Thursday, June 12, 2014

நோய் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருட்கள்!

அவகேடோ/வெண்ணெய் பழம் தினம் ஒரு வெண்ணெய் பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. பேரிக்காய் போன்ற இந்த வெண்ணெய் பழம், இரத்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இப்பழம் இரத்தத்தில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்தைக் குறைப்பது மட்டுமில்லாமல், தேவையான கொழுப்புச் சத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

அன்னாசிப் பழம் அன்னாசிப் பழத்தில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால், அது எலும்பு வளர்ச்சிக்கும் திசுக்களின் இணைப்பிற்கும் பெரிதும் கை கொடுக்கிறது. ஒரு நாளுக்கு நமக்குத் தேவையான மாங்கனீசு சத்தில் 73 சதவீதம் இந்தப் பழத்திலிருந்தே கிடைக்கிறது.


ப்ராக்கோலி பச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலியில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும், நார்ச்சத்தும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்து கிடக்கின்றன. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பிரம்மாதமாகக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

ப்ளூபெர்ரி/அவுரி நெல்லி அவுரி நெல்லி என்று அழைக்கப்படும் ப்ளூபெர்ரியில் பைட்டோகெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டு ஆகிய ரசாயனப் பொருட்கள் மிகுந்துள்ளதால், அது வயது மிகுதியால் ஏற்படும் ஞாபக மறதி நோயைக் குணப்படுத்துகிறது. ஒரு நாளுக்கு ஒரு கை நிறைய அவுரி நெல்லியை சாப்பிட்டு வந்தால், நரம்பு மற்றும் மூளை மண்டலங்களை சீராக்கி ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வெங்காயம் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிகப்பு ஆகிய 3 வகைகளில் கிடைக்கும் வெங்காயத்தில் பாலிஃபீனைல் குவெர்செட்டின் அதிகம் இருப்பதால், அது நம் உடலில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைப்பதோடு, ஆஸ்துமாவையும் தடுக்க உதவுகிறது. மேலும் இதய நோய்கள், புற்றுநோய்கள் வராமலும் தடுக்கிறது.

செலரிக் கீரை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஒரு நாளுக்கு 4 கட்டு செலரிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெளிறிய தண்டுகளையுடைய இந்தக் கீரையில் உள்ள தாலைடு என்னும் வேதிப் பொருள், தசை வலிகளைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்திற்குத் தேவையான அதிக இடத்தை ஒதுக்கவும் உதவுகிறது.


மஞ்சள் நாம் உணவில் ஏன் மஞ்சளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான பல காரணங்களை சமீபத்தில் தான் பார்த்தோம். சாதாரண காயங்களை ஆற்றுவதிலிருந்து புற்றுநோயைக் குணப்படுத்துவது வரை பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக மஞ்சள் விளங்குகிறது.

முட்டைக்கோஸ் புற்றுநோயைத் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் குளுக்கோஸினோலேட்டுகள் ஆகியவை முட்டைக்கோஸில் நிறையவே உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்தும், புற்றுநோய் வளர்வதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


க்ரீன் டீ பல நோய்களை விரட்டியடிக்கும் தன்மை க்ரீன் டீயில் உள்ளது. முக்கியமாக, இதய நோய்கள் சம்பந்தமான பக்கவாதம் வருவதைத் தடுக்க தினமும் 4 கப் க்ரீன் டீ குடித்தால் நல்லது. இது மிகவும் சீப்பும் கூட!


சிவப்பு மிளகாய் பயங்கர காரமுள்ள சிவப்பு மிளகாய் பல நூற்றாண்டுகளாக வலி, தீப்புண், தலைவலி, செரிமானம் உள்ளிட்ட பல உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது இரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தி, தலைவலியை நீக்குகிறது.


வாழைப்பழம் வாழைப்பழம் எல்லோருக்குமே மிகவும் பிடித்த பழம் என்றே சொல்லலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வாயுத் தொல்லை, வாந்தி, பேதி, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல உபாதைகளை இது ஓட ஓட விரட்டும்.மைச்சாமந்தி உடல் சோர்வையும், டென்ஷனையும் நீக்கும் அருமருந்து தான் இந்த சீமைச்சாமந்தி. இதை டீயில் கலந்து சாப்பிடலாம். சீமைச்சாமந்தி டீ பைகளை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டால், மனம் அமைதியாகும், நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.


மாதுளை மாதுளைப் பழத்தில் எல்லாகிக் அமிலம் இருப்பதால், அது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து நம் தோல்களைக் காக்கிறது.


ஆப்பிள் சீடர் வினிகர் உலர்ந்த தோலால் ஏற்படும் அரிப்பு, படை உள்ளிட்ட பல வியாதிகளையும் இது குணப்படுத்த வல்லது. சுத்தமான காட்டன் துணியில் இந்த வினிகரை நனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். எரிச்சலையும், தீப்புண்ணையும் தணிக்கும்.

சால்மன் சால்மன், டுனா மீன்களில் கொழுப்பு எண்ணெய் அதிகம் உள்ளது. வாரத்திற்கு இரு முறையாவது இந்த கொழுப்பு மிக்க மீன்களை உண்பது நல்லது. தீப்புண் மற்றும் உடல் வலிகளை இவை போக்க வல்லது.


பூண்டு இது ஒரு அருமையான மூலிகை மருந்தாகும். காய்ச்சல், வாயுத் தொல்லை உள்ளிட்ட பல உபாதைகளை விரட்டும் திறன் கொண்டது. பல உணவுகளுடனும் இதைச் சேர்த்து சாப்பிடலாம். அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம்.


துளசி துளசியும் ஒரு ஈடு இணையற்ற மூலிகை மருந்து தான். வாய்ப்புண், நாக்கு, பல் ஈறுகள், உதடுகள், வாயின் உட்புறம் ஏற்படும் மவுத் அல்சர் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். மேலும் இந்த இலைகளை எடுத்து அடிக்கடி வாயில் போட்டு மென்று தின்றால், வாய் துர்நாற்றம் நீங்கும்.


க்ரான்பெர்ரி/குருதிநெல்லி குருதிநெல்லியை ஜுஸ் போட்டு சாப்பிட்டால், சிறுநீரக உபாதைகள் அனைத்துக்கும் நல்ல பலன் கொடுக்கும்.


அஸ்பாரகஸ் ஜெர்டு என்று பொதுவாக அழைக்கப்படும் வாயு சம்பந்தமான வியாதிக்கு அஸ்பாரகஸ் ஒரு நல்ல மருந்தாகும். இது நம் உடலில் அமிலம் மற்றும் அல்கலைன் ஆகியவற்றை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது

No comments:

Post a Comment