நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்!
பலாப்பழம்
சத்துக்கள்: சர்க்கரையின் அளவு அதிகம். ஓரளவு நார்ச் சத்தும், குறைந்த அளவில் புரதம், இரும்பு, கால்சியமும் இருக்கின்றன.
பலன்கள்: மலச்சிக்கலைப் போக்கி, உடலுக்கு நல்ல தெம்பைக்கொடுக்கும். மாவுச் சத்து உடலுக்குத் தேவை என்பவர்கள், தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
புதினா
சத்துக்கள்: பீட்டாகரோட்டின், ரிபோஃப்ளேவின், ஃபோலிக் அமிலம், சுண்ணாம்புச் சத்து, கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் இதில் நிறைந்துள்ளன. ஓரளவு மக்னீசியம், தாமிரம், துத்தநாகம், மாங்கனீஷ், குரோமியம் இருக்கின்றன.
பலன்கள்: செரிமானத்துக்கு நல்லது. கர்ப்பிணிகளின் மசக்கை வாந்தியைத் தடுக்கும். விக்கல் நீங்கும். மலச்சிக்கலைப் போக்கும். மாதவிடாய்க் கோளாறு சரியாகும். பசியைத் தூண்டும். எல்லோருக்கும் ஏற்றது. துவையலாகச் செய்து சாப்பிடலாம்.
மணத்தக்காளிக்கீரை
சத்துக்கள்: ஓரளவு புரதம், இரும்பு, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் இருக்கின்றன.
பலன்கள்: வாய்ப்புண், வாய் துர்நாற்றம், வயிற்றுப் புண், குடல் புண்ணைக் குணப்படுத்தும். சளி, ஆஸ்துமா தொல்லை நீங்கும். களைப்பு நீங்கும். தூக்கமின்றித் தவிப்பவர்களுக்கு நல்ல மருந்து. குடல் ரணம் சரியாகும். வாரம் ஒரு முறை பொரியல் செய்து சாப்பிட்டு வர, கல்லீரல் வீக்கம் போகும். இதன் காயை மோரில் ஊறவைத்து வற்றலாகக் காயவைத்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

No comments:
Post a Comment