வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதே இன்றைக்கு சாப்பாடு கார குழம்போ அல்லது
சாம்பாரோ என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வருபவர்கள் வீட்டில் சிக்கனோ
மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது
வழக்கம். இவ்வாறு தீடீர் அஜீரணக்கோளாறால் அவதி படுபவர்களுக்காகவே வீட்டில்
இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை
பொருட்களை வைத்து எப்படி அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
எலுமிச்சை மற்றும் இஞ்சி
எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை சொல்லிவிடலாம்.
ஆரஞ்சு சாறு
வீட்டு மருந்துகளில் அஜீரணக்கோளாறுகளுக்கு சிறந்த ஒன்று ஆரஞ்சு சாறு. சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு தம்ளர் ஆரஞ்சு சாறு சாப்பிட்டால் உணவு செரிமானம் அடைந்து உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
மோர், பால்
தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும் அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.
திராட்சை
வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்தது திராட்சைபழம்.. இந்தப்பழத்தை தோலுடன் சாப்பிட்டாலோ அல்லது ஜீஸ் செய்து சாப்பிட்டாலும் வயிறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக செயல்படும்.
எலுமிச்சை
சூடான எலுமிச்சை தண்ணீர் அஜீரணத்தை குணப்படுத்த சிறந்தது. உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு கப் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்துக்கொண்டால் அமிலத்தை தடுத்து பாக்டீரியாவுடன் போராடி செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது.
பூண்டு மருத்துவம்
வீட்டு மருத்துவத்தில் இஞ்சிக்கும் பூண்டுக்கும் தனி இடமே உண்டு. அனைத்து மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சிறந்த அடுப்பங்கறை மருந்து பூண்டு. நீங்கள் வயிற்று வலியால் அவதிபடுகிறீர்கள் என்றால் சமஅளவு பூண்டு சாறு , சோயா எண்ணெய் எடுத்து வயிற்று பகுதியில் மசாஜ் செய்யவேண்டும். வயிற்றில் தடவிய எண்ணெய் தோல் மூலமாக உறிஞ்சப்படும். இது அஜீரணத்தை உடனடியாக நீக்கிவிடும்.
சமையல் சோடா
செரிமான பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டு விட்டதா! ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை போட்டு கலந்து குடித்தால் செரிமான பிரச்சனையை குறைக்கலாம்.
கொத்துமல்லி இலை
ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு சீரகம், கொத்துமல்லி சாறு, உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். வயிற்று வலி ற்படின் இதை பருகலாம். மேலும் கொத்தமல்லி இலை இரண்டு தேக்கரண்டி, இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி மூன்று ஏலக்காய், கிராம்பு கலந்து குடிக்கலாம். இது வாயு தொந்தரவை நீங்கிவிடும்.

No comments:
Post a Comment