடல் பலமும் ஆரோக்கியமும் கூடும்.

* பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.

* அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு, இரவு படுக்கும்போது சிறிது பாலில் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் இருக்காது.

* சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள்உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

* அதிமதுரச் சூரணம், தூய சந்தனச் சூரணம் இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து பாலில் கலந்து, மூன்று வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் ரத்தம் வருவது நிற்கும். உடல் உள்உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

வேப்பம் பட்டை மருத்துவ பயன்கள்

• முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி சம அளவில் கலந்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து காலை, மாலை என 48 சாப்பிட்டு வரத் அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

• வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு 50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காய்ச்ச வேண்டும்.

உரிய பதம் வந்ததும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

• நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்தி காயவைத்து பொடித்து அதனைக 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும், வனப்பும் பெறும்.  உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்க்கரை குஷ்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும்.

• வேப்பம் பட்டையுடன் நீர், எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி,​​ சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும் என்று மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டு வருகிறது. 

புடலங்காய் மருத்துவ குணங்கள்

புடலங்காயில் நன்கு முற்றியதை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயை பயன்படுத்த வேண்டும்

1. ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக புடலங்காய் இருக்கிறது. காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு

2.தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.

3. புடலங்காய் அஜீரண தொல்லையை எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

4. குடல் புண்ணை ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.

5. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.

6. மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

7. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். கருப்பைக் கோளாறையும் குணப்படுத்தும். கண்பார்வையை அதிகரிக்க செய்யும்.

9. இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.

10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.

Sunday, February 9, 2014

வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டு கூட்டு

என்னென்ன தேவை?

வாழைத்தண்டு - 1 கப்,
தேங்காய் - 1/2 மூடி,
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?  

வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 1/2 மூடி தேங்காயை விழுது போல் அரைத்து, 250 மி.லி. தண்ணீர் சேர்த்து பால் எடுத்து  கொள்ளவும். நறுக்கிய வாழைத்தண்டுடன் தேங்காய்ப் பால் சேர்க்கவும். அத்துடன் பச்சை மிளகாயை சிறிய துண்டாக நறுக்கிச் சேர்க்கவும். உப்பு, சீரகத்  தூள், கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.,

நீரிழிவுக்கு நல்லது. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் கல்லடைப்புகளை நீக்குகிறது.

 


உடல் எடை குறைய - கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

உடல் எடை குறைய - கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?

வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி.

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா?

குறையும். ஆனால் நான்கு பத்து நாளில் குறையும்.. அதாவது நாற்பது நாளில் குறையும் - கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால்.

1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.

கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?

கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.

கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .

காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.

இந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்க கூடாது

3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.

5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.

6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது

8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொறிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.

9 .எண்ணையில் பொறித்த உணவுகளை, சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.

10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது பேசக் கூடாது.

பலாக்காய்.

பலாக்காய்.

பலாக்காயைக் கூட்டாகவும், தேங்காயை சேர்த்து சொதியாகவும், காரமிட்டு பொரியலாகவும் செய்து உணவுடன் சேர்த்து உண்ணலாம். உணவு செரிமாணம் ஆகாமல் பசியைக் கெடுக்கும்.

இதனை உண்பதால் மந்தம், செரியா மந்தம், அக்கினி மந்தம், பசியின்மை, ருசியின்மை, அஜீரணம், வாதம், மகாவாதம், பக்கவாதம், எரிவாதம், குதிவாதம், குடல்வாதம், மூட்டுவாதம், முடக்குவாதம், பிடிப்பு, பாதவலி, இடுப்புவலி, கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, வாதக்கடுப்பு, வாதக்குடைச்சல், உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல், அசதி, உளைச்சல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், மந்தாரகாசம், மூக்கடைப்பு, ஜலதோஷம் இவைகளை உண்டாக்கும். ஸ்கலிதம், துரித ஸ்கலிதம், சொப்பன ஸ்கலிதம், நீர் போலவும் மோர் போலவும் விந்து நீர்த்துப்போதல் இவை நீங்கும். சுக்கில பலமும் தாதுவிருத்தியும் உண்டாகும்.

’’உண்ணின் மிகுமந்த முறுதியாம் வாதநோ
யண்ணி யிளைப்பிரைப்புமண்டுங்காண் - வண்ணப்
பலாக்காய்க்கு விந்துவுமாம் பாரிலுவமை
சொலாக்காம வாரிதியே சொல்’’

- பதார்த்த குணபாடம், பாடல் எண் - 737.

புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

பல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும்.

பல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும்.

நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும். ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன. அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும். மனிதன் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவருடைய உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம், மனிதன் உட்காரும்போது, அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்ப்படும் அழுத்தமாகும்.

ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீராகாரத்தையும் உட்கொள்கிறான். கண்களின் தசையானது ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்க்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தை கொடுக்கிறது.

ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். மனிதனின், ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும். மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.

மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சராசரி பெண்ணின் உயரம், ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும். காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும். ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது.

மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தனாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது. ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களை சேமித்து வைக்க முடியும். மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் மூடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள கடினமான பொருளாகும். கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும். மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்.

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

மணத்தக்காளி...!!!

மணத்தக்காளி...!!!

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

தலைமுடி பேண சித்தவைத்திய முறை...!

தலைமுடி பேண சித்தவைத்திய முறை...!

வழுக்கை தலையில் முடிவளர:

வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்..! இது உண்மைச் சம்பவம்..!

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்.... சுவையாகவும் இருக்கும். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

பாத எரிச்சல் தீர்வதற்கு

பாத எரிச்சல் தீர்வதற்கு

பாத எரிச்சலால் அவதி படுபவர்கள் வீட்டிலே பயன்படுத்தும் பொருட்களை வைத்து பாத எரிச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பாத எரிச்சல்

மருதாணி இலை,எலுமிச்சைச் சாறு.

மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்

காலில் கட்டி குறைய

எருக்கின் பழுத்த இலை.
வசம்பு.

எருக்கின் பழுத்த இலை 5, வசம்பு 5 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.

பார்வைக் கோளாறை சரிசெய்யும் கேரட்டின் மற்ற நன்மைகள்! ! ! !

பார்வைக் கோளாறை சரிசெய்யும் கேரட்டின் மற்ற நன்மைகள்! ! ! !

காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதன் சுவையாலேயே, இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு கேரட்என்றால் மிகவும் பிடிக்கும்.

இத்தகைய கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அனைவருக்கும் தெரிந்தது, கண் பார்வை கூர்மையாகும் என்பது தான். ஆனால் அதைத் தவிர, அதனை சாப்பிட்டால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

எனவே இத்தகைய கேரட்டை உணவில் அதிகம் சாப்பிட்டால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சனைகளையும்தடுக்கலாம். இப்போது அந்த கேரட் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

1) புற்றுநோய் :

நிறைய ஆய்வுகளில் கேரட் அதிகம் சாப்பிட்டால், மார்பகம், கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி தற்போது மேற்கொண்ட ஒரு ஆய்விலும், கேரட்டில் ஃபால்கரிநால் எனப்படும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

2) பார்வை கோளாறு :

கண்களில் உள்ள ரெட்டினாவின் செயல்பாட்டிற்குவைட்டமின் ஏ சத்து மிகவும் இன்றியமையாதது. அத்தகைய வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் தான், மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. எனவே கேரட்டை தினமும் உணவில் சேர்த்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டின், கண்களுக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்தைக் கொடுக்கும்.

3) இதய நோய் :

ஆய்வுகளில் கேரட்டில் கரோட்டினாய்டுகள் அதிகமான அளவில் இருப்பதால், அதனை அதிகம் சாப்பிடுவோருக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறது. மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டல், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.

4) பக்கவாதம் :

ஹாவர்ட் பல்கலைகழகத்தில்மேற்கொண்ட ஆய்வில், வாரத்திற்கு ஆறு கேரட்டிற்கு மேல் சாப்பிடுபவர்களைவிட, குறைவாக சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம்விரைவில் தாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

5) பொலிவான சருமம் :

கேரட்டில் நல்ல அளவில் கிளின்சிங் தன்மை இருப்பதால், அதனை சாப்பிட கல்லீரலில் தங்கும் கொழுப்புக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேறுவதோடு, இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை அகற்றி, முகப்பருக்கள் வருவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இதர சத்துக்கள், சரும வறட்சியை போக்கி, முகத்தை பொலிவோடு வைக்க உதவும்.

6) முதுமை :

கேரட்டில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டினால், உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் முதுமைத் தோற்றத்தை தரும் பாதிக்கப்பட்ட சரும செல்களை குணப்படுத்தி, இளமையான தோற்றத்தை நீண்ட நாட்கள் வைத்திருக்க உதவும்.

7) ஆரோக்கியமான பற்கள் :

கேரட் சாப்பிட்டால், பற்கள் நன்கு சுத்தமாக இருக்கும். மேலும் இது பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளை முற்றிலும் அகற்றிவிடும். அதுமட்டுமின்றி,கேரட் சாப்பிட்டால், வாயில் எச்சிலின் சுரப்பு அதிகரிக்கும்.

மாம்பழத்தின் பயன்கள்..!

மாம்பழத்தின் பயன்கள்..!
மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.

மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.

மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.

கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்தினால் சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.

மாங்காயின் பயன்கள்:

இது அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும்.

மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.

காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள் உறுப்புகள் பலப்படும்.

மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.

மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்.

முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள்

முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள்

முட்டைகோஸ்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன.. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்… முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன.

எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது. உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.


கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்
:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.